மேலும் அறிய

நீட் அல்லாத படிப்புகளுக்கு குவிந்த விண்ணப்பங்கள் ; மாணவர்களே கடைசி தேதி இதான் !

நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 7,664 பேர் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மின்னஞ்சல் மூலம் பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி: நீட் அல்லாத படிப்புகளுக்கு இதுவரை 7,664 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க பதிவு செய்துள்ள சூழ்நிலையில், 5,247 பேர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பித்துள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் உள்ள இடங்கள் சென்டாக் மூலம் உயர் கல்வி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தாண்டிற்கான சென்டாக் விண்ணப்பம் ஆன்லைனில் கடந்த 12ம் தேதி முதல் துவங்கியது. மாணவ, மாணவிகள் போட்டிக் போட்டுக்கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

இதுவரை நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 7,664 பேர் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மின்னஞ்சல் மூலம் பதிவு செய்திருந்தனர். இதில் 5,247 பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து இருந்தனர். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 4,330 மாணவர்களும், பிற மாநிலங்களில் இருந்து 917 மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

உயிரியல் சார்ந்த டிகிரி படிப்புகளுக்கு 1885 பேர், பி.பார்ம்-1603, அக்ரி- 872, பி.டெக்., - 2612, சட்டபடிப்பு- 489, டிப்ளமோ- 471, டி.ஏ.என்.எம்.,- 293 பி.வி.ஓ.சி.,- 376 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மாதம் 31ம் தேதி வரை சென்டாக் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நீட் அல்லாத UG தொழில் முறை படிப்புகளாக பி.டெக்., பி.ஆர்க், பி.எஸ்சி, வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, பி.வி.எஸ்சி,  (கால்நடை மருத்துவம்), பி.எஸ்சி., நர்சிங்., பி.பி.டி., பி.எஸ்சி., துணை மருத்துவ டிப்ளமோ படிப்புகள் விண்ணப்பிக்கலாம்.

கலை அறிவியல் படிப்புகள்

மேலும், ஆறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் சொசைட்டி கல்லுாரிகளில் உள்ள பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளிட்ட இளநிலை கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளில் சேரவும் விண்ணப்பிக்கலாம். இதேபோல் பாரதியார் பல்கலை கூடத்தில் உள்ள பி.பி.ஏ., பி.வி.ஏ., உள்ளிட்ட நுண்கலை படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். இளநிலை நீட் அல்லாத தொழில்முறை மற்றும் கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கும் பிற மாநில ஒதுக்கீடு உள்ளது. எனவே, தகுதியான பிற மாநில மாணவர்கள் இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள்

NRI மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர், ஓ.சி.ஐ., விண்ணப்பதாரர்களும் நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளில் சுய நிதி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக காமராஜர் அரசு இன்ஜியரிங் கல்லுாரியில் உள்ள பி.டெக், இடங்கள், மகளிர் இன்ஜினியரிங் கல்லுாரி, புதுச்சேரி தொழில்நுட்ப கல்லுாரில் உள்ள ஜோஸா இடங்கள், பி.எஸ்சி., வேளாண்மை தோட்டக்கலை, கால்நடை மருத்துவம், பி.எஸ்சி., நர்சிங், பி.பி.டி., பி.எஸ்சி., துணை மருத்துவ படிப்புகள், பி.பார்ம் படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்

நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது. தொழில்முறை டிகிரி, டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1,000 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 1,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கலை அறிவியல், வணிகவியல், நுண் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகளுக்கு 150 ரூபாய், இதர பிரிவினருக்கு 300 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

தொழில்முறை டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புளுக்கு சேர்த்து விண்ணப்பிக்க எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1000 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 1,500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். என்.ஆர்.ஐ., மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு, ஓ.சி.ஐ., மற்றும் ஓ.சி.ஐ., ஸ்பான்சர்டு பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என, சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை!
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Embed widget