மேலும் அறிய

Student Admission: என்னாது? ஒவ்வொரு பள்ளியிலும் 5 பேர் கூட சேரலையா? அரசுப் பள்ளிகளில் குறையும் மாணவர் சேர்க்கை

இத்தனைப் பள்ளிகளில் வெறும் 1.50 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர் என்றால், ஒரு பள்ளிக்கு சராசரியாக 4.78 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்றுதான் பொருள்.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகவும் கட்டமைப்பு வசதிகளையும், ஆசிரியர்கள் எண்ணிக்கையையும் மேம்படுத்த வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2025-26ஆம் ஆண்டில் 5 லட்சம் மாணவர்களைச் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக 1.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளிகளில் சேர்ந்திருக்கின்றனர். அரசு பள்ளிகளில் தங்களின் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர்கள் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

நடப்பாண்டில்தான் மிகவும் குறைவு

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ஆம் நாள் தொடங்கியது. இதுவரை 55 நாட்கள் ஆகியுள்ள நிலையில், 5 லட்சம் மாணவர் சேர்க்கை இலக்கு எட்டப்பட்டிருக்க வேண்டும். பள்ளிகளில் சேரத் தகுதியான மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கூடங்களில் சேர்க்கப்பட்டு விட்ட நிலையில், இனி எவரும் அரசு பள்ளிகளில் சேர வாய்ப்பில்லை என்றும், அண்மைக்காலங்களில் அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை நடப்பாண்டில்தான் மிகவும் குறைவாக இருக்கும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

ஒவ்வொரு பள்ளியிலும் 5 மாணவர்கள் கூட சேரத் தயாராக இல்லையா?

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறை சார்பில் 31, 336  அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளும், நடுநிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இத்தனைப் பள்ளிகளில் வெறும் 1.50 லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர் என்றால், ஒரு பள்ளிக்கு சராசரியாக 4.78 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்று தான் பொருள். ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் 5 மாணவர்கள் கூட சேரத் தயாராக இல்லை என்றால், அரசு பள்ளிகளுக்கு மக்களிடையே எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையில் செயல்பட்டு வரும் 31,336 பள்ளிகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 25.50 லட்சம் மட்டும்தான். அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 81 பேர் மட்டும்தான் பயில்கின்றனர்.  அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள 4498 தனியார் பள்ளிகளில் 30.60 லட்சம் மாணவர்கள், அதாவது ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 680 மாணவர்கள் பயில்கின்றனர். அரசு பள்ளிகளுக்கும், தனியார் பள்ளிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை இந்த புள்ளிவிவரங்களே விளக்குகின்றன.

அரசு பள்ளிகளில் சேர மாணவர்கள் முன்வராததற்கு காரணம் அங்கு கட்டமைப்பு வசதிகள் இல்லாததும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததும்தான். தமிழகத்தில் பெரும்பான்மையான அரசு பள்ளிகள் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் தான் உள்ளன. பல பள்ளிகளில் மேற்கூரையின் பூச்சு உதிர்ந்து விழுவது அன்றாட நிகழ்வாகி விட்டது.

தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?

அதேபோல், ஆசிரியர்களும் போதிய எண்ணிக்கையில் நியமிக்கப்படவில்லை. 31,336 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்சத்து 8537 ஆசிரியர்கள் மட்டும்தான் உள்ளனர். அதாவது, ஒரு பள்ளிக்கு சராசரியாக 3.46 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 8ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் சராசரியாக 3 அல்லது 4 ஆசிரியர்கள் இருந்தால் அவர்களால் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?

எனவே, அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அதன் மூலம் அரசு பள்ளிகளில் அதிக எண்ணிக்கையிலான மாணவர், மாணவியரை சேர்க்கப்படுவதை வகை  செய்ய வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
CBSE 10ஆம் வகுப்பு: மும்மொழி கட்டாயம்! தேர்ச்சி பெறாவிட்டால் சான்றிதழ் இல்லை!
CBSE 10ஆம் வகுப்பு: மும்மொழி கட்டாயம்! தேர்ச்சி பெறாவிட்டால் சான்றிதழ் இல்லை!

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
TN Govt: குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
குட்டீஸ்களுக்கு வார்னிங்..! முக்கிய உணவு பொருளுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசு - காரணம் என்ன?
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
Medical Admissions Reservation : மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மாணவர்களுக்கு குஷி.! மருத்துவ உள் இட ஒதுக்கீடு 10 % அதிகரிக்கப்போகுது.? செம பிளான் போட்ட சிஎம் விஜய்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
விஜய் போட்ட ரகசிய திட்டம்.. பிளான் போட்டு சுக்கு நூறாக உடைத்த இபிஎஸ்.? ஆர்.பி.உதயகுமார் சொன்ன ஷாக் தகவல்
ரூ.80 ஆயிரம் தள்ளுபடி! குறையும் விலை- மாருதி பிரெஸ்ஸா புது மாடலுக்கு முன்னே குவியும் ஆஃபர்கள்
ரூ.80 ஆயிரம் தள்ளுபடி! குறையும் விலை- மாருதி பிரெஸ்ஸா புது மாடலுக்கு முன்னே குவியும் ஆஃபர்கள்
CM Vijay: லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
லிஸ்ட் போட்ட யூட்யூபர்..! தூக்கி அடிக்கப்பட்ட IAS அதிகாரிகள் - திமுக அதிகாரிகளா? ஊழல் பேர்வழிகளா?
Embed widget