மேலும் அறிய

NEET UG 2024: வெளியான நீட் மறுதேர்வு முடிவுகள்; குறைந்த முதலிட எண்ணிக்கை- யார் யாருக்கு எவ்வளவு மதிப்பெண்கள்?

2024 இளநிலை நீட் மறுதேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. தற்போது, முதலிடம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 61 ஆக குறைந்துள்ளது.

கருணை மதிப்பெண்களால் சர்ச்சை எழுந்ததை அடுத்து, 2024 இளநிலை நீட் தேர்வுக்கு மறுதேர்வு நடத்தப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் கலந்துகொண்ட யாருமே முழு மதிப்பெண்கள் பெறவில்லை.

2024ஆம் ஆண்டுக்கான இளங்கலை நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். ஜூன் 14ஆம் தேதி அன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4ஆம் தேதி இரவே, நீட் தேர்வு முடிவுகளும் வெளியாகின. இதில் வழக்கத்துக்கு மாறாக 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதல் இடம் பெற்றனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீட் தேர்வின்போது ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு, சில மாணவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பின. நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகு கருணை மதிப்பெண்கள் வழங்கிய 1,563 பேருக்கு ஜூன் 23ஆம் தேதி மறுதேர்வு அறிவிக்கப்பட்டது. அவர்களில் 816 பேர் மட்டுமே நீட் மறுதேர்வை எழுதி இருந்தனர்.

யாரெல்லாம் தேர்வு எழுதினர்?

சண்டிகரில் 2 தேர்வர்களில் ஒருவர் கூட மறு தேர்வை எழுதவில்லை. சத்தீஸ்கரில் 602 பேரில் 291 தேர்வர்கள் மட்டுமே மறு தேர்வை எழுதினர். குஜராத்தில் ஒரு தேர்வர் நீட் மறு தேர்வை எழுதி இருந்தார். ஹரியாணாவில் மறுதேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த 494 தேர்வர்களில் 287 தேர்வர்களும் மேகாலயாவில் 234 தேர்வர்களும் நீட் மறு தேர்வை எழுதி இருந்தனர். இவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறுதேர்வு நடைபெற்ற நிலையில், அண்மையில் விடைக் குறிப்புகள் வெளியாகின.

தொடர்ந்து இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.  முழு மதிப்பெண் பெற்ற 6 பேர் மறுதேர்வு எழுதலாம் என்று அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், 5 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். ஒரு மாணவர் எழுதவில்லை. இந்த 5 பேரும் 680 மதிப்பெண்கள் வரை மட்டுமே பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து மறுதேர்வில் முதலிடம் பெற்றோர் எண்ணிக்கை 61 ஆகக் குறைந்துள்ளது. பழைய மதிப்பெண் பட்டியலில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருந்த நிலையில், தற்போது, முதலிடம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 61 ஆக குறைந்துள்ளது.

மறு தேர்வு எழுதிய மாணவர்கள் https://www.nta.ac.in/Download/Notice/Notice_20240630132856.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு விடைக் குறிப்பை அறிந்து கொண்டனர்.

தேர்வு முடிவுகளை அறிவது எப்படி?

* மாணவர்கள் https://neet.ntaonline.in/frontend/web/revised-scorecard/index என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

* விண்ணப்ப எண், பிறந்த தேதி, இ- மெயில் முகவரி அல்லது தொலைபேசி எண் ஆகியவற்றை உள்ளிட வேண்டும்.

* சரியான தகவல்களை உள்ளிட்டு, நீட் மறு தேர்வு முடிவுகளை அறியலாம்.

https://exams.nta.ac.in/images/public-notice-dated-30-june-2024-declaration-of-revised-score-card.pdf என்ற இணைப்பில் மறு தேர்வு முடிவுகள் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

AI: ’’பெரியவங்க பேச்சை கேட்காதீங்க
AI: ’’பெரியவங்க பேச்சை கேட்காதீங்க" - இளைஞர்களுக்கு OpenAI சிஇஓ அறிவுரையால் சர்ச்சை!
Anna University: அரசே தொடர்ந்து உதாசீனமா? அண்ணா பல்கலை. உதவிப் பேராசிரியர்களை உடனே பணி நியமனம் செய்க; ராமதாஸ்!
Anna University: அரசே தொடர்ந்து உதாசீனமா? அண்ணா பல்கலை. உதவிப் பேராசிரியர்களை உடனே பணி நியமனம் செய்க; ராமதாஸ்!
சிவகங்கை சிறுவர்களுக்கு கலைத்திறன் போட்டி: குரலிசை, நடனம், ஓவியம் - வாய்ப்பை தவறவிடாதீர்!
சிவகங்கை சிறுவர்களுக்கு கலைத்திறன் போட்டி: குரலிசை, நடனம், ஓவியம் - வாய்ப்பை தவறவிடாதீர்!
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அனைத்து சலுகைகளும் கிடைக்குமா?
அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! அனைத்து சலுகைகளும் கிடைக்குமா?
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மோடியின் 15 லட்சம் வாக்குறுதி என்னாச்சு? அதிமுக எதிர்க்கட்சியாக கூட ஜெயிக்காது: அமைச்சர் இ. பெரியசாமி பரபரப்பு பேட்டி!
மோடியின் 15 லட்சம் வாக்குறுதி என்னாச்சு? அதிமுக எதிர்க்கட்சியாக கூட ஜெயிக்காது: அமைச்சர் இ. பெரியசாமி பரபரப்பு பேட்டி!
கன்னியாகுமரியில் IT புரட்சி! டைடல் நியோ பூங்கா: இளைஞர்களின் கனவு நனவாகுமா? வேலைவாய்ப்பு உறுதி!
கன்னியாகுமரியில் IT புரட்சி! டைடல் நியோ பூங்கா: இளைஞர்களின் கனவு நனவாகுமா? வேலைவாய்ப்பு உறுதி!
Nallakannu: ஆயுதம் ஏந்தி.. போராட்டங்களால் நிறைந்த நல்லகண்ணு வாழ்க்கை; மீசையே வைக்காத காரணம் தெரியுமா?
Nallakannu: ஆயுதம் ஏந்தி.. போராட்டங்களால் நிறைந்த நல்லகண்ணு வாழ்க்கை; மீசையே வைக்காத காரணம் தெரியுமா?
Nissan Tekton Review: மாஸ் காட்டப்போகும் நிசான்.. வரப்போது Nissan Tekton - விலை எவ்ளோ தெரியுமா?
Nissan Tekton Review: மாஸ் காட்டப்போகும் நிசான்.. வரப்போது Nissan Tekton - விலை எவ்ளோ தெரியுமா?
Nallakannu Death: இவர்தான் மாமனிதன்..! நல்லகண்ணுவின் உடலை என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா?
Nallakannu Death: இவர்தான் மாமனிதன்..! நல்லகண்ணுவின் உடலை என்ன செய்யப்போகிறார்கள் தெரியுமா?
Lunar Eclipse 2026: சந்திர கிரகணம் எப்போது? எங்கெல்லாம் தெரியும்? என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? - முழு விவரம்
சந்திர கிரகணம் எப்போது? எங்கெல்லாம் தெரியும்? என்ன செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? - முழு விவரம்
Nallakannu: நல்லகண்ணு: மகள் காது குத்து முதல் விருதுப் பணம் வரை; வியக்க வைக்கும் தியாகம்!
Nallakannu: நல்லகண்ணு: மகள் காது குத்து முதல் விருதுப் பணம் வரை; வியக்க வைக்கும் தியாகம்!
Nallakannu Death: முடிவுக்கு வந்த நூற்றாண்டு சகாப்தம்.. விடைபெற்றார் தோழர் நல்லகண்ணு!
Nallakannu Death: முடிவுக்கு வந்த நூற்றாண்டு சகாப்தம்.. விடைபெற்றார் தோழர் நல்லகண்ணு!
Embed widget