மேலும் அறிய

11th 12th Practical Exam: 11, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதிகள் இவைதான்! முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

11th 12th Practical Exam: செய்முறை தேர்வுக்கான புறத்தேர்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மார்ச் மாதம் நடைபெற உள்ள 11, 12ஆம் வகுப்பு பொதுத்‌ தேர்வை எழுதும்‌ மாணவர்களுக்கு செய்முறைத்‌ தேர்வுகள்‌, எழுத்துத்‌ தேர்வுகளுக்கு முன்னதாக நடத்தப்படவேண்டும். தேர்வின்போது மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். செய்முறை தேர்வுக்கான புறத்தேர்வாளராக பிற பள்ளிகளின் ஆசிரியர்களைத்தான் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார். அதில் தெரிவித்து உள்ளதாவது:

பள்ளி மாணவர்களுக்கு செய்முறைத்‌ தேர்வு நடத்துதல்‌

  1. பள்ளித்‌ தலைமையாசிரியா்கள்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள யூசர் ஐடி, பாஸ்வேர்டைப் பயன்படுத்தி, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாம்‌ ஆண்டு செய்முறைத்‌ தோவுக்கான வெற்று மதிப்பெண்‌ பட்டியல்களை அனைத்து தேர்வர்களுக்கும்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ள வேண்டும்‌.
  2. மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத்‌ தேர்வெழுதும்‌ பள்ளி மாணாக்கருக்கு, பொதுப்பிரிவு மற்றும்‌ தொழிற்கல்வி பாடங்களுக்கான செய்முறைத்‌ தேர்வுகள்‌, முறையே பிப்ரவரி 19 முதல் 24 வரையும், பிப்.12 முதல் பிப்.17 வரையும் நடத்தப்பட வேண்டும்‌.


11th 12th Practical Exam: 11, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதிகள் இவைதான்! முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

பள்ளித்‌ தலைமையாசிரியர்கள்‌ / முதல்வர்கள்‌, சம்மந்தப்பட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்‌

  1. செய்முறைத்‌ தேர்வு மையங்கள்‌ அமைத்தல்‌.
  2. செய்முறைத்‌ தேர்வு நடத்துவது தொடர்பாக கீழ்க்கண்ட பணியாளர்களை நியமித்தல்‌
  3. முதன்மைக்‌ கண்காணிப்பாளர்‌
  4. புறத்தேர்வாளர்கள்‌ ஆக வேறு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்‌.
  5. அகத்தேர்வாளர்கள்‌ ஆக அதே பள்ளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்‌.

அதேபோல திறமையான உதவியாளர்கள்‌ (தேவைக்கேற்ப), எழுத்தர், அலுவலக உதவியாளர்கள்‌, துப்புரவு பணியாளர்‌, குடிநீர்‌ வழங்குபவர்‌(Waterman) ஆகியோரை நியமிக்க வேண்டும்‌.


11th 12th Practical Exam: 11, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதிகள் இவைதான்! முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

செய்முறைத்‌ தேர்வுக்கான மதிப்பெண்களை இணையதளம்‌ வழி பதிவேற்றம்‌ செய்தல்‌

அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்கள்‌ தங்கள்‌ மாவட்டத்தில்‌ உள்ள பள்ளிகளிலிருந்து பெறப்பட்ட அனைத்துப்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களுக்கும்‌ வழங்கப்பட்ட செய்முறைத்‌ தேர்வு மதிப்பெண்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின்‌ வாயிலாக தங்களுக்கு வழங்கப்பட்ட யூசர் ஐடி மற்றும்‌ பாஸ்வேர்டை பயன்படுத்தி, பிற்சேர்க்கையில்‌ குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில்‌ பதிவேற்றம்‌ செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்‌.

தங்கள்‌ மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்கள்‌ அனைவரது செய்முறைத்‌ தேர்வு மதிப்பெண்களும்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளதா என்பதை அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்கள்‌ உறுதி செய்து கொள்ள வேண்டும்‌. எந்த ஒரு மாணவரது மதிப்பெண்களும்‌ பதிவேற்றம்‌ செய்யப்படாமல்‌ இருத்தல்‌ கூடாது.

இணையதளம்‌ வாயிலாக செய்முறைத்‌ தேவு மதிப்பெண்களை பதிவேற்றம்‌ செய்யும்‌ பணி நிறைவடைந்த பின்பு, அனைத்து மேல்நிலைப்‌ பள்ளிகளின்‌ மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு செய்முறைத்‌ தேர்வு மதிப்பெண்‌ பட்டியல்‌ கட்டுகளை (உரிய இணைப்புகளுடன்‌) பள்ளி எண்‌ வாரியாக கட்டுகளாகக்‌ கட்டி, சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்கள்‌ பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்‌.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
UPSC ஊக்கத்தொகை தேர்வில் முறைகேடா? .. முதல் மதிப்பெண் 197.33 பெற்றதால் வெடித்த சர்ச்சை.. போலீசில் புகார்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
புதுச்சேரி அரசு சிபிஎஸ்இ பள்ளிகள்: தேர்வு எப்போது? விடுமுறை எப்போது? முழு விவரம்!
"மாணவர்களின் குரலைக் கேட்கும் ஒரே தலைவர் ராகுல் காந்தி மட்டுமே" - நிவேதித் ஆல்வா பெருமிதம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
அண்ணா நூற்றாண்டு நூலகம்.. கடும் சிரமத்தை சந்திக்கும் வெளியூர் வாசகர்கள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
Embed widget