மேலும் அறிய

TN 10th Result 2024: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 12ஆம் இடத்தை பிடித்த கோவை - முழு விபரம் இதோ..!

94.01 சதவீத தேர்ச்சி உடன் கோவை மாவட்டம் 12 வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 39 ஆயிரத்து740 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 37 ஆயிரத்து 360 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதினர். அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை  சென்னை டி.பி.ஐ  வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

கோவை மாவட்ட தேர்ச்சி விகிதம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 97.31 சதவீத தேர்ச்சி உடன் அரியலூர் மாவட்டம் முதலிடத்தையும், 82.07 சதவீத தேர்ச்சி உடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது. இதில் 94.01 சதவீத தேர்ச்சி உடன் கோவை மாவட்டம் 12 வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 39 ஆயிரத்து740 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 37 ஆயிரத்து 360 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 91.46 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 96.50 சதவீதமாகவும் உள்ளது. வழக்கம் போல மாணவர்களை காட்டிலும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.

அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்

அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் 20 வது இடத்தில் உள்ளது. அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 89.16 சதவீதமாக உள்ளது. 198 அரசுப் பள்ளிகளை சேர்ந்த 15 ஆயிரத்து 153 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 13 ஆயிரத்து 510 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 84.19 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 93.58 சதவீதமாகவும் உள்ளது. வழக்கம் போல இதிலும் மாணவர்களை காட்டிலும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.

திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள்

95.08 சதவீத தேர்ச்சி உடன் ஈரோடு மாவட்டம் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 24 ஆயிரத்து 826 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 23 ஆயிரத்து 605 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 93.10 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 97.06 சதவீதமாகவும் உள்ளது. வழக்கம் போல இதிலும் மாணவர்களை காட்டிலும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. இதேபோல 92.38 சதவீத தேர்ச்சி உடன் திருப்பூர் மாவட்டம் 21 வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 30 ஆயிரத்து 180 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 27 ஆயிரத்து 879 மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 89.97 சதவீதமாகவும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 94.76 சதவீதமாகவும் உள்ளது. வழக்கம் போல இதிலும் மாணவர்களை காட்டிலும், மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
பள்ளிக் கல்விக்கு தவெக ஆட்சியில் நிதி குறைப்பா? நடந்தது இதான்- அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget