மேலும் அறிய

NEET PG 2024: தொடரும் சர்ச்சைகள்... தள்ளிப்போகும் நீட் முதுகலைத் தேர்வு? உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

NEET PG 2024 Exam: மனுவை விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் அனாஸ் தன்வீர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைத்தார்.

நீட் முதுகலைத் தேர்வை எழுத மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவகாரத்தில் மாணவர்கள் சிரமத்தை எதிர்கொள்வதால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவை விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் அனாஸ் தன்வீர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை வைத்தார். இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நிலையில், நாளை (ஆக.9) இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது. அருகிலேயே தேர்வு மையங்களை ஒதுக்கவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு

நாடு முழுவதும் நீட், நெட், க்யூட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் முறைகேடு, ஆள்மாறாட்டப் புகார்கள் வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் நெட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, மீண்டும் நடத்தப்பட்டது. நீட் இளங்கலைத் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின.

இந்த நிலையில் நீட் முதுகலைத் தேர்விலும் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. ஏற்கெனவே நீட் முதுகலைத் தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் தேர்வுக்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்படி ஆகஸ்ட் 11ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

இதைத் தொடர்ந்து ஜூலை 31ஆம் தேதி தேர்வு நடைபெறும் மையங்களின் விவரங்கள் வெளியாகின. எனினும் இதில் பெரும்பாலான தேர்வர்களுக்கு தொலைதூரத்தில், வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதுகுறித்துத் தமிழக எம்.பி.க்கள் தரப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனால் தமிழக மாணவர்களுக்கு சொந்த மாநிலத்திலேயே தேர்வு மையங்கள் மாற்றிக் கொடுக்கப்பட்டன. எனினும் பிற மாநிலத் தேர்வர்களுக்கு, தேர்வு மையங்கள் மாற்றப்படவில்லை.

தேர்வு தேதியைத் தள்ளி வைக்க வேண்டும்

இந்த நிலையில் தேர்வு மையம் தூரமாக அமைந்திருப்பதால், மாணவர்களுக்கு சிரமமாக இருப்பதாகவும் தேர்வு மையத்தை மாற்றும் பொருட்டு, தேர்வு தேதியைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே வினாத்தாள் லீக் ஆனதாகப் புகார் எழுந்தது. எனினும் ’’அவ்வாறு முறைகேடு எதுவும் நடக்கவில்லை. வினாத் தாளே இன்னும் தயாரிக்கப் படவில்லை’’ என்று தேசிய மருத்துவ அறிவியல் வாரியம் விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget