மேலும் அறிய

TN 10th 12th Exam: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒழுங்கீனம்: தேர்வை எழுதவே தடை- என்னென்ன விதிமுறைகள்?

ஒழுங்கீனச்‌ செயல்களில்‌ ஈடுபடும்‌ தேர்வர்களுக்கு அவர்கள்‌ புரியும்‌ குற்றத்திற்கு ஏற்ப தண்டனைகள்‌ அளிக்கப்படுவதால்‌ புரிந்துள்ள குற்றம்‌ குறித்து தெளிவாக அறிக்கை அனுப்புதல்‌ வேண்டும்‌.

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அரசுத் தேர்வுகள் இயக்ககம் பல்வேறு விதிமுறைகள், கடமைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டுள்ளது.

இதில் தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக, அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி இல்லை. அதேபோல தனியார் பள்ளி முதல்வர்களும் தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக பணியாற்றக் கூடாது, அதேபோல ஒழுங்கீனச்‌ செயலின்‌ தன்மையும்‌ மற்றும்‌ அது சார்ந்து கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளும்‌ பற்றிக் கூறப்பட்டுள்ளன.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

ஒழுங்கீனச்‌ செயல்களில்‌ ஈடுபடும்‌ தேர்வர்களுக்கு அவர்கள்‌ புரியும்‌ குற்றத்திற்கு ஏற்ப தண்டனைகள்‌ அளிக்கப்படுவதால்‌ புரிந்துள்ள குற்றம்‌ குறித்து தெளிவாக அறிக்கை அனுப்புதல்‌ வேண்டும்‌.

  1. துண்டுத்தாள்‌ வைத்திருத்தல்‌:

தேர்வர்கள்‌ துண்டுத்தாள்‌ / அச்சடித்த குறிப்புகள்‌ வைத்திருந்தது கண்டுபிடிக்கப்படும்‌போது, அன்னார்‌ துண்டுத்தாள்‌ மட்டுமே வைத்து இருந்தாரா அல்லது அதைப்‌ பார்த்து விடைத்தாளில்‌ விடைகள்‌ எழுதினாரா என்பதையும்‌தெளிவாகக்‌ குறிப்பிட வேண்டும்‌. தேர்வர் வாக்குமூலத்திலும்‌, அறைக்‌ கண்காணிப்பாளர்‌ வாக்குமூலத்திலும்‌, மைய முதன்மைக்‌ கண்காணிப்பாளர்‌ மற்றும்‌ துறை அலுவலர்‌ அறிக்கையிலும்‌, இதனை தெளிவாகக்‌ குறிப்பிடுதல்‌ வேண்டும்‌.

துண்டுத்தாளில்‌ பதிவெண்‌ குறிப்பிட்டுத்‌ தேர்வரின்‌ கையொப்பம்‌ பெறுதல்‌ வேண்டும்‌.

  1. துண்டுத்தாள்‌ வைத்திருந்து அதை பார்த்துத்‌ தேர்வெழுதும்போது பிடிபடுதல்‌:

தேர்வர்கள்‌ துண்டுத்தாள்‌ அல்லது அச்சடித்தக்‌ குறிப்புகள்‌ வைத்திருந்து அதை பார்த்து எழுதும்போது பிடிபட்டிருந்தால்‌ தேர்வர்‌ துண்டுத்தாள்களை பார்த்து விடைகளை விடைத்தாளில்‌ எழுதும்போது பிடிக்கப்பட்டார்‌ என தெளிவாக அறிக்கையில்‌ குறிப்பிட வேண்டும்‌. தேர்வர்‌ துண்டுத்தாளிலிருந்து விடைத்தாளில்‌ எழுதிய பகுதியை விடைத்தாளிலும்‌, துண்டுத்தாளிலும்‌ பச்சை / சிகப்பு நிற மையினால்‌ குறிப்பிட்டுக்‌ காட்ட வேண்டும்‌. தோவர்‌ மற்றும்‌ அறைக்‌ கண்காணிப்பாளர்‌ வாக்குமூலத்திலும்‌ துண்டுத்தாளை பார்த்து விடைகள்‌ எழுதும்போது பிடிக்கப்பட்டதாகக்‌ குறிப்பிட வேண்டும்‌. 

  1. விடைத்தாள்‌ பரிமாற்றம்‌ செய்து ஒழுங்கீனச்‌ செயலில்‌ ஈடுபடுதல்‌:

விடைத்தாள்‌ பரிமாற்றம்‌ செய்து ஒழுங்கீனச்‌ செயல்களில்‌ ஈடுபடுவது கடுங்குற்றமாகும்‌. தேர்வர்களுக்குள்‌ விடைத்தாள்‌ பரிமாற்றம்‌ செய்து தேர்வர்கள்‌ ஒழுங்கீனச்‌ செயல்களில்‌ ஈடுபடும்போது பிடிக்கப்பட்டால்‌ எந்தத்‌ தேர்வரின் விடைத்தாள்‌ மாற்றம்‌, எந்தத்‌ தோர்வரிடம்‌ இருந்தது எனத்‌ தெளிவாகக்‌ குறிப்பிட வேண்டும்‌. மாற்று விடைத்தாள்‌ கொண்டு தோ்வெழுதியபோது கண்டுபிடிக்கப்பட்ட தேர்வரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டது எனக்‌ குறிப்பிட்டு அறைக்கண்காணிப்பாளர்‌ கையொப்பமிட வேண்டும்‌. முதன்மைக்‌ கண்காணிப்பாளரும்‌, துறை அலுவலரும்‌ மேலொப்பம்‌ இட வேண்டும்‌.

  1. ஆள்மாறாட்டம்‌:

ஆள்மாறாட்டம்‌ செய்து தேர்வெழுதும்‌ ஒழுங்கீனச்‌ செயல்கள்‌ கண்டுபிடிக்கப்படும்‌போது காவல்துறையினருக்கு உடனடியாக புகார்‌ தெரிவித்து வழக்கு பதிவு செய்து அரசுத்‌ தோவுத்‌ துறைக்கு முதல்‌ தகவல்‌ அறிக்கையின்‌ நகலினை இணை இயக்குநர்‌ மேல்நிலை / பணியாளர்‌ அவர்களின்‌ பெயரிட்ட முகவரிக்கு அனுப்ப‌ வேண்டும்‌. தேர்வரின்‌ பதிவெண்‌, பெயர்‌, வீட்டு முகவரி, ஆள்மாறாட்டம்‌ செய்து தேர்வெழுதியவர்‌ பெயர்‌, வீட்டு முகவரி போன்ற தகவல்களுடன்‌ விரிவான அறிக்கை அனுப்ப வேண்டும்‌.

  1. தேர்வர்‌ இதர ஒழுங்கீனச்‌ செயல்களில்‌ ஈடுபடும்போது, அவர்கள்‌ ஈடுபட்ட ஒழுங்கீனச்‌ செயல்கள்‌ குறித்து விவரமாக அறிக்கை அனுப்புதல்‌ வேண்டும்‌.
  2. தேர்வு மையத்தில்‌ ஒழுங்கீனச்‌ செயல்களில்‌ ஈடுபட்ட தேர்வர்கள்‌ குறித்து அறிவிக்கப்பட வேண்டும்‌.


TN 10th 12th Exam: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒழுங்கீனம்: தேர்வை  எழுதவே தடை- என்னென்ன விதிமுறைகள்?


TN 10th 12th Exam: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒழுங்கீனம்: தேர்வை  எழுதவே தடை- என்னென்ன விதிமுறைகள்?


TN 10th 12th Exam: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒழுங்கீனம்: தேர்வை  எழுதவே தடை- என்னென்ன விதிமுறைகள்?


TN 10th 12th Exam: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒழுங்கீனம்: தேர்வை  எழுதவே தடை- என்னென்ன விதிமுறைகள்?

இவ்வறிக்கையின்‌ ஒரு நகலை பள்ளியில்‌ வைத்துக்‌ கொண்டு, ஒரு நகலை மற்ற ஆவணங்களுடன்‌ சம்பந்தப்பட்ட அரசுத்‌ தோ்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும்‌. பறக்கும்‌ படையினர்களால்‌ கண்டுபிடிக்கப்படும்‌ போது ஒரு நகல்‌ பறக்கும்‌ படையினருக்குக்‌ கொடுக்கப்பட வேண்டும்‌.

  1. தேர்வர்களின்‌ வாக்குமூலம்‌ தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலம்‌ தவிர பிற மொழிகளில்‌ இருப்பின்‌ (குறிப்பாக மலையாளம்‌, தெலுங்கு ஆகிய மொழிகள்‌) அதற்கான மொழி மாற்றம்‌ ஆங்கிலத்தில்‌ எழுதப்பட்டு, தேர்வு மைய முதன்மைக்‌ கண்காணிப்பாளரால்‌ மேலொப்பமிட்டு சம்பந்தப்பட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும்‌.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget