மேலும் அறிய

CBSE Syllabus: புதுச்சேரியில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்: ஏப்.1-ல் பள்ளிகள் திறப்பு

Puducherry CBSE Syllabus: புதுச்சேரியில் 2024- 25ஆம் கல்வி ஆண்டு முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை, அனைத்து வகுப்புகளுக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாக உள்ளது.

புதுச்சேரியில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இந்த கல்வி ஆண்டில் இருந்து சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாக உள்ளது. இதற்காக ஏப்ரல் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு என தனியாகக் கல்வி வாரியம் கிடையாது. இதனால் தமிழகத்தை ஒட்டியுள்ள புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழகப் பாடத் திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாஹேயில் கேரள பாடத்திட்டமும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதற்கிடையே மாநிலம் முழுவதும் ஒரே கல்வி முறை பின்பற்றப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இதையடுத்து 2011ஆம் ஆண்டில் என்.ஆர்.காங்கிரஸ் அரசு, புதுச்சேரி முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது. பின்னர் 2014- 15ஆம் கல்வி ஆண்டில் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. 

5ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம்

அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாக ஒவ்வொரு வகுப்புக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் 2018- 19ஆம் கல்வி ஆண்டில் 5ஆம் வகுப்புக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும் அதற்குப் பிறகு பிற வகுப்புகளுக்கு பாடத் திட்டம் கொண்டு வரப்படவில்லை. 

6ஆம் வகுப்பில் இருந்து மாணவர்கள் தமிழகப் பாடத் திட்டத்திலும், ஆந்திர மற்றும் கேரள பாடத் திட்டங்களிலும் படித்து வந்தனர். இதையடுத்து பிளஸ் 2 வரை, ஒரே பாடத்திட்டமாக சிபிஎஸ்இ-ஐ அமல்படுத்த கடந்த 2022ஆம் ஆண்டு அரசு முடிவு செய்தது. இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார்.

10, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் தமிழக பாடத்திட்டம்

இந்த நிலையில் 2023- 24ஆம் கல்வி ஆண்டு முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் 10, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் தமிழக பாடத்திட்டம் பின்பற்றப்பட்டது. அதே நேரத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் 2024- 25ஆம் கல்வி ஆண்டு முதல் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை, அனைத்து வகுப்புகளுக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமலாக உள்ளது.

சிபிஎஸ்இ வாரிய விதிகளின்படி, அரசுப் பள்ளிகள் ஏப்ரல் 1ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.

விடுமுறை எப்போது?

மாணவர்களுக்கு மார்ச் 24 முதல் 31ஆம் தேதி வரையிலும் விடுமுறை அளிக்கப்பட உள்ளது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு, இயங்கிய பிறகு மே 1 முதல் 31ஆம் தேதி வரையிலும் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஜூன் 3ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம்  வரை பள்ளிகள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

School Holiday: நாளை பள்ளிக்கு போக வேண்டாம்! திங்கட்கிழமையே விடுமுறை அறிவித்த கல்வித்துறை
School Holiday: நாளை பள்ளிக்கு போக வேண்டாம்! திங்கட்கிழமையே விடுமுறை அறிவித்த கல்வித்துறை
புதுச்சேரி ஆசிரியர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்! ‘மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயல்படுங்கள்’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி
புதுச்சேரி ஆசிரியர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம்! ‘மாணவர்களுக்கு முன்மாதிரியாக செயல்படுங்கள்’ - பள்ளிக்கல்வித்துறை அதிரடி
PM YASASVI கல்வி உதவித்தொகை: ரூ.1.25 லட்சம் வரை பெற விண்ணப்பிக்கலாம் - மாணவர்களுக்கு அழைப்பு!
PM YASASVI கல்வி உதவித்தொகை: ரூ.1.25 லட்சம் வரை பெற விண்ணப்பிக்கலாம் - மாணவர்களுக்கு அழைப்பு!
பள்ளி மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க! ₹1.25 லட்சம் வரை உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க!
பள்ளி மாணவர்களே மிஸ் பண்ணாதீங்க! ₹1.25 லட்சம் வரை உதவித்தொகை பெற உடனே அப்ளை பண்ணுங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Temples: தமிழ்நாட்டின் 52 கோயில்களில் செல்போனுக்கு தடை.. இன்று முதல் அமல்... எந்தெந்த இடங்களில்?
TN Temples: தமிழ்நாட்டின் 52 கோயில்களில் செல்போனுக்கு தடை.. இன்று முதல் அமல்... எந்தெந்த இடங்களில்?
TN Weather News: 14 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னையிலும் இன்று கனமழையா? தமிழக வானிலை அறிக்கை
14 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னையிலும் இன்று கனமழையா? தமிழக வானிலை அறிக்கை
Lionel Messi: போதும்பா முடிச்சுக்கலாம்..! சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்ஸியின் அதிரி புதிரி சாதனைகள் - முழு லிஸ்ட்
போதும்பா முடிச்சுக்கலாம்..! சர்வதேச கால்பந்து போட்டிகளில் மெஸ்ஸியின் அதிரி புதிரி சாதனைகள் - முழு லிஸ்ட்
Rasi Palan Today (01-09-2026): செப்டம்பர் முதல் நாள் எந்த ராசிக்கு சிக்கல்? - இன்றைய பலன்கள் இதோ!
Rasi Palan Today (01-09-2026): செப்டம்பர் முதல் நாள் எந்த ராசிக்கு சிக்கல்? - இன்றைய பலன்கள் இதோ!
Vanni Arasu:
Vanni Arasu: "முதலமைச்சர் விஜய் கொடுத்த துணிச்சல்லதான் நாங்க செயல்படுகிறோம்.." நெகிழ்ந்து பேசிய அமைச்சர் வன்னியரசு
Vijay PM Candidate : ’பிரதமர் வேட்பாளர் விஜய்? - பதற்றத்தில் காங்கிரஸ்’ டார்கெட் 2034..!
’பிரதமர் வேட்பாளர் விஜய்? - பதற்றத்தில் காங்கிரஸ்’ டார்கெட் 2034..!
CM Vijay: மீண்டும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?
மீண்டும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு - எவ்வளவு தெரியுமா?
"இனி பொறுக்க முடியாது!" தனிப் பெரும்பான்மைக்கு போட்ட திட்டம்... சீக்ரெட் மூவ் நகர்த்தும் விஜய்!
Embed widget