மேலும் அறிய

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: கல்லூரி மாணவர்கள் ஸ்கிரைப்களா? அதிர்ச்சியில் கல்வியாளர்கள்! ரத்து செய்யப்படுமா உத்தரவு?

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் தேர்வு எழுதும் ஸ்கிரைப் நியமனத்தில் கல்லூரி மாணவர்களைத் தவிர்க்க வேண்டும்- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.

மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் தேர்வு எழுதும் ஸ்கிரைப் நியமனம் சம்பந்தமாக அரசு தேர்வுத்துறை இயக்குனரின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்லூரி மாணவர்களும் தன்னார்வலர்களா?

மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் தேர்வு எழுதும் ஸ்கிரைப் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மேற்கொண்ட பணிக்கு மாறாக, கல்லூரியில் படிக்கும் மாணவர்களையும், தன்னார்வலர்களாகவும் நியமிக்க வேண்டுமென அரசு தேர்வுத்துறை இயக்குனரின் சுற்றறிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறும்போது, ’’பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில் கண் பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய்ப்பேச இயலாதோர், எதிர்பாராத விபத்தால் கை முறிவு ஏற்பட்டு தேர்வு எழுத இயலாதோர், மன நலம் குன்றியோர், டிஸ்லெக்சியா குறைபாடு உள்ளவர்கள், நரம்பியல் குறைபாடு உள்ள மாணவர்கள் தேர்வு எழுதும் போது சொல்வதை எழுதுபவர்கள் (ஸ்கிரைப்) நியமனம் செய்யப்படுவர்.

கல்லூரி 2ஆம் ஆண்டு மாணவர்களா?

அப்படி நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களாக இருப்பார்கள். தற்போது, அரசு தேர்வுத்துறை இயக்குனர், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 2026ம் ஆண்டு பொதுத் தேர்வில் சொல்வதை எழுதுபவர்களாக கல்லூரியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து, வருகின்ற திருப்புதல் தேர்விலும், மார்ச், ஏப்ரல் மாத பொதுத் தேர்விலும் நியமிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இது ஆசிரியர்கள் மத்தியிலும், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு பயிற்சியும் இல்லாமல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களையும், தன்னார்வலர்களையும் ஸ்கிரைப்பாக நியமிப்பது மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி பெறும் வாய்ப்பை மறுதலிக்கும் செயலாகும். மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் நன்றாக படித்துச் சொல்லும் போது, ஸ்கிரைப்பாக எழுதுபவர் சரியாக பிழை இல்லாமல் எழுதினால் மட்டுமே தேர்ச்சிப் பெற முடியும்.

வேறொருவரை நியமிப்பதா?

ஆனால், ஆசிரியர்களாக இல்லாமல் வேறொருவரை நியமித்தால் அவர்கள் பிழையோடு எழுதும் போது மதிப்பெண் குறைந்தும், தேர்ச்சிப் பெறாமலும் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். மேற்படி குறைபாடு உள்ள மாணவர்களை கையாள்வதற்கே உரிய பயிற்சி தேவை என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, அமைச்சர் இவ்விசயத்தில் உடனடியாக தலையிட்டு மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் கல்வி நலன்களை பாதுகாக்கும் வகையில் ஸ்கிரைப் சம்பந்தமாக எந்தவித பயிற்சியும் இல்லாத கல்லூரியில் படிக்கும் மாணவர்களையும், தன்னார்வலர்களையும் நியமிக்கும் வகையில் அரசு தேர்வுத்துறை இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவை உடனடியாக ரத்து செய்திடவும், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களையே ஸ்கிரைப்பாக நியமிக்கும் நடைமுறையை பின்பற்ற வேண்டும்’’ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TN Govt: லட்சம் லட்சமாக சம்பாதிக்க செம சான்ஸ்.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்.. டிசம்பர் 5 கடைசி நாள்!
TN Govt: லட்சம் லட்சமாக சம்பாதிக்க செம சான்ஸ்.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்.. டிசம்பர் 5 கடைசி நாள்!
முதலமைச்சருக்கு அழுத்தம்.. ஆளுநர் அர்லேகர் அவசர கடிதம் - என்ன காரணம்?
முதலமைச்சருக்கு அழுத்தம்.. ஆளுநர் அர்லேகர் அவசர கடிதம் - என்ன காரணம்?
TN Govt: கல்வித்தகுதி இல்லை..! ரூ.52,000 வரை ஊதியம் - அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அதிரடி- முழு விவரம்
கல்வித்தகுதி இல்லை..! ரூ.52,000 வரை ஊதியம் - அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அதிரடி- முழு விவரம்
College Student: கல்லூரி மாணவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.50,000 கல்வி உதவித்தொகை! என்னென்ன தகுதிகள்? விண்ணப்பிப்பது எப்படி?
College Student: கல்லூரி மாணவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.50,000 கல்வி உதவித்தொகை! என்னென்ன தகுதிகள்? விண்ணப்பிப்பது எப்படி?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் நாளை தீபம் ஏற்ற ஆணை - அதிரடி உத்தரவை பிறப்பித்த உச்சநீதிமன்றம்!
சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் வெளியான தீர்ப்பு - முழு விவரம் தெரியுமா?
சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் வெளியான தீர்ப்பு - முழு விவரம் தெரியுமா?
ஊழல் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி.. முதல்வர் விஜய்யை விளாசிய திமுக!
ஊழல் சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி.. முதல்வர் விஜய்யை விளாசிய திமுக!
“நீங்கள் வடிப்பது உண்மையான கண்ணீரா? முதலை கண்ணீரா?” - திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்
“நீங்கள் வடிப்பது உண்மையான கண்ணீரா? முதலை கண்ணீரா?” - திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காட்டம்
வசந்தம் கார்த்திகேயன் விவகாரம்;
வசந்தம் கார்த்திகேயன் விவகாரம்; "பெண்களை துச்சமாக நினைப்பதே திமுக மரபணு.." விளாசிய தவெக
ஏஐ மூலம் வக்கிரமாக சித்தரிப்பீங்களா? ஒருத்தரையும் விடமாட்டேன்.. தவெகவினருக்கு மேயர் பிரியா எச்சரிக்கை!
ஏஐ மூலம் வக்கிரமாக சித்தரிப்பீங்களா? ஒருத்தரையும் விடமாட்டேன்.. தவெகவினருக்கு மேயர் பிரியா எச்சரிக்கை!
CM Vijay: பெரம்பூர் தொகுதி விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பு.. முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி செய்து அதிரடி
CM Vijay: பெரம்பூர் தொகுதி விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பு.. முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி செய்து அதிரடி
TN By Election:
TN By Election: "அம்பாசமுத்திரம், பெருந்துறைக்கு மட்டும் இடைத்தேர்தல்.." நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு - அப்போ மற்ற 3 தொகுதிகள்?
Embed widget