மேலும் அறிய

NMMS Exam Update | மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை: பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க தயாரா?

நாடு முழுவதும் விளிம்புநிலை மாணவர்களின் மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்ற நோக்கில் மத்திய அரசு சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு, 1 லட்சம் பேருக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் விளிம்புநிலை மாணவர்களின் மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் மத்தியக் கல்வித் துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு, 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதற்குத் தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்ய  தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதலாம். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

இந்தத் தேர்வுக்கெனத் தனி பாடத்திட்டம் எதுவுமில்லை. 7 மற்றும் 8ஆம் வகுப்புப் பாடத்திட்டங்களில் இருந்து பொதுவான கேள்விகள் கேட்கப்படும். மன திறன் சோதனை (MAT)மற்றும் உதவித்தொகை சார் திறன் சோதனை (SAT) என இரண்டு தாள்களாகத் தேர்வுகள் நடத்தப்படும். இந்தத் தேர்வு மார்ச் 5-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு குறித்து, தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, 2021-2022-ம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற அரசு / அரசு உதவி பெறும் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், 2022 மார்ச் மாதம் 05-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். 

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை  எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு NMMS தேர்வு அனைத்து வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடைபெறவுள்ளது. 



NMMS Exam Update | மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை: பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க தயாரா?

தேர்வு தேதி - 05.03.2022 (சனிக்கிழமை). 

இத்தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை 12.01.2022 முதல் 27.01.2022 வரை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து , தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 27.01.2022. மேலும் காலஅவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

இவைதவிர பொதுவான அறிவுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,  தேர்வர்கள் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்விற்கு விண்ணப்பிக்க தங்கள் பள்ளிக்கு வரும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். 

மேலும் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கூடுதல் விவரங்களை அறியலாம். 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
Minister Rajmohan: பாடப்புத்தம் இனி படப்புத்தகம், குறையும் பை சுமை, கதைவழி கணிதம்: அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு
நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தி நேற்று கைது... இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
ராகுல் காந்தி நேற்று கைது.. இன்று கண்டனம்.! எதிர்ப்பு தெரிவிக்க விஜய் காலம் தாழ்த்தியது ஏன்.? பரபரப்பு பின்னணி
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Minister Rajmohan: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் போராடிய மாணவர்கள் கைது ஏன்? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்!
Cockroach Party : 'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ தமிழ்நாட்டில் பெருகும் இளைஞர்கள் ஆதரவு..!
'கரப்பான் பூச்சி கட்சி உருவானது எப்படி?’ பின்னணியும் நோக்கமும்..!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
மாணவர்கள் மீது தாக்குதல்..! ”நேரத்தை வீணடிக்காதீர்கள், எங்களுக்கு விருப்பமில்லை” CJI கருத்தால் அதிர்ச்சி
அசுரத்தனமாக அதிகரிக்கும் அரிசி விலை; என்ன காரணம்? அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை
அசுரத்தனமாக அதிகரிக்கும் அரிசி விலை; என்ன காரணம்? அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க கோரிக்கை
BJP DMK: ”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் OK-வா - TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்” திமுகவிற்கு பாஜக அழைப்பு?
Cheapset 6 Seater: நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான 6 சீட்டர் - கடும் உழைப்பாளி, எளிய டிசைன், 850KM மைலேஜ் - EMI விவரங்கள்
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்
டைனிங் டேபிள் வேண்டாமே; தரையில் சம்மணமிட்டு சாப்பிடுவதால் இவ்ளோ நன்மைகளா? அறிவியல் விளக்கம்
Embed widget