மேலும் அறிய

10th 11th 12th Public Exam Result Date: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது?- தேதிகள் அறிவிப்பு

10th 11th 12th Public Exam 2024 Result Dates: மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோல மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது.

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்ற தேதிகளை அறிவித்த கையோடு, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோல மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மே14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.

தேர்வு தேதிகள் என்னென்ன?

தமிழ்நாடு மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் மாணவர்களுக்கானப்10, 11, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்னும் அட்டவணை இன்று வெளியாகி உள்ளது. அட்டவணையை சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  வெளியிட்டார்.

இதன்படி,10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 26 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மார்ச் 26ஆம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் 28ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெற உள்ளது.

முழுமையாக வாசிக்க: 10th Public Exam Time Table: மார்ச் 26 - ஏப்.8: 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது?- தேதிவாரியாக முழு அட்டவணை! 

பிளஸ் 2 தேர்வு தேதிகள்

12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. மார்ச் 1ஆம் தேதி தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 5ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் 8ஆம் தேதி பல்வேறு வகையான பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.

முழுமையாக வாசிக்க: 12th Public Exam Time Table: மார்ச் 1 முதல் 22 வரை: பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் இவைதான்- அட்டவணையோடு! 

முன்கூட்டியே தேர்வு

கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, பொதுத் தேர்வு நடைபெறும் தேதிகள், தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவை முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகிறது. மக்களவைத் தேர்தலை மனதில் வைத்து, பொதுத் தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறி இருந்தார்.

இந்த நிலையில் மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோல மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மே14ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
பி.டெக்., பி.காம். படிப்புகளுக்கு ரூ.25,000 வரை கட்டணச் சலுகை: புதுச்சேரி மகளிர் பொறியியல் கல்லூரி அதிரடி!
பி.டெக்., பி.காம். படிப்புகளுக்கு ரூ.25,000 வரை கட்டணச் சலுகை: புதுச்சேரி மகளிர் பொறியியல் கல்லூரி அதிரடி!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget