மேலும் அறிய

அரசுப்பள்ளிகள் மீது அவதூறு பரப்புவதா? - கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக, குறிப்பாகக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்து அரசுப் பள்ளிகளையும் மாணவர்களையும் மேம்படுத்தும் நோக்கத்தோடு முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.  

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கியதைத் தொடர்ந்து, பொறியியல் கல்லூரியிலும் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஏழை, எளிய குடும்பங்களில் இருந்துதான் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்பதை உணர்ந்தும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் அரசுப் பள்ளியில் படித்து உயர் கல்வியைத் தொடரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 போன்ற அறிவிப்பின் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

எதிர்காலத்தில் அனைத்திலும் முதன்மை பெறப் போகிறவர்கள் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். கடந்த ஆண்டில் மட்டும் ஐந்தரை லட்சம் புதிய மாணவர்கள் சேர்ந்தார்கள். எதிர் வரும் ஆண்டில் இந்த எண்ணிக்கை, இருமடங்காக உயரும் நிலை உருவாகும். நிலைமை இவ்வாறிருக்க சமீப காலமாக சமூக வலைதளங்களில் அரசுப் பள்ளிகளையும் அங்கு படிக்கும் மாணவர்களை தவறான செய்கையில் ஈடுபடுவது போன்று வீடியோ எடுத்து பரப்பி வருவதன்மூலம் அரசுப் பள்ளிகளையும் மாணவர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்  கேட்டுக்கொள்கிறேன். 

கொரோனா ஊரடங்கு ஏற்படுத்திய தாக்கத்தால் எங்கோ ஒரு சில மாணவர்கள் ஈடுபட்ட செயல்கள் வருந்தத்தக்கவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அம்மாணவர்களை நாங்கள் மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வந்து விடுவோம். ஆனால் அதை வீடியோ எடுத்து பரப்புவதனால் மாணவனின் எதிர்காலம் கேள்விக் குறியாகிறது.

அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பியும் அங்கு படிப்பவர்கள் அனைவரும் ஒழுங்கீனமானவர்கள் போலவும் சித்தரித்து வீடியோ பரப்பப்படுகிறது. அல்லது ஒரு சிலரின் தூண்டுதலால் திட்டமிட்டுப் பரப்புகிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது . மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ள நிலையில் பெற்றோர்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோக்கள் வெளியிடுகிறார்கள். 

அரசுப் பள்ளிகள்தான் அடிமட்ட மக்களின் அடையாளம். அரசுப் பள்ளிதான் சிறப்பான குடிமகன்களை உருவாக்கும் அறிவாலயம். ஆகையால், அரசுப் பள்ளிகள் மீது சேற்றை வாரிப் பூசும் வீடியோக்களை எடுத்து சமூகவலைதளங்களில் பரப்புவோர் மீதும் பகிர்வோர் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்’’. 

இவ்வாறு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் தெரிவித்துள்ளார்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TN Govt: கல்வித்தகுதி இல்லை..! ரூ.52,000 வரை ஊதியம் - அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அதிரடி- முழு விவரம்
கல்வித்தகுதி இல்லை..! ரூ.52,000 வரை ஊதியம் - அரசு வேலைவாய்ப்பு நிறுவனம் அதிரடி- முழு விவரம்
College Student: கல்லூரி மாணவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.50,000 கல்வி உதவித்தொகை! என்னென்ன தகுதிகள்? விண்ணப்பிப்பது எப்படி?
College Student: கல்லூரி மாணவர்களுக்கு ஜாக்பாட்! ரூ.50,000 கல்வி உதவித்தொகை! என்னென்ன தகுதிகள்? விண்ணப்பிப்பது எப்படி?
ஹீரோவிற்கு ஆர்டர் கொடுத்த தமிழ்நாடு அரசு..! 5.32 லட்சம் சைக்கிள்கள் - என்ன கலர், எப்படி டிசைன்? முழு விவரம்
ஹீரோவிற்கு ஆர்டர் கொடுத்த தமிழ்நாடு அரசு..! 5.32 லட்சம் சைக்கிள்கள் - என்ன கலர், எப்படி டிசைன்? முழு விவரம்
TN Govt: 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.58,000 வரை ஊதியம்..! தேர்வே இல்லை - ஊராட்சி செயலர் வேலை முழு விவரம்
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.58,000 வரை ஊதியம்..! தேர்வே இல்லை - ஊராட்சி செயலர் வேலை முழு விவரம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
Innova Hycross: புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
புதிய இன்னோவா ஹைக்ராஸில் வந்துள்ள டாப் 5 மாற்றங்கள் என்ன? வாங்கும் முன் அறிய வேண்டியவை
"தவெக எம்எல்ஏ-வை சும்மா விடக்கூடாது.. 116 நாட்களாக என்ன பண்ணிங்க?" பிரஸ் மீட்டில் எகிறிய உதயநிதி!
TVK On Stalin: ”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
”மண்ணாங்கட்டிப் பரம்பரை.. ஆளுநர் காலில் விழுந்த திமுக” உதயநிதியை வெளுத்த தவெக
TASMAC: டாஸ்மாக் தற்காலிகப் பணியாளர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
TASMAC: டாஸ்மாக் தற்காலிகப் பணியாளர்கள் நியமனத்தில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
TN Govt: ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு, 25% மானியம்..! 500 பால் பண்ணைகளுக்கு அரசு அதிரடி திட்டம்
ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு, 25% மானியம்..! 500 பால் பண்ணைகளுக்கு அரசு அதிரடி திட்டம்
Hardik Pandya: ராஜஸ்தான் அணியில் இணையவிருந்த ஹர்திக்.. மும்பையின் ஒரே கண்டிஷனால் முடிந்த டோல் - என்ன ஆச்சு?
ராஜஸ்தான் அணியில் இணையவிருந்த ஹர்திக்.. மும்பையின் ஒரே கண்டிஷனால் முடிந்த டோல் - என்ன ஆச்சு?
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
Vijay Sethupathi: தவெக ஆட்சி எப்படி இருக்குது? மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
Embed widget