(Source: ECI/ABP News/ABP Majha)
TN Arts College Admission: அரசு கலை, அறிவியல் முதுநிலைப் படிப்புகள்; ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
2023 - 2024ஆம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்பில் (Post Graduate Courses) சேர ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
2023 - 2024ஆம் கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்பில் (Post Graduate Courses) சேர ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 22 வரை மாணவர்கள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில் 24,341 இடங்கள் உள்ளன. இவற்றை 2023-24ஆம் ஆண்டில் நிரப்புவதற்கான அறிவிப்பை கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in, www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம். இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விண்ணப்பிக்கும் ஐந்து கல்லூரிகளுக்கும் விண்ணப்பக் கட்டண விவரம்
விண்ணப்பக் கட்டணம் - ரூ. 58/-
பதிவுக் கட்டணம் - ரூ.2/-
எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை
பதிவுக் கட்டணம் - ரூ. 2/- மட்டும்
விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில், “The Director, Directorate of Collegiate Education, Chennai — 15” என்ற பெயரில் 14.08.2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.
மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் www.tngasa.in, www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள்: 14.08.2023
இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்: 22.08.2023
தொடர்பு எண்கள்: 93634 62070, 93634 62042, 93634 62007, 93634 62024
இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை
தமிழ்நாட்டில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின்கீழ் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஆன்லைன் மூலம் கடந்த மே 8-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க மே 22ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், ஜூன் 8ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: Model Syllabus: பின்வாங்கிய அரசு: தன்னாட்சி கல்லூரிகளில் மாதிரி பாடத்திட்டம்; கல்லூரி நிர்வாகமே முடிவு செய்யலாம் என அறிவிப்பு