மேலும் அறிய

TN NEET Ban: பரிசீலனையில் நீட் விலக்கு மசோதா- குழப்பும் ஆளுநர் மாளிகை - உண்மை என்ன?

நீட் தேர்வு விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. ஆனால், ஆளுநர் மாளிகையிலா ? குடியரசுத் தலைவர் மாளிகையிலா? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

நீட் தேர்வு விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளதாக ஆளுநர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. ஆனால், ஆளுநர் மாளிகையிலா ? குடியரசுத் தலைவர் மாளிகையிலா? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

இதுகுறித்துக் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆளுநர் மாளிகைக்கு ஆர்டிஐ அனுப்பி உள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாவது:

’’தமிழ்நாடு சட்டப் பேரவை இரண்டுமுறை நிறைவேற்றி அனுப்பிய மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சட்ட முன் வடிவு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? சட்ட முன் வடிவின் தற்போதைய நிலை என்ன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2022 மார்ச் 29 அன்று ஆளுநர் செயலகத்திற்கு மனு அனுப்பப்பட்டது‌. 

மிகவும் கால தாமதமாக (98 நாட்கள் கழித்து) ஜூலை 7, 2022 தேதியிட்ட கடிதம் ஜூலை 11, 2022 அன்று கிடைக்கப் பெற்றோம். 

பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட செய்தி அதிர்ச்சி தருவதாக உள்ளது. 

TN NEET Ban: பரிசீலனையில் நீட் விலக்கு மசோதா- குழப்பும் ஆளுநர் மாளிகை - உண்மை என்ன?
"சம்மந்தப்பட்ட அதிகாரியின் பரிசீலனையில் உள்ளதாகவும்,  அதனால் கோரியத் தகவலைத் தெரிவிக்க இயலாது" என்றும் பதிலில் கூறப்பட்டுள்ளது.
 
"சம்மந்தப்பட்ட அதிகாரி"யின் பரிசீலனை என்றால் எவ்வாறு புரிந்து கொள்வது. ஆளுநர் செயலகத்திலா? அல்லது குடியரசுத் தலைவர் செயலகத்திலா? 

ஆளுநர் மாளிகையில் இருந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக சட்ட முன் வடிவு அனுப்பப்பட்டுள்ளது என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்தார். 

முதல் அமைச்சர் அறிவித்து இரண்டு மாதங்கள் கழித்து,  "சம்மந்தப்பட்ட அதிகாரியின் பரிசீலனை"யில் உள்ளது என்று தெளிவற்ற, நேரடி பதில் தருவதிலிருந்து தப்பிக்கும் சொல்லாடலை ஆளுநர் மாளிகை பயன்படுத்தி உள்ளதால், ஆளுநர் மாளிகையில் இருந்து சட்ட முன் வடிவு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்குச் சென்றுள்ளதா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. 

பதில் திருப்தியாக இல்லை, நேரடி பதில் வேண்டும் என்று கோரி ஆளுநர் செயலகத்தின் தகவல் தரும் அடுத்த நிலை அதிகாரிக்கு மேல் முறையீடு மனுவை அனுப்பி உள்ளோம். 

தமிழ்நாடு அரசு, சட்ட முன் வடிவின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிந்து, தெளிவான தகவலை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கோரி  முதல் அமைச்சருக்குக் கடிதம் அனுப்பி உள்ளோம். 

தமிழ்நாடு மக்களுக்கு சட்ட முன் வடிவு குறித்த உண்மை நிலையும் தெளிவான விடையும் தேவை’’. 

இவ்வாறு கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அறிய வாய்ப்பு! செங்கல்பட்டு மாணவர்களுக்கு ஹாப்பியான நியூஸ்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
TET தாள்-1 தேர்வு ஓவர்... நாளை தாள்-2 தேர்வு! மயிலாடுதுறை கலெக்டர் வெளியிட்ட முக்கிய விபரம்!
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !
கோடை விடுமுறையில் புத்தக வாசிப்பில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு.. உற்சாகம் ஏற்படுத்தும் பள்ளி நிர்வாகம் !

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
659 கி.மீட்டர் மைலேஜ்.. 52 ஆயிரம் ஆஃபர்! 4 லட்சம் ரூபாய்க்கும் கம்மி விலையில் Maruti Alto K10
659 கி.மீட்டர் மைலேஜ்.. 52 ஆயிரம் ஆஃபர்! 4 லட்சம் ரூபாய்க்கும் கம்மி விலையில் Maruti Alto K10
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
கஞ்சா போதையில் வெறிச் செயல் ; தனியாக இருந்த 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்
கஞ்சா போதையில் வெறிச் செயல் ; தனியாக இருந்த 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
Embed widget