மேலும் அறிய

SSTA Teachers Strike: இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் போராட்டம் வாபஸ்: அரசு பேச்சுவார்த்தையை அடுத்து முடிவு

தமிழ்நாட்டில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி அரசுப் பள்ளி பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வந்த நிலையில், அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி அரசுப் பள்ளி பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் போராடி வந்த நிலையில், அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம்

தொடக்கக் கல்வித்துறையில்‌ பணியாற்றும்‌ இடைநிலை ஆசிரியர்களில் 2009ஆம் ஆண்டு மே 31ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஓர் ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 2009ஆம் ஆண்டு மே 31 வரை வேலையில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8370 ஆகவும் அதற்குப் பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.5200 ஆகவும் உள்ளது. அதாவது ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைக்கப்பட்டது. இதனால் சுமார் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதேபோல 90 சதவீத ஆசிரியர்களின்‌, குறிப்பாக பெண் ஆசிரியா்களின்‌ பதவி உயர்வு வாய்ப்பை‌ பறிக்கும்‌ வகையிலும்‌, தொடக்கக் கல்வித்துறையில்‌ 60 ஆண்டுகாலமாக நடைமுறையில்‌ இருந்த ஒன்றிய முன்னுரிமையை மாற்றி மாநில முன்னுரிமையைக்‌ கொண்டு வந்து ஒரு லட்சத்திற்கும்‌ மேற்பட்ட ஆசிரியர்களின்‌ பணி முன்னுரிமை மற்றும்‌ பதவி உயர்வு ஆகியவற்றைப் பாதிக்கும்‌ வகையிலும்‌ வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்‌ 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முன்னதாக பிப்ரவரி 19ஆம் தேதி தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கலின்போது இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.

19 நாட்கள் போராட்டம்

தினந்தோறும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையினர் ஆசிரியர்களைக் கைது செய்து வந்தனர். கைது செய்யப்பட்டு, எழும்பூர், புதுப்பேட்டை சமுதாய நலக் கூடங்களில் அடைத்து வைக்கப்பட்ட ஆசிரியர்கள், உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

19 நாட்களாக இந்த போராட்டம் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில், டிபிஐ வளாகத்தில் பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த 5 நிர்வாகிகளுடன் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, 19 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பதிவு மூப்பு இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகி ராபர்ட் கூறும்போது, ’’தொடக்கப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழ் கஷ்டம்னு சொல்றவங்களுக்கு இதோ சான்று; 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் படைத்த அசாத்திய சாதனை; மார்க் எவ்வளவு தெரியுமா?
தமிழ் கஷ்டம்னு சொல்றவங்களுக்கு இதோ சான்று; 10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் படைத்த அசாத்திய சாதனை; மார்க் எவ்வளவு தெரியுமா?
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
மதுரையில் “காக்ரோச்” அமைப்பின் பேரணி: வேலைவாய்ப்பு, ஊழல் எதிர்ப்பு கோரிக்கைகள் வலியுறுத்தல் !
வசதிகள் இல்லைனா என்ன.. வெறித்தனம் இருந்தா போதும்! 10வது தேர்வில் மிரட்டிய கூலித்தொழிலாளி மகள்; தளபதியின் வழியில் கல்விக்கு உதவிய தவெகவினர்..!
வசதிகள் இல்லைனா என்ன.. வெறித்தனம் இருந்தா போதும்! 10வது தேர்வில் மிரட்டிய கூலித்தொழிலாளி மகள்; தளபதியின் வழியில் கல்விக்கு உதவிய தவெகவினர்..!
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் செல்லும் பள்ளி வாகனம் பாதுகாப்பானது தானா? மயிலாடுதுறை கலெக்டரின் அதிரடி 'ஆன் தி ஸ்பாட்' செக்கப்!
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் செல்லும் பள்ளி வாகனம் பாதுகாப்பானது தானா? மயிலாடுதுறை கலெக்டரின் அதிரடி 'ஆன் தி ஸ்பாட்' செக்கப்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
Udhayanithi: மீண்டும் நடிக்க வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? ஆர்வம் காட்டும் இயக்குனர்கள்
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
IPL Play offs: ப்ளே ஆஃப் போட்டிகள் எப்போது? குவாலிஃபயர் 1, எலிமினேட்டரில் யார்? யார்?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
IPL 2026: பிளே ஆஃப் சென்ற ராஜஸ்தான்.. பஞ்சாப் கனவை முடித்துவிட்ட மும்பை.. கூடவே வெளியேறிய கேகேஆர்
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
Embed widget