மேலும் அறிய

Teachers Strike: டெட் ஆசிரியர்கள் சங்க போராட்டமும் வாபஸ்; ஆலோசனைக்குப் பிறகு முடிவு

போட்டித் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடங்கிய போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக டெட் ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

போட்டித் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடங்கிய போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக டெட் ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தால் ஆசிரியர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திமுக அரசு ஆட்சிக்கு வரும் முன்னர், தேர்தல் வாக்குறுதிகளாக, டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவது ரத்து செய்யப்படும், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. எனினும் இந்தக் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. 

மேற்குறிப்பிட்டதேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கோரி, சம்பந்தப்பட்ட ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் குதித்தன. குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம்,  ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.

இதில் டெட் ஆசிரியர்கள் சங்கம் சார்பில், 2013ஆம் ஆண்டு டெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெறுவதை ரத்து செய்ய வேண்டும். 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அரசாணை எண் 149ஐ ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு உடனடியாகப் பணி நியமனம் அளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 

அதேபோல் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் மற்றும் உண்ணாவிரதம் நடத்தி வந்தனர். மேலும் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது.

பலகட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மூவர் அடங்கிய குழு உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டார். 

ஆசிரியர்கள் கைது

எனினும் அரசின் அறிவிப்பில் திருப்தி இல்லை என்றுகூறி அனைத்து ஆசிரியர் சங்கங்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன. இந்நிலையில் திடீரென  இன்று அதிகாலை, ஆசிரியர்களைக் காவல்துறை கைது செய்தது. கைது செய்யப்பட்டு, எழும்பூர், புதுப்பேட்டை சமுதாய நலக் கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதற்கிடையே போராட்டத்தைத் தற்காலிகமாகத் திரும்பப் பெறுவதாக பகுதிநேர ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்தது. அமைச்சர் அன்பில் மகேஸின் உறுதிமொழியை ஏற்று போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாகவும், தேவைப்படும்போது அரசியல் கட்சித் தலைவர்களுடன் ஆதரவுடன் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். 

இந்த நிலையில் தங்கள் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக டெட் ஆசிரியர்கள் சங்கத்தினர், ஆலோசனைக்குப் பிறகு அறிவித்துள்ளனர். எனினும் இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IIT Madras: ஐஐடி சென்னையில் பிஎஸ் பட்டப்படிப்புகள்; மே 31 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
IIT Madras: ஐஐடி சென்னையில் பிஎஸ் பட்டப்படிப்புகள்; மே 31 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?
TN 12th Result 2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இவர்தான் முதல் மதிப்பெண்!
TN 12th Result 2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இவர்தான் முதல் மதிப்பெண்!
பிளஸ் 2 தேர்வில் 565 மார்க்! காஞ்சிபுரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி சாதனை!
பிளஸ் 2 தேர்வில் 565 மார்க்! காஞ்சிபுரம் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவி சாதனை!
TN 12th Exam: +2 தேர்வு முடிவு: தேர்ச்சியில் சரிந்த வட தமிழகம்- சிறப்புத் திட்டம் உருவாக்கக் கோரிக்கை!
TN 12th Exam: +2 தேர்வு முடிவு: தேர்ச்சியில் சரிந்த வட தமிழகம்- சிறப்புத் திட்டம் உருவாக்கக் கோரிக்கை!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK Clash: இரண்டாக உடைந்த அதிமுக; இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்; அடுத்த நகர்வு என்ன.?
இரண்டாக உடைந்த அதிமுக; இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்; அடுத்த நகர்வு என்ன.?
AIADMK: உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!
உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!
CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!
CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!
வறுமையில் வளர்ந்தாரா? சுத்தப்பொய் ! பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜயின் ஸ்கூல் மேட்
வறுமையில் வளர்ந்தாரா? சுத்தப்பொய் ! பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜயின் ஸ்கூல் மேட்
CM Vijay-Vaiko Meet: ’’விசிலுக்கு ஓட்டு போட்டாங்க’’ வீட்டு ஊழியர்களை அறிமுகம் செய்த துரை வைகோ- திருஷ்டி சுற்றிய விஜய்
CM Vijay-Vaiko Meet: ’’விசிலுக்கு ஓட்டு போட்டாங்க’’ வீட்டு ஊழியர்களை அறிமுகம் செய்த துரை வைகோ- திருஷ்டி சுற்றிய விஜய்
புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி' சகாப்தம்: மே 13-ல் பதவியேற்பு விழா... அமைச்சரவை பட்டியல் தயார் - முழு விவரம் உள்ளே!
புதுச்சேரியில் மீண்டும் 'ரங்கசாமி' சகாப்தம்: மே 13-ல் பதவியேற்பு விழா... அமைச்சரவை பட்டியல் தயார் - முழு விவரம் உள்ளே!
Vijay Fitness: 51 வயசிலும் அசத்தல் ஃபிட்; சிஎம் விஜயின் தினசரி மெனு தெரியுமா? பிரியாணி டூ சர்க்கரைப்பொங்கல்!
Vijay Fitness: 51 வயசிலும் அசத்தல் ஃபிட்; சிஎம் விஜயின் தினசரி மெனு தெரியுமா? பிரியாணி டூ சர்க்கரைப்பொங்கல்!
CM Vijay Meets MK Stalin: ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்; 5 நிமிட சந்திப்பில் நடந்தது என்ன.?
ஸ்டாலின் வீட்டிற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்; 5 நிமிட சந்திப்பில் நடந்தது என்ன.?
Embed widget