தினமும் ரூ.750 சம்பளத்துடன் தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை; ஆகஸ்ட் 25-க்குள் விண்ணப்பிக்கவும்!
தமிழ்நாட்டில் உள்ள எந்த ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் 18-57 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்து வழங்குபவர் மற்றும் சிகிச்சை உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 25 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டுவருகிறது. இதில் காலியாக உள்ள மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர் என தற்காலிக பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் ஆப்லைன் மூலம் வருகின்ற ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் மெரிட் முறையில் தேர்வு செய்யப்பட்டு நபர்கள் தமிழகத்தில் உள்ள எந்த ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பணியமர்த்தப்படுவார்கள். 18-57 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் இப்பதவிகளுக்கான கல்வித்தகுதி மற்றும் சம்பள விபரங்கள் போன்றவற்றை இங்கு அறிந்துகொள்வோம்.
மருந்து வழங்குபவர்( Dispenser) பணிக்கான தகுதிகள்:
தமிழகம் முழுவதும் 555 மருந்து வழங்குபவர் பணியிடங்கள் காலியாக உள்ளது என தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு Dispenser Diploma in Pharmacy (Siddha/ Unani/ Ayurvedha / Homeopathy) / Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamil Nadu Dispenser Diploma in Pharmacy (Siddha/ Unani/ Ayurvedha / Homeopathy) / போன்ற கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் “Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106 என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை ஆகஸ்ட் 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு வேலை வாய்ப்பில் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட தகவல்களை https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21082957.pdf என்ற பக்கத்தில் தெரிந்துக்கொள்ளலாம். வாரத்தில் 6 நாள்கள் என தினமும் 6 மணி நேரம் வேலை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளொன்றுக்கு ரூ.750 சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சிகிச்சை உதவியாளர் ( Therapeutic Assistant) பணிக்கான தகுதிகள்:
தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை உதவியாளர் பணிக்கு Diploma in Integrated Pharmacy conducted by the Government of Tamil Nadu Therapeutic Assistant (Male) Diploma in Nursing Therapy conducted by the Government of Tamil Nadu Therapeutic Assistant (Female) Diploma in Nursing Therapy conducted by the Government of Tamil Nadu போன்ற கல்வித்தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். எனவே இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை “Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106 என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை ஆகஸ்ட் 25 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்குமாறு வேலை வாய்ப்பில் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21082956.pdf என்ற பக்கத்தில் தெரிந்துக்கொள்ளலாம். வாரத்தில் 6 நாள்கள் என தினமும் 6 மணி நேரம் வேலை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளொன்றுக்கு ரூ.375/-சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.