மேலும் அறிய

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 22 கடைசி தேதி: இதுவரை 9.81 லட்சம் பேர் விண்ணப்பம்

CUET தேர்வுக்கு இதுவரை 9.81 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்வுக்கு மே 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. 

CUET தேர்வுக்கு இதுவரை 9.81 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், தேர்வுக்கு மே 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. 

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் க்யூட்  (CUET) எனப்படும் இளங்கலைக் கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். 

ஜூலை முதல் வாரத்தில் க்யூட்  தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. 

3 பிரிவுகளாகக் கேள்விகள்

பொது நுழைவுத் தேர்வு கேள்விகள் 3 பிரிவுகளாகக் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் இரண்டு பகுதிகள் இருக்கும். முதல் பகுதி கட்டாய மொழித் தேர்வாக இருக்கும். தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அசாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய 13 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மொழி சார்ந்து வாசிப்புத் திறன், சொல்லகராதி சார்ந்த கேள்விகள், அருஞ்சொல், எதிர்ச்சொல்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படும். 

இரண்டாவது பகுதியில் கூடுதலாக விருப்ப மொழித் தேர்வையும் தேர்வர்கள் எழுதலாம். ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மனி, நேபாளி, பெர்ஷியன், இத்தாலியன், அரபி, சிந்தி, காஷ்மீரி, கொங்கணி, போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தலி, திபெத்தியன், ஜப்பான், ரஷ்யன், சீனம் ஆகிய 19 மொழிகளில் இந்தத் தேர்வை எழுதலாம். 

2ஆவது பிரிவில் தேர்வர்களின் துறை சார் அறிவு சோதிக்கப்படும். மொத்தமுள்ள 27 துறைகளில் இருந்து தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான, தேவையான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு தேர்வர் 6 துறைகள் வரை தேர்வு செய்ய முடியும். பல்கலைக்கழகங்களும் துறைசார் தேர்வுகளை நடத்த முடிவு செய்யலாம்.

CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 22 கடைசி தேதி: இதுவரை 9.81 லட்சம் பேர் விண்ணப்பம்

3ஆவது பிரிவில், பொதுவான கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், மனத் திறன், கணக்குத் திறன், தர்க்க மற்றும் பகுத்தறியும் திறன் சார்ந்த கேள்விகள் இந்தப் பிரிவில் கேட்கப்படும். 

இந்த நிலையில் சியூஎட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இதுகுறித்து யுஜிசி தலைவர் மாமிதலா ஜெகதீஷ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''இளங்கலைப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கா நடத்தப்படும் தேர்வுக்கு இதுவரை 9,81,406 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 7,39,027 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்'' என்று தெரிவித்துள்ளார்.

க்யூட் தேர்வுக்கு மே 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
மாணவர்களுக்கு இலவச கூகுள் AI; கல்வி, ஆய்வை மேம்படுத்த பொன்னான வாய்ப்பு- பயன்படுத்துவது எப்படி?
VIT Vellore: ''இந்தியா செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் நாடாக மாற வேண்டும்''-டெல்லி முதல்வர் ரேகா குப்தா வலியுறுத்தல்
''இந்தியா செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் நாடாக மாற வேண்டும்''-டெல்லி முதல்வர் ரேகா குப்தா வலியுறுத்தல்
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Udhayanidhi vs Vijay : இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
இது சர்க்காரா.? இல்ல சர்க்கஸா.? தவெகவிற்கு தினசரி 2 ரீல்ஸ் தான் வேணும்- வெளுத்தெடுத்த உதயநிதி
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
அடுத்த 2 நாள் இடி, மின்னலோடு காத்திருக்கும் கன மழை.! எந்த எந்த மாவட்டங்களுக்கு அலர்ட்- லிஸ்ட் இதோ
போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
போராட்டத் தடுப்பு சுற்றறிக்கை: கல்லூரி இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்பது ஏன்? ஆசிரியர் சங்கம் சீற்றம்!
Minister Ramesh vs Sekar Babu : அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
அரசு ரகசியத்தை சேகர்பாபுவிற்கு சொன்னது யார்.? அமைச்சர் ரமேஷ் சொன்ன பரபரப்பு தகவல்- என்ன தெரியுமா.?
Girl Child Protection Scheme : பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
பெண் குழந்தைகள் இருக்கா.! ரூ.50 ஆயிரத்தை வாரி வழங்கும் அரசு- நிபந்தனைகள் என்ன.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget