மேலும் அறிய

CM Stalin: 6 முதல் 10ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கும் காலை உணவளிக்கும் ஆசிரியர்கள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

ஆறாம்‌ வகுப்பு முதல்‌ 10-ஆம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவ, மாணவியரில்‌ காலை உணவு சாப்பிடாமல்‌ வந்தவர்களுக்கு ஆசிரியர்கள் அந்த உணவை வழங்குவதாக  முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தொடக்கப்பள்ளி மாணவர்கள்‌ சிற்றுண்டி உண்ட பின்‌, மீதமிருக்கும்‌ உணவு வீணாவதில்லை என்றும் ஆறாம்‌ வகுப்பு முதல்‌ 10-ஆம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவ, மாணவியரில்‌ யார்‌ காலை உணவு சாப்பிடாமல்‌ வந்துள்ளனர்‌ என்பதைக்‌ கண்டறிந்து, அவர்களுக்கு ஆசிரியர்கள் அந்த உணவை வழங்குவதாகவும்  தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்‌ பதிவு: 

அன்றாடப்‌ பணிச் சுமை குறைப்பு

’’அடித்தட்டு மக்களின்‌ ஏற்றம்‌, எல்லோருக்கும்‌ எல்லாம்‌ என்பதைக் குறிக்கோளாகக்‌ கொண்டு செயல்பட்டு வரும்‌ நமது திராவிட மாடல்‌ அரசு, கல்வியும்‌ சுகாதாரமும்‌ இரு கண்கள்‌ எனப்‌ போற்றி முன்னுரிமை அளித்து திட்டங்களைச்‌ செயல்படுத்தி வருகிறது. ஒரு குழந்தைகூட பள்ளிக்குச்‌ செல்வதை நிறுத்திவிடக்கூடாது, போதிக்கும்‌ வேளையில்‌ ஊன்றிப்‌ பாடங்களைக்‌ கவனிக்க வேண்டும்‌ என்ற எண்ணத்தோடு. நாட்டுக்கே முன்னோடியாக, கடும்‌ நிதி நெருக்கடிக்கு இடையிலும்‌ செயல்படுத்தி வரும்‌ முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌ நாட்டு மக்களின்‌ பாராட்டைப்‌ பெற்றிருக்கிறது. வேலைக்குச்‌ செல்லும்‌ தாய்மார்களின்‌ அன்றாடப்‌ பணிச் சுமையைக்‌ குறைத்து இருக்கிறது.

மாணவச்‌ செல்வங்கள்‌ படிப்பைப்‌ பாதியில்‌ கைவிடுவதை இந்தத்‌ திட்டம்‌ தடுத்து நிறுத்தியது மட்டுமன்றி, பள்ளிக்கூடங்களிலும் சமுதாயத்தில்‌ பல நற்பயன்களுக்கு வித்திட்டு வருகிறது.

10ஆம் வகுப்பு வரை காலை உணவு

தொடக்கப் பள்ளி மாணவர்கள்‌ சிற்றுண்டி உண்ட பின்‌, மீதமிருக்கும்‌ உணவு வீணாவதில்லை; மாறாக, ஆறாம்‌ வகுப்பு முதல்‌ 10-ஆம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவ, மாணவியரில்‌ யார்‌ காலை உணவு சாப்பிடாமல்‌ வந்துள்ளனர்‌ என்பதைக்‌ கண்டறிந்து, அவர்களுக்கு அந்த உணவை வழங்குகின்றனர்‌ என்ற செய்தி அறிந்து இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன்‌.

பகிர்ந்தளிக்கும்‌ ஆசிரியர்கள்‌ பாராட்டுக்குரியவர்கள்‌

காலையில்‌ வேலைக்குச்‌ செல்லும்‌ தனது தாயால்‌ சமைக்க முடியவில்லை என்பதால்‌ பசியோடு பள்ளிக்கு வந்த ஒன்பதாம்‌ வகுப்பு மாணவன்‌ ஒருவன்‌, பள்ளியில்‌ பகிர்ந்தளிக்கப்படும்‌ சிற்றுண்டியை உண்பதாகக்‌ கூறியதைப்‌ படிக்கும்போது நெகிழ்ந்தேன்‌. அவரைப்‌ போல, பசியோடு வரும்‌ பல மாணவர்களும்‌ உணவருந்திய பின்‌ வகுப்புக்குச்‌ செல்கிறார்கள்‌. இதைக்‌ கண்டு, ஒரு நல்ல நோக்கத்தோடு செயல்படுத்தப்படும்‌ திட்டம்‌, மேலும்‌ பற்பல சமூக நன்மைகளுக்கு வித்திடுகிறது நிறைவைத்‌ தருகிறது. உணவை வீணாக்காமல்‌, பகிர்ந்தளிக்கும்‌ ஆசிரியர்கள்‌ பாராட்டுக்குரியவர்கள்‌.

எத்தனைக்‌ கடினமான சூழ்நிலை இருந்தாலும்‌ நம்‌ வருங்காலத்‌ தலைமுறைக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துத்‌ தர வேண்டும்‌ என்ற எனது கனவு, கண்‌ முன்னே பலன்‌ தரும்போது எற்படும்‌ மகிழ்ச்சியைச்‌ சொல்லவா வேண்டும்‌?’’

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
’மாணவர்களின் தொழில் முயற்சிகளை மேற்கொள்ள 10 கோடி ரூபாய்’ தரும் நிறுவனம் இதுதான்..!
’மாணவர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முயற்சி’ 10 கோடி ரூபாய் தரும் நிறுவனம்..
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
Neer Ezhil Palli: அசத்தல்.. நீர் பாதுகாப்பு, பசுமைப் புரட்சிக்கு ’’நீர் எழில் பள்ளி’’ அமைச்சர் ராஜ்மோகன் அடிக்கல்!
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?
‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள்..!
Car Theft : ’கார் திருடர்களின் முதல் டார்கெட்’ இந்தியாவில் அதிகம் திருடப்படும் டாப் 5 கார்கள்! - இந்த பட்டியலில் உங்க கார் இருக்கா?
’கார் திருடர்களின் முதல் டார்கெட்’ இந்தியாவில் அதிகம் திருடப்படும் டாப் 5 கார்கள்!
மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேடங்களிலும் நடித்த ஒரே நடிகை..யார் தெரியுமா?
மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேடங்களிலும் நடித்த ஒரே நடிகை..யார் தெரியுமா?
US Iran War: என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
Embed widget