மேலும் அறிய

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு எதற்கு? ஆசிரியர்கள் குழப்பம்- சட்டசபையில் சிறப்பு சட்டமியற்ற கோரிக்கை!

ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் எதிர்த்த நிலையில், பல்வேறு மாநில அரசுகளும்  உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுக்கள் அளித்துள்ளன. ஆசிரியர்களிடையே குழப்பமும்

தகுதித் தேர்வால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்காக சிறப்பு சட்டத்தை இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் '5 ஆண்டுகளில் ஓய்வு பெறக்கூடிய ஆசிரியர்களை தவிர, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைத்து ஆசிரியர்களும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் முடியும்" என்றது.

இதன் மூலம் 2011 தகுதித் தேர்வுக்கு முன்பாக பதிவு மூப்பின் அடிப்படையில்  பணியில் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மை, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 2 லட்சம் ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் எதிர்த்த நிலையில், பல்வேறு மாநில அரசுகளும்  உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுக்கள் அளித்துள்ளன. 

சீராய்வு மனுத் தாக்கல்

இதேபோல், தமிழக அரசும், 'தகுதித் தேர்வு விவகாரத்தை பொருத்தவரை அது மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்கு உட்பட்டது. பல ஆண்டுகளாக ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் இந்த தீர்ப்பினால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும்' என உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது. இந்த சீராய்வு மனு இம்மாதம் பிற்பகுதியில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் 2026-ஆம் ஆண்டு ஜனவரி, ஜூலை, டிசம்பர் மாதங்கள் என 3 முறை சிறப்புத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. தகுதித் தேர்வு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை மறு பறுசீலனை செய்வதற்காக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு தகுதித் தேர்வு நடத்துவதற்காக அரசாணை வெளியிட்டுள்ளது முரண்பாடாக உள்ளது.

மூத்த ஆசிரியர்களை பாதுகாக்க விரைவில் சட்ட திருத்தம்

தமிழக அரசின் இந்த அறிவிப்பால் லட்சக்கணக்கான ஆசிரியர்களிடையே குழப்பமும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. மேலும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 'உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இருந்து மூத்த ஆசிரியர்களை பாதுகாக்க விரைவில் சட்ட திருத்தம் கொண்டுவரப்படும்' என்று அறிவித்துள்ளார்.

இது நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு நிம்மதியை தந்த நிலையில் தமிழக அரசின் இந்த அரசாணை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகுதித் தேர்வு நடத்த முற்படுவதா?

எனவே, மத்திய கல்வி அமைச்சகத்திடம் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டையும், 2 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலத்தையும் விளக்கிக் கூறி, மத்திய அரசும் உச்ச நீதிமன்றத்தில் வாதாட செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, ஒரு பக்கம் சீராய்வு மனுத் தாக்கல் செய்துவிட்டு, இன்னொரு பக்கம் தகுதித் தேர்வு நடத்த முற்படுவதை கைவிட வேண்டும்.

அதேபோல், தகுதித் தேர்வு வருவதற்கு முன்பாக, 2011 நவம்பர் 15-க்கு முன், பணியில் சேர்ந்த மூத்த தகுதிக்கான் பருவம் முடித்த ஆசிரியர்களை தகுதித் தேர்வில் இருந்து விடுவித்து பாதுகாக்கும் சிறப்பு சட்டத்தை தற்போது நடக்கும் சட்டசபை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
குழந்தையுடன் வந்த பல்லவி MLA.. அட்வைஸ் செய்த கார்த்தி சிதம்பரம்.. சண்டைக்கு சென்ற மோகன் ஜி!
Embed widget