மேலும் அறிய

DPI Campus: பள்ளிக் கல்வித்துறை டி.பி.ஐ. வளாகத்துக்கு புதிய பெயர்- முதலமைச்சர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை செயல்படும்‌ டி.பி.ஐ. வளாகம்‌ ’பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்வி வளாகம்’‌ என அழைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பேராசிரியர்‌ அன்பழகனின்‌ நூற்றாண்டு நினைவைப்‌ போற்றும்‌ வகையில்‌ தமிழ்நாடு அரசின்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை செயல்படும்‌ டி.பி.ஐ. வளாகத்தில்‌ பேராசிரியர்‌ அன்பழகனின்‌ திருவுருவச் சிலை நிறுவப்பட்டு, அவ்வளாகம்‌ ’பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்வி வளாகம்’‌ என அழைக்கப்படும் என்றும்  சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர்‌ பெயரில் விருதும்‌ வழங்கப்படும்‌ எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுகுறித்துத் தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ வெளியிட்ட அறிவிப்பு:

''தமிழ்நாட்டின்‌ கல்வி வளர்ச்சிக்குப்‌ பெரும்‌ பங்காற்றியவரும்‌, தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர்‌ அன்பழகனின்‌ நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதைப்‌ போற்றும்‌ வண்ணம்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ வளர்ச்சிக்கெனெ ரூபாய்‌ 7500 கோடி மதிப்பீட்டில்‌ பேராசிரியர்‌ அன்பழகனாரின்‌ பள்ளி மேம்பாட்டுத்‌ திட்டம்‌ என்ற மாபெரும்‌ திட்டத்தை ஐந்து ஆண்டுகளில்‌ செயல்படுத்த அரசால்‌ அறிவிக்கப்பட்டு, நடப்பு ஆண்டிற்கு சுமார்‌ ரூபாய்‌ 1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

1400 கோடி நிதி ஒதுக்கீடு:

அரசு எடுத்து வரும்‌ பல்வேறு ஆசிரியர்‌ மாணவர்‌ நலன்‌ சார்ந்த செயல்பாடுகளால்‌ அரசுப்‌ பள்ளி மாணவர்கள்‌ சேர்க்கை அதிகரித்து வருவதைத்‌ தொடர்ந்து முதலமைச்சர் ‌ நடப்பு ஆண்டிலேயே பல்வேறு கட்டுமானத்திற்கும்‌ மராமத்துப்‌ பணிகளுக்கும்‌ கூடுதலாக சுமார்‌ 1400 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்‌.

இத்துடன்‌, பேராசிரியர்‌ அன்பழகன்‌  நூற்றாண்டு நினைவைப்‌ போற்றும்‌ வகையில்‌ தமிழ்நாடு அரசின்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை செயல்படும்‌ டிபிஐ (D.P.I.) வளாகத்தில்‌ பேராசிரியர்‌ அன்பழகனின் திரு உருவச் சிலை நிறுவப்படுவதுடன்‌ அவ்வளாகம்‌ “பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்வி வளாகம்‌” என்றும்‌ அழைக்கப்படும்‌.

மேலும்‌ கற்றல்‌ கற்பித்தல்‌, ஆசிரியர்‌ திறன்‌ மேம்பாடு, தலைமைத்துவம்‌, மாணவர்‌ வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும்‌ சிறந்த பள்ளிகளுக்குப்‌ பேராசிரியர்‌ பெயரில்‌ விருதும்‌ வழங்கப்படும்‌''.

இவ்வாறு தமிழக முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


DPI Campus: பள்ளிக் கல்வித்துறை டி.பி.ஐ. வளாகத்துக்கு புதிய பெயர்- முதலமைச்சர் அறிவிப்பு

முதல்வர் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, இலவச காலை உணவு, நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு முன்னுதாரணத் திட்டங்களை, பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளில் தொடங்கி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்கலாம்: விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம்..விண்ணப்பிக்கும் முறை, தேர்வுசெய்யும் முறை இதுதான் - https://tamil.abplive.com/news/chennai/sports-development-authority-of-tamilnadu-goverment-special-scholarship-cheme-for-sportspersons-87591

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Embed widget