மேலும் அறிய

Pariksha Pe Charcha 2023: மாணவர்கள் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசலாம்; ஜன.27 வரை விண்ணப்பிக்க அவகாசம்

2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்‌ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார்.

பள்ளி மாணவர்களின் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரைப் பிரதமர் மோடி சந்திக்கும் பரிக்‌ஷா பே சார்ச்சா ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு அன்றைய தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்‌ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். இந்த முறை 6-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.

நேரடியாக நடைபெற்ற பரிக்‌ஷா பே சார்ச்சா

முதன்முறையாக, பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சியான “பரிக்‌ஷா பே சார்ச்சா 1.0”, கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி டெல்லியில் உள்ள டால்கடோரா மைதானத்தில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்களுடனான “பரிக்‌ஷா பே சார்ச்சா 2.0” கலந்துரையாடல் நிகழ்ச்சியும் அதே மைதானத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்றது. மூன்றாவது ஆண்டாக பள்ளி மாணவர்களுடன் நடைபெற்ற “பரிக்‌ஷா பே சார்ச்சா 2020” கலந்துரையாடல் நிகழ்ச்சி டால்கடோரா மைதானத்தில் 2020ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்றது.


Pariksha Pe Charcha 2023: மாணவர்கள் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசலாம்; ஜன.27 வரை விண்ணப்பிக்க அவகாசம்

இந்த சூழலில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெற்ற “பரிக்‌ஷா பே சார்ச்சா 2021” நிகழ்ச்சியில் உலகெங்கும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடினார். இதற்கிடையே 2023ஆம் ஆண்டுக்கான பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி நேரடியாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி ஜனவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது. 

கலந்துகொள்வது எப்படி?

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மாணவர்கள், mygov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம். 

பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சிக்கான முன்பதிவு டிசம்பர் 30ஆம் தேதியுடன் முடிவு பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஜனவரி 27ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 


Pariksha Pe Charcha 2023: மாணவர்கள் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசலாம்; ஜன.27 வரை விண்ணப்பிக்க அவகாசம்

PPC 2023ஆம் ஆண்டுக்கான தலைப்புகள்

* உங்களின் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தெரிந்துகொள்ளுங்கள்
* நம் கலாச்சாரமே நமது பெருமை
* என் புத்தகம், என்னுடைய உத்வேகம்
* வருங்காலத் தலைமுறைக்காக சூழலைக் காப்பாற்றுங்கள் 
* என் வாழ்க்கை, எனது நலம்
* என்னுடைய ஸ்டார்ட் அப் கனவு
* STEM கல்வி/ எல்லைகள் இல்லாத கல்வி
* பள்ளிகளில் கற்க பொம்மைகள் மற்றும் விளையாட்டுகள்

பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்
பாடப்புத்தகம் மட்டுமல்ல தனித்திறமையும் முக்கியம்.! மாணவர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் அட்வைஸ்
உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ்ல பேச, எழுதத் தெரியுமா? அப்போ இந்த ரூ.10,000 அவங்களுக்குத்தான்!
உங்க வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ்ல பேச, எழுதத் தெரியுமா? அப்போ இந்த ரூ.10,000 அவங்களுக்குத்தான்!
தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?
தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
Bangkok Bar: நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Embed widget