மேலும் அறிய

CEETA PG 2023: எம்இ, எம்டெக் உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கு புது நுழைவுத் தேர்வு; விண்ணப்பிப்பது எப்படி? விவரம்

எம்இ, எம்டெக் உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கு புதிய நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

எம்இ, எம்டெக் உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கு புதிய நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) எழுத வேண்டும். அதாவது டான்செட் (TANCET - Tamil Nadu Common Entrance Test) தேர்வெழுதி, தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. 

முன்னதாக எம்இ, எம்டெக், எம்ஆர்க் எனப்படும்  முதுகலை பொறியியல், முதுகலை தொழில்நுட்பம், முதுகலை கட்டிடவியல் மற்றும் முதுகலை திட்டமிடல் (M.E. M.TECH., M.ARCH., M.PLAN) படிப்புகளுக்கு இதுநாள் வரை டான்செட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஆண்டில் இருந்து சிஇஇடிஏ எனப்படும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை (CEETA- COMMON ENGINEERING ENTRANCE TEST AND ADMISSIONS) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் B.E, B.Tech., Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது.

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளை எழுத விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. டான்செட் தேர்வுக்கும்  சிஇஇடிஏ தேர்வுக்கும் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கு மாணவர்கள் பிப்ரவரி 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2022 டான்செட் தேர்வு

கடந்த ஆண்டு டான்செட் தேர்வு மே 14ஆம் தேதி நடைபெற்றது. குறிப்பாக எம்சிஏ படிப்பிற்கு மே 14ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெற்றது. எம்பிஏ படிப்பிற்கு மே 14-ஆம் தேதி மதியம் 2:30 முதல் மாலை 4:30  மணி வரை தேர்வுகள் நடைபெற்றன. முதுகலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மே 15 அன்று நடைபெற்றது.

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ள https://tancet.annauniv.edu/tancet/Procedure%20%20for%20Online%20Registration%202023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

2023 டான்செட் தேர்வு எப்போது?

எம்பிஏ படிப்புகளுக்கான தேர்வு மார்ச் 25ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெற உள்ளது. எம்சிஏ படிப்புகளுக்கான தேர்வு மார்ச் 25ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. 

CEETA தேர்வு 

எம்இ, எம்டெக், எம்ஆர்க் படிப்புகளுக்கு நடத்தப்பட உள்ள சிஇஇடிஏ தேர்வு அடுத்த நாள் அதாவது மார்ச் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. குறிப்பாக காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது. 

தேர்வுக் கட்டணம், தகுதி என புதிய சிஇஇடிஏ நுழைவுத் தேர்வு குறித்து முழுமையாக அறிந்துகொள்ள: https://tancet.annauniv.edu/tancet/ALL.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

கூடுதல் தகவல்களுக்கு: 044-22358289 / 044-22358314 (10.00 AM to 6.00 PM)

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைக்குமா? டெட் தேர்வுதேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக குறைக்க வலியுறுத்தல்!
ஆசிரியர்களுக்கு நிம்மதி கிடைக்குமா? டெட் தேர்வுதேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக குறைக்க வலியுறுத்தல்!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலை.யில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!
Central Govt:
"உயர்கல்விக்கு ஆபத்து" ஒட்டுமொத்தமாக கைப்பற்ற மத்திய அரசு தீவிரம்- விசிக எம்.பி. எச்சரிக்கை

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
Farmer Slaps Officer |அரசு அலுவலகத்தில் அதிகாரியை செருப்பால் அடித்த விவசாயி!”எவ்ளோ நாள் WAIT பண்றது”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
M. R. Vijayabhaskar : அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
Vaiko: ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?
ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
8 கோடி சம்பள பாக்கி...பராசக்தி தயாரிப்பாளருக்கு எதிராக சுதா கொங்காரா வழக்கு
TR Balu: ஆத்தி, எதுக்கு வம்பு..! வாண்டட் ஆக வழக்கை திரும்பப் பெற்ற டி.ஆர். பாலு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
ஆத்தி, எதுக்கு வம்பு..! வாண்டட் ஆக வழக்கை திரும்பப் பெற்ற டி.ஆர். பாலு - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
Maruti Alto k10: பல்சர் பைக் விலையில் முதியவர்களுக்கான கார்.. 35KM மைலேஜ், ரூ.6,000 EMI, முழு திட்ட விவரங்கள்
பல்சர் பைக் விலையில் முதியவர்களுக்கான கார்.. 35KM மைலேஜ், ரூ.6,000 EMI, முழு திட்ட விவரங்கள்
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
Mylswamy Annadurai: கலைத்துப்போட்ட அரசு; பள்ளி பாடத்திட்ட குழு மாற்றி அமைப்பு! மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் குழு!
Central Govt:
"உயர்கல்விக்கு ஆபத்து" ஒட்டுமொத்தமாக கைப்பற்ற மத்திய அரசு தீவிரம்- விசிக எம்.பி. எச்சரிக்கை
ADMK MLA JOIN TVK : அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
அடுத்து பதவி விலக காத்திருக்கும் அதிமுக எம்எல்ஏக்கள் யார்.? இவ்வளவு பெரிய லிஸ்டா.!! இபிஎஸ் ஷாக்- விஜய் குஷி
Embed widget