மேலும் அறிய

TN 10th Exam 2023: 10ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு கேள்விகளில் பிழைகள்; கூடுதல் மதிப்பெண்கள் வழங்க ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் 3 கேள்விகளுக்கு முறையான தலைப்புகள் வழங்கப்படவில்லை என்பதால் அவற்றுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 

10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் 3 கேள்விகளுக்கு முறையான தலைப்புகள் வழங்கப்படவில்லை என்றும் மேலும் சில குளறுபடிகள் இருப்பதாலும் அவற்றுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 

மாநிலம் முழுவதும் ஏப்ரல் 6ஆம் தேதி 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கியது. முதல் நாளில் தமிழ் பாடத்துக்குத் தேர்வு நடைபெற்ற நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. 12,800 பள்ளிகளில் உள்ள 3,986 தேர்வு மையங்களில், சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதி வருகின்றனர். நாளை (ஏப்ரல் 12ஆம் தேதி) கணக்குப் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. 

இதற்கிடையே ஆங்கிலப் பாடத்தில் வழக்கமாக 1,2,3 ஆகிய கேள்விகள் SYNONYMS (அருஞ்சொல் பொருள்) ஆகவும்  4,5,6 ஆகியவை ANTONYMS (எதிர்ச் சொல்) ஆகவும் கேட்கப்படும். ஆனால் இன்று கேட்கப்பட்ட 4,5,6 ஆகிய கேள்விகளுக்கு மேலே, ANTONYMS என்று அச்சிடப்படவில்லை. இதனால் அருஞ்சொற் பொருளை எழுத வேண்டுமா அல்லது எதிர்ச் சொல்லை எழுத வேண்டுமா என்று மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

இதனால், 4, 5, 6 வினாக்களுக்கு பதில் எழுத முயற்சித்த அனைவருக்கும் 3 மதிப்பெண்கள் (GRACE MARKS) வழங்கப்பட வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

குழப்பத்துக்கு ஆளான மாணவர்கள்

அதேபோல தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் கூறும்போது, ''பகுதி 4, வினா எண் 28-ல் சாலை வழித்தடத்தில், செல்லக்கூடிய வழியில் அதை அடைப்பது போன்ற கோடு ஒன்று இருக்கிறது. ஆகவே மாணவர்கள் எப்படி பதிலளிக்க முடியும் என்று தெரியாமல் குழப்பத்துக்கு ஆளாகினர்'' என்று தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கூறும்போது, ’’41ஆவது கேள்வியில்‌ அரசு மாதிரி வினாத்தாள்‌ மற்றும்‌ நடைபெற்ற திருப்புதல்‌ தேர்வுகளில்‌ Notice writing என்று கேட்டுவிட்டு, பொதுத்தேர்வில்‌ Report Writing கேட்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட வினாக்கள்‌ மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வினாத்தாளில்‌ பிழையை கருத்தில்‌ கொண்டு அனைத்து மாணவர்களுக்கும்‌ உரிய மதிப்பெண்‌ அளித்து மாணவர்‌ நலன்‌ காக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளது. 

12ஆம் வகுப்பு வினாத்தாள் சர்ச்சை

ஏற்கனவே  12ஆம் வகுப்பு கணிதம் மற்றும் கணினி அறிவியல் வினாத்தாள் வடிவமமைப்பிலும் பல தவறுகள் இருந்தன. இதை அடுத்து பிளஸ் 2 பொதுத் தேர்வு கணிதப் பாடத்தில் கேள்வி எண் 47(b)-க்கு மாணவர்கள் பதிலளிக்க முயற்சித்து இருந்தாலே போதும். அதற்கு 5  மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், 10ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத் தேர்வில் குழப்பமாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் எழுத முயற்சித்த அனைவருக்கும் 3 மதிப்பெண்கள் (GRACE MARKS) வழங்கப்பட வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

விருதுநகர் சிறுபான்மையினருக்கு திறன் பயிற்சி: அரசு சான்றிதழ், உதவித்தொகை!
விருதுநகர் சிறுபான்மையினருக்கு திறன் பயிற்சி: அரசு சான்றிதழ், உதவித்தொகை!
டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவுக்கு குட்பை சொல்லும் இந்திய மாணவர்கள்! 9% சரிந்த சேர்க்கை!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
School Holiday: ஜாலியோ ஜாலி! டிசம்பர் 3-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. ஆனால் சின்ன ட்விஸ்ட் இருக்கு!
"இதான் உண்மையான கல்வி" - குறைதீர்ப்புக் கூட்டத்தைப் பார்க்க வந்த மாணவர்களை அதிகாரிகளாக மாற்றிய டி.ஆர்.ஓ!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அல்ரெடி அன்பில் மகேஷ், கே.என்.நேரு.. இப்போ துரைமுருகன்..! அடுத்தடுத்து சிக்கும் முக்கிய தலைகள்..! நெருக்கடியில் திமுக
அல்ரெடி அன்பில் மகேஷ், கே.என்.நேரு.. இப்போ துரைமுருகன்..! அடுத்தடுத்து சிக்கும் முக்கிய தலைகள்..! நெருக்கடியில் திமுக
Gold Rate Today: தாறுமாறாக குறையும் தங்கம்! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? விலை குறைய இதுதான் காரணமா?
Gold Rate Today: தாறுமாறாக குறையும் தங்கம்! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? விலை குறைய இதுதான் காரணமா?
Governor RV Arlekar: டெல்லி பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய ஆளுநர்! திடீரென மருத்துவமனையில் அனுமதி!
Governor RV Arlekar: டெல்லி பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய ஆளுநர்! திடீரென மருத்துவமனையில் அனுமதி!
School Holiday: ருத்ர தாண்டவம் ஆடப்போகும் அக்வான் புயல்! 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
School Holiday: ருத்ர தாண்டவம் ஆடப்போகும் அக்வான் புயல்! 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத்தொகையில் 50% பயனாளிகள் நீக்கமா? தமிழக அரசு கொடுத்த பரபரப்பு விளக்கம்!
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத்தொகையில் 50% பயனாளிகள் நீக்கமா? தமிழக அரசு கொடுத்த பரபரப்பு விளக்கம்!
"ஆதார் கார்டு முகவரியால் அம்பலமான வழக்கறிஞரின் லீலைகள்" பெண்ணிடம் ரூ.21 லட்சம் அபேஸ்
UP Assembly Election:
UP Assembly Election: "100 தொகுதியா..? முடியவே.. முடியாது.." காங்கிரசிடம் கறாராக பேசிய அகிலேஷ் யாதவ்!
"கொடியசைக்கச் சொன்னால் ஸ்டியரிங்கைப் பிடித்த எம்.எல்.ஏ!" ரீல்ஸ் மோகத்தால் ஏற்படும் அவலம்..
Embed widget