மேலும் அறிய

Tamil Nadu School Education | இ-சேவை மையங்கள் மூலம் 23 சான்றிதழ்களைப் பெறலாம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு விவரம்..

இ-சேவை மையங்கள் மூலம் 23 சான்றிதழ்களைப் பெறலாம் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இ-சேவை மையங்கள் மூலம் 23 சான்றிதழ்களைப் பெறலாம் என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பு:

’’2021-2022 ஆம்‌ ஆண்டு பள்ளிக்‌ கல்வித் துறையின்‌ மானியக்‌ கோரிக்கையின்‌போது பள்ளிக்‌ கல்வித் துறை அமைச்சரால்‌ ஏனையவற்றுடன்‌ வரிசை எண்‌-48ல்‌ “மின்னணு சேவைகள்‌" என்ற தலைப்பில்‌, “பள்ளிக்‌ கல்வித்‌ துறையில்‌ பொது மக்கள்‌ மற்றும்‌ மாணவர்களுக்கு வழங்கப்படும்‌ சான்றுகளான நன்னடத்தைச்‌ சான்று, ஆளறிசான்று, தமிழ்‌ வழியில்‌ படித்ததற்கான சான்று உள்ளிட்ட அனைத்துச்‌ சான்றுகளும்‌ அவர்தம்‌ இல்லத்திற்கு அருகில்‌ உள்ள அரசு பொது சேவை மையங்களின்‌ வாயிலாக விண்ணப்பித்து காலவிரயமின்றிப்‌ பெற்றுக்‌ கொள்ளும்‌ திட்டம்‌ செயல்படுத்தப்படும்‌” என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பள்ளிக்‌ கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பினை செயல்படுத்தும்‌ விதமாக பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌,‌ பள்ளிக்‌ கல்வித்‌துறையில்‌ உள்ள பல்வேறு இயக்ககங்களின்‌ வாயிலாக இரண்டாம்படி மாற்றுச்‌ சான்றிதழ்‌, மதிப்பெண்‌ பட்டியல்‌ நகல்‌, புலப்பெயர்வு சான்றிதழ்‌ (Migration certificate), கல்வி இணைச்‌ சான்றிதழ்‌ (Equivalence certificate), தமிழ்‌ வழியில்‌ கல்வி பயின்றமைக்கான சான்றிதழ்‌ போன்ற பல்வேறு வகையான சான்றிதழ்களை, தமிழ்நாடு முழுவதும்‌ உள்ள பள்ளிக்‌ கல்வித்‌ துறையைச்‌ சார்ந்த பல்வேறு அரசுப்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ அரசு அலுவலகங்கள்‌ வாயிலாக மாணவர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ பெற்று வருகின்றனர்‌ என்றும்‌, இச்சேவைகள்‌ சிறப்பான முறையில்‌ அளிக்கப்பட்டு வந்தாலும்‌, மாணவர்கள்‌, பொதுமக்கள்‌ சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கே நேரில்‌ சென்று பெற்று வரும்‌ நிலை இருந்து வருகிறது என்றும்‌ இதனால்‌ சம்பந்தப்பட்ட நபருக்குக் கால விரையம்‌ மற்றும்‌ பண விரையம்‌ ஏற்படுவதுடன்‌, அரசு அலுவலகங்களுக்கும்‌ பணிச் சுமை கூடி வருகிறது என்று தெரிவித்துள்ளார்‌.

மேலும்‌, பள்ளிக்‌ கல்வித் துறையின்‌ பல்வேறு இயக்ககங்களின்‌ வாயிலாகப் பின்வரும்‌ சேவைகள்‌ மாணவர்களுக்கும்‌ பொது மக்களுக்கும்‌ அளிக்கப்பட்டு வருகின்றது எனப் பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌ தெரிவித்துள்ளார்.

Tamil Nadu School Education | இ-சேவை மையங்கள் மூலம் 23 சான்றிதழ்களைப் பெறலாம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு விவரம்..

Tamil Nadu School Education | இ-சேவை மையங்கள் மூலம் 23 சான்றிதழ்களைப் பெறலாம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு விவரம்..

Tamil Nadu School Education | இ-சேவை மையங்கள் மூலம் 23 சான்றிதழ்களைப் பெறலாம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு விவரம்..

Tamil Nadu School Education | இ-சேவை மையங்கள் மூலம் 23 சான்றிதழ்களைப் பெறலாம்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு விவரம்..

தமிழ்நாடு மின்‌ ஆளுமை முகமை செயல்படுத்திவரும்‌ மின்‌ மாவட்டத் திட்டத்தின்‌ ஒரு பகுதியாக அரசு கேபிள்‌ டி.வி நிறுவனம்‌ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள்‌ நடத்திவரும்‌ அரசு இ- சேவை மையங்களின்‌ வாயிலாக மேற்கூறிய சேவைகளை கிடைக்கச்‌ செய்யலாம்‌ என்றும்‌, வருங்காலத்தில்‌ கண்டறியப்படும்‌ சேவைகளையும்‌ அது போன்றே செயல்படுத்தலாம்‌ என்றும்‌ பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌ தெரிவித்துள்ளார்‌.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 23 விதமான சான்றுகள்‌ அனைத்தும்‌ பொது மக்கள்‌ மற்றும்‌ மாணவர்கள்‌, அவர்தம்‌ இல்லத்திற்கு அருகிலுள்ள அரசு சேவை மையங்களின்‌ வாயிலாக விண்ணப்பித்து காலவிரயமின்றிப் பெற்றுக்‌ கொள்ளவும்‌, மேலும்‌ வருங்காலங்களில்‌ புதியதாகக் கண்டறியப்படும்‌ சேவைகளையும்‌ மின்‌ மாவட்டத் திட்டத்தின்‌ ஒரு பகுதியாக தமிழ்நாடு மின்‌ ஆளுமை முகமை வாயிலாக இணைய வழி சேவையாக மாணவர்களுக்கும்‌ பொது மக்களுக்கும்‌ வழங்க எதுவாக உரிய அரசாணை வழங்குமாறு பள்ளிக்‌ கல்வி ஆணையர்‌ அரசைக்‌ கோரியுள்ளார்‌.

பள்ளிக்‌ கல்வி ஆணையரின கருத்துருவினை கவனமுடன்‌ பரிசீலனை செய்து பொது மக்கள்‌ மற்றும்‌ பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும்‌ 23 விதமான சான்றுகள்‌ அனைத்தும்‌அவர்தம்‌ கல்லத்திற்கு அருகிலுள்ள அரசு சேவை மையங்களின்‌ வாயிலாக விண்ணப்பித்து காலவிரயமின்றி பெற்றுக்‌ கொள்ளவும்‌, மேலும்‌ வருங்காலங்களில்‌ புதியதாக கண்டறியப்படும்‌ சேவைகளையும்‌ இணைய வழி சேவையாக மாணவர்களுக்கும்‌ பொது மக்களுக்கும்‌ வழங்கும்‌ திட்டத்தினை செயல்படுத்திட அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது’’.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
தாட்கோ சிறப்பு பயிற்சி: ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் பொன்னான வாய்ப்பு!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget