மேலும் அறிய

Rs 1000 for School Students: மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1000: திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!

மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1000 வழங்க வகை செய்யும் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு மாதாமாதம் ரூ.1000 வழங்க வகை செய்யும் முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதி என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது. மாநிலப்‌ பாடத்திட்டத்தின்‌ கீழ்‌ பதினொன்றாம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவர்கள்‌ இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மாதாமாதம் ரூ.1000 

 தமிழ்நாட்டில்‌ அரசுப்‌ பள்ளி மாணவ மாணவியர்களின்‌ திறனைக்‌ கண்டறிவதற்கும்‌, அவர்களை ஊக்குவிக்கும்‌ வகையிலும்‌, 2023- 2024 ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ "தமிழ்நாடு முதலமைச்சர்‌ திறனாய்வுத்‌ தேர்வு" நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வில் 1000 மாணவர்கள்‌தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். நடைமுறையில்‌ உள்ள இட ஒதுக்கீட்டைப் பின்பற்றி 500 மாணவர்கள்‌, 500 மாணவியர்கள்‌ தேர்வு செய்யப்படுவர். குறிப்பாக உதவித் தொகையாக ஒரு கல்வி ஆண்டிற்கு ரூ.10,000  (மாதம்‌ ரூ.1000, வீதம்‌ ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும்‌) இளநிலை பட்டப் படிப்பு வரை வழங்கப்படும்‌. இதற்கு ஆகஸ்ட் 7 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. 

இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்கக இயக்குநர் சேதுராம வர்மா அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌, அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ (இடைநிலை) மற்றும் அனைத்து அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்களுக்கும் வழங்கிய அறிவுறுத்தலில், "செப்டம்பர் 23ஆம் தேதி அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு முதலமைச்சர்‌ திறனாய்வுத்‌ தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தமிழகத்தில்‌ உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ பதினொன்றாம்‌ பயிலும்‌ வகுப்பு மாணவர்கள்‌ www.dge.tn.gov.in என்ற இணையதளம்‌ மூலாக விண்ணப்ப படிவத்தினை நாளை (18.08.2023) வரை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்.

அவ்வாறு பதிவிறக்கம்‌ செய்யப்படும்‌ விண்ணப்பத்தினைப்‌ பூர்த்தி செய்து தேர்வு கட்டணம்‌ ரூ.50/- (ரூபாய்‌ ஐம்பது மட்டும்‌) சேர்த்து 18.08.2023-ற்குள்‌ மாணவர்‌ பயிலும்‌ பள்ளித்‌ தலைமையாசிரியரிடம்‌ ஒப்படைக்க வேண்டும்‌" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளிலும்‌ பதினொன்றாம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவ- மாணவியர்‌ இத்தேர்விற்கு விண்ணப்பித்திட பள்ளித்‌ தலைமை ஆசிரியர்கள்‌ உரிய அறிவுரைகள்‌ வழங்க வேண்டும்‌. தேர்வு தொடர்பான அறிவிப்பினை மாணவர்கள்‌ அறியும்‌ வண்ணம்‌ அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளின்‌ அறிவிப்புப்‌ பலகையில்‌ ஒட்டவும்‌, அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள்‌ விண்ணப்பித்திட ஊக்குவித்திடவும்‌ அனைத்து அரசு மேல்நிலைப்‌ பள்ளித்‌ தலைமை ஆசிரியர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

மாணவர்கள் https://tnegadge.s3.amazonaws.com/notification/TCMTSE/1691395473.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, தமிழ்நாடு முதலமைச்சர்‌ திறனாய்வுத்‌ தேர்வு விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். 

தமிழ்நாடு முதலமைச்சர்‌ திறனாய்வுத்‌ தேர்வு குறித்து விரிவாக அறிய: https://tnegadge.s3.amazonaws.com/notification/TCMTSE/1690884982.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget