மேலும் அறிய

தொடங்கியது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முன்பதிவு; எப்படி விண்ணப்பிக்கலாம்? எப்போது தேர்வு?

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 7 கடைசித் தேதி என்ற நிலையில், இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க மே 7 கடைசித் தேதி ஆகும். 

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு (மெயின்ஸ்), முதன்மைத் தேர்வு (அட்வான்ஸ்டு) என்று 2 கட்டங்களாகப் பிரித்து நடத்தப்படுகிறது. ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அட்வான்ஸ்டு தேர்வை எழுதத் தகுதியானவர்கள். அட்வான்ஸ்டு தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகிய கல்வி நிறுவனங்களில் இடம் ஒதுக்கப்படுகிறது. 

இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) நடத்துகிறது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. இவை தாண்டிய பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.

மே 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தேர்வர்களின் வசதிக்கு ஏற்ப, ஜே.இ.இ. தேர்வு ஆண்டுதோறும் நான்கு கட்டங்களாகத் தேசியத் தேர்வுகள் முகமையால் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு நேற்று (ஏப்ரல் 27) தொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க மே 7ஆம் தேதி கடைசித் தேதி ஆகும். அன்று இரவு 11.30 மணி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். மே 10ஆம் தேதி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

தேர்வு எப்போது?

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு மே 26ஆம் தேதி நடைபெற உள்ளது. முதல் தாள் காலை 9 முதல் 12 மணி வரையும் இரண்டாவது தாள் மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

தற்காலிக விடைக்குறிப்புகள் ஜூன் 2ஆம் தேதி வெளியாக உள்ளன. மாணவர்களின்  ஆட்சேபனைகளுக்குப் பிறகு, ஜூன் 9ஆம் தேதி இறுதி விடைக் குறிப்புகள் வெளியாக உள்ளன. அதேநாளில் தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளன.

விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள் jeeadv.ac.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை மே 17 முதல் 26ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வு நடைபெறும் நாளான மே 26ஆம் தேதி வரை ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்யலாம். 

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

இந்தத் தேர்வுக்கு ரூ.3,200 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி, மாற்றுத் திறனாளித் தேர்வர்கள் இதில் பாதி மட்டும் செலுத்தினால் போதும். அதாவது ரூ.1,600 தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த பெண் தேர்வர்களும் ரூ.1,600 செலுத்தினால் போதும். 

வெளிநாட்டு மாணவர்கள், சார்க் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால், 100 டாலர்களும் சார்க் அல்லாத நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தால், 200 டாலர்களும் தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

https://jeeadv.nic.in/Applicant/Public/DirectRegFeeVerification என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

தேர்வர்கள் விண்ணப்பிக்க: https://jeeadv.nic.in/applicant என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். தேவையான தகவல்களை உள்ளிட்டு விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!
PM Yasasvi Scholarship : பள்ளி மாணவர்களுக்கு ரூ. 1.25 லட்சம் கல்வி உதவித்தொகை.! ஆவணங்கள், தகுதி என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பள்ளி மாணவர்களுக்கு ரூ. 1.25 லட்சம் கல்வி உதவித்தொகை.! ஆவணங்கள், தகுதி என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
வகுப்பறையில் தள்ளாடிய 3 மாணவிகள்... அருகில் சென்ற ஆசிரியைக்கு அதிர்ச்சி! புதுச்சேரி அரசு பள்ளியில் பரபரப்பு
வகுப்பறையில் தள்ளாடிய 3 மாணவிகள்... அருகில் சென்ற ஆசிரியைக்கு அதிர்ச்சி! புதுச்சேரி அரசு பள்ளியில் பரபரப்பு
மதுரை காலாண்டுத் தேர்வு மாற்றம்: செப்.18-25ல் தேர்வுகள்! கும்பாபிஷேகம் காரணம்
மதுரை காலாண்டுத் தேர்வு மாற்றம்: செப்.18-25ல் தேர்வுகள்! கும்பாபிஷேகம் காரணம்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Ajith:
Vijay Ajith: "மகிழ்ச்சியா இருக்கு.." லண்டனில் நடக்கப்போகும் விஜய் - அஜித் சந்திப்பு! ஏகே என்ன சொன்னார் தெரியுமா?
Modi Pezeshkian Meet: போருக்கு நடுவே இந்தியா வந்த ஈரான் அதிபர் பெஷெஷ்கியன்; பிரதமர் மோடியுடன் விவாதித்தது என்ன.?
போருக்கு நடுவே இந்தியா வந்த ஈரான் அதிபர் பெஷெஷ்கியன்; பிரதமர் மோடியுடன் விவாதித்தது என்ன.?
Xi Jinping India Visit: 7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வரும் ஷி ஜின்பிங்; பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை; எகிறும் எதிர்பார்ப்பு
7 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வரும் ஷி ஜின்பிங்; பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை; எகிறும் எதிர்பார்ப்பு
Thirumavalavan: திமுக-வை திடீரென திட்டித் தீர்த்த திருமா.. ஓ.. இதுதான் காரணமா?
Thirumavalavan: திமுக-வை திடீரென திட்டித் தீர்த்த திருமா.. ஓ.. இதுதான் காரணமா?
Omni Bus Ticket: யார் ஆட்சிக்கு வந்தாலும் இவங்க அநியாயம் நிக்காது போல? ஆம்னி பஸ்களின் தொடரும் கட்டண கொள்ளை!
Omni Bus Ticket: யார் ஆட்சிக்கு வந்தாலும் இவங்க அநியாயம் நிக்காது போல? ஆம்னி பஸ்களின் தொடரும் கட்டண கொள்ளை!
Suriya: நெட்ஃப்ளிக்ஸ் இதெல்லாம் நியாயமா? கிளாரிட்டியே இல்லாம ஒளிபரப்பாகிய விஸ்வநாத் அன் சன்ஸ்!
Suriya: நெட்ஃப்ளிக்ஸ் இதெல்லாம் நியாயமா? கிளாரிட்டியே இல்லாம ஒளிபரப்பாகிய விஸ்வநாத் அன் சன்ஸ்!
Modi Putin Meet: கைகுலுக்கி, கட்டித்தழுவி.! பிரதமர் மோடியும் விளாடிமிர் புதினும் சந்திப்பு; ஆலோசித்தது என்ன.?
கைகுலுக்கி, கட்டித்தழுவி.! பிரதமர் மோடியும் விளாடிமிர் புதினும் சந்திப்பு; ஆலோசித்தது என்ன.?
Gold Silver Rate Sep.11th: ஐயோ, போச்சே.! காலையில மகிழ்ச்சி கொடுத்து மாலையில கவுத்துவிட்ட தங்கம்.! இவ்ளோ கூடிடுச்சே.!
ஐயோ, போச்சே.! காலையில மகிழ்ச்சி கொடுத்து மாலையில கவுத்துவிட்ட தங்கம்.! இவ்ளோ கூடிடுச்சே.!
Embed widget