மேலும் அறிய

NEET PG | 2022 முதுநிலை நீட் தேர்வுத் தேதி அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

2022-ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு ( NEET - PG) வரும் மார்ச் மாதம் நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள 6,000-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுகலை மருத்துவ இடங்களுக்கான தேர்வுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2022-ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு ( NEET - PG) வரும் மார்ச் மாதம் நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு இன்று (ஜனவரி 15) முதல் விண்ணப்பிக்கலாம்.

அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை என்பிஇ எனப்படும் தேசியத் தேர்வுகள் வாரியம் நடத்தி வருகிறது.  2021ஆம் ஆண்டுக்கான முதுகலை நீட் மருத்துவத் தேர்வு, கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி அன்று நடத்தப்பட்டது. 

மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அக்டோபர் 9 அன்று வெளியானது. இதில், குறைந்தபட்சத் தகுதி மதிப்பெண்களைப் பெற்றவர்கள் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். அதன்படி அண்மையில் கலந்தாய்வு தொடங்கியது. 

இந்நிலையில் 2022-ம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு ( NEET - PG), வரும் மார்ச் மாதம்  12ஆம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு இன்று (ஜனவரி 15) முதல் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 4-ம் தேதி வரை விண்ணப்பப் பதிவு நடைபெற உள்ளது. 

NEET PG | 2022 முதுநிலை நீட் தேர்வுத் தேதி அறிவிப்பு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத https://nbe.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மார்ச் 12-ல் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வு முடிவுகள் மார்ச் 31ஆம் தேதி வெளியாக உள்ளன. 

ஒட்டுமொத்த முதுகலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், அகில இந்திய ஒதுக்கீட்டுத் திட்டத்தின் மூலம் 50% இடங்களை மத்திய அரசு நிரப்பும்.  இந்த, அகில இந்திய ஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ், மருத்துவ/ பல் மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27%, பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அரசு முன்னதாக அறிவித்தது. மீதமுள்ள 50% இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசு நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் தகவல்களுக்கு: https://nbe.edu.in

தொலைபேசி எண்: 022- 61087595

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
School Student: 6 முதல் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு
CENTAC 2026 | புதுச்சேரி MBBS BDS 3-ம் கட்ட சீட் ஒதுக்கீடு இன்று வெளியீடு

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
Temple: பக்தர்களுக்கு குட்நியூஸ்.! இனி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்லலாம்! ஆனால்.. ஒரு கண்டிஷன்!
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
AIADMK: 6 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செல்லும்.. அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்.. அடுத்தது என்ன?
TN EB Tender: ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
ஒரு யூனிட் ரூ.35 ஆ? ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தீர்களா? - தவெக அரசை விளாசிய திமுக
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்.. நல்லா இருக்கு உங்க நியாயம்.. தவெகவை சாடிய டிடிவி தினகரன்!
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
யூனிட் ரூ.35க்கு வாங்கினால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்: அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை
CM Vijay: இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
இன்று ஆந்திரா செல்லும் CM விஜய்..! சந்திரபாபு நாயுடு சந்திப்பு, கோயில் வழிபாடு - முழு பயண திட்டம் இதோ
GEM Veeramani: வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
வீரமணி வழக்கு.. 3 மணி நேரம், 80 கேள்விகள்: அருண் IPS-யிடம் கிடுக்குப்பிடி விசாரணை - காவல்துறை தீவிரம்
Perambur Hospital: இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
இடம் ரெடி..! பெரம்பூரில் 6 ஏக்கரில் ரூ.300 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை - எங்கு அமைகிறது தெரியுமா?
Embed widget