Syllabus: 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, முழு பாடங்களும்.. பள்ளிக் கல்வித்துறை முக்கிய உத்தரவு
பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களையும் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களையும் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாகக் கடந்த கல்வி ஆண்டில் 11 & 12-ம் வகுப்புகளுக்கு 35%, 10-ம் வகுப்புக்கு 39% மற்றும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை 50% என்று பாடங்கள் குறைக்கப்பட்டிருந்தன.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் சுமார் ஒன்றரை வருடங்களாகப் பள்ளிகள் செயல்படாமல், மூடப்பட்டு இருந்தன. இந்த நிலையில் தொற்று குறைந்த பிறகு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்குப் பள்ளிகளை திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன.
பாடத்திட்டம் குறைப்பு
குறைக்கப்பட்டபிறகு 1-ஆம் வகுப்புக்கு 50 சதவிகிதமும், 2-ஆம் வகுப்புக்கு 50 சதவிகிதமும், 3-ஆம் வகுப்புக்கு 51 சதவிகிதமும், 4-ஆம் வகுப்புக்கு 51 சதவிகிதமும், 5-ஆம் வகுப்புக்கு 52 சதவிகிதமும், 6-ஆம் வகுப்புக்கு 53 சதவிகிதமும், 7-ஆம் வகுப்புக்கு 54 சதவிகிதமும், 8-ஆம் வகுப்புக்கு 54 சதவிகிதமும், 9-ஆம் வகுப்புக்கு 62 சதவிகிதமும், 10-ஆம் வகுப்புக்கு 61 சதவிகிதமும், 11-ஆம் வகுப்புக்கு 60-65 சதவிகிதமும், 12-ஆம் வகுப்புக்கு 60-65 சதவிகிதமும் பாடத்திட்டம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் எனில், மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை 50 சதவீதமும், 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள பாடத்திட்டத்தில் 35 சதவீத பாடப்பகுதிகளும் குறைக்கப்பட்டன.
முன்னுரிமை பாடத்திட்டத்தில் கேள்விகள்
2021- 2022 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு, மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் மே மாதத்தில் நடைபெற்றன. இந்தத் தேர்விற்கான வினாக்கள் 2021- 2022ஆம் கல்வியாண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத்திட்டத்தில் ( Priority Syllabus-ல் குறைக்கப்பட்ட) உள்ள பாடங்கள் முழுவதில் இருந்தும் கேட்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகள் சரியான நேரத்தில் திறக்கப்பட்டுள்ளன. இதனால், பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களையும் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டுகளில் குறைக்கப்பட்ட பாடங்களையும் சேர்த்து இந்த ஆண்டில் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்