மேலும் அறிய

Anbumani Ramadoss: தொடரும் நீட் தற்கொலைகள்: உடனடியாக விலக்குப் பெறுக - அன்புமணி வலியுறுத்தல்

நடப்பாண்டில் தனுஷின் தற்கொலைதான் முதலும், கடைசியுமானதாக இருக்க வேண்டும்; தற்கொலைகள் தொடர அனுமதிக்கக் கூடாது.

நீட் தற்கொலைகள் தொடர்ந்து வரும் நிலையில், தேர்வில் இருந்து உடனடியாக விலக்குப் பெற வேண்டும் என்று தமிழக அரசை அன்புமணி வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்துப் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை:    

''2022-23 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுகள் வரும் 17-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். நீட் தொடங்குவதற்கு முன்பாகவே தற்கொலை நிகழ்வுகள்  தொடங்கியியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தானி (ஆட்டோ) ஓட்டுநர் கிருஷ்ணமூர்த்தியின் மகன் தனுஷ், கடந்த ஆண்டே 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று நீட் தேர்வு எழுதினார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், போதிய மதிப்பெண் பெறாததால் அவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. நடப்பாண்டிலாவது  மருத்துவப் படிப்பில் சேரும் நோக்கத்துடன் அவர், நீட் தேர்வுக்குத் தயாராகி வந்தார். இந்த நிலையில்தான் புதன்கிழமை மாலை  வீட்டில் தூக்கிட்டுக் கொண்ட தனுஷ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும்  பயனின்றி உயிரிழந்துள்ளார். மருத்துவராகும் கனவுடன் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அவர், அந்தக் கனவு நிறைவேறாதோ? என்ற அச்சத்தில் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

தனித்த ஒன்றல்ல!

மாணவர் தனுஷின் தற்கொலை தனித்துப் பார்க்கப்பட வேண்டிய நிகழ்வு அல்ல. அதைத் தனித்த ஒன்றாகப் பார்க்கக்கூடாது. நீட் தேர்வு என்ற சமூக அநீதியின் பாதிப்புகள் இன்னும் விலகவில்லை; நீட் தேர்வு குறித்த அச்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் மனங்களில் இருந்து இன்னும் அகலவில்லை என்பதையே மாணவர் தனுஷின் தற்கொலை காட்டுகிறது. நீட் தேர்வால் கடந்த 2020-ஆம் ஆண்டில்  15 பேர் தற்கொலை செய்து கொண்டனர்; கடந்த ஆண்டில் 8 பேர் தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர். நடப்பாண்டிலும் இது தொடர்கதையாகி விடக் கூடாது. நடப்பாண்டில் தனுஷின் தற்கொலைதான் முதலும், கடைசியுமானதாக இருக்க வேண்டும்; தற்கொலைகள் தொடர அனுமதிக்கக் கூடாது.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குப் பெறுவதன் மூலம்தான் மாணவர்களின் தற்கொலைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் நோக்குடன் தமிழக சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி நீட் விலக்கு சட்டம் நிறைவேற்றப்பட்டது. 142 நாட்களுக்குப் பிறகு அச்சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், நடப்பாண்டு பிப்ரவரி 8-ஆம் நாள் அதே சட்டம் தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பப்பட்டது. அச்சட்டத்தை   86 நாட்கள் கழித்து மே 3-ஆம் நாள்தான் மத்திய அரசுக்கு தமிழக ஆளுனர் அனுப்பி வைத்தார்.

தமிழக அரசின் நீட் விலக்குச் சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 60 நாட்கள் ஆகியும், அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதில் அணுவளவும் முன்னேற்றம் இல்லை. உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு சட்டம் அங்கிருந்து நகரவில்லை. மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதார அமைச்சகம், சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற்றால் மட்டும்தான் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற முடியும். நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது ஒருபுறமிருக்க, தமிழக அரசும் கடந்த 60 நாட்களாக மத்திய அரசுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்பதே உண்மை.


Anbumani Ramadoss: தொடரும் நீட் தற்கொலைகள்: உடனடியாக விலக்குப் பெறுக - அன்புமணி வலியுறுத்தல்

குடியரசுத் தலைவர் ஒப்புதல்

2022-23 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ் படிப்புக்கான நீட் தேர்வு வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அத்தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகி, அதனடிப்படையில் செப்டம்பர் மாத இறுதியில்தான் நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கும். மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாக நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று விட்டால்கூட, நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மேற்கொள்ள முடியும். ஆனால், அதற்கு தமிழக அரசு மின்னல் வேகத்தில் விரைந்து செயல்பட வேண்டும்.

நீட் விலக்கு சட்டம் ஆளுநர் மாளிகையை கடப்பதற்கே மொத்தம் 234 நாட்கள் ஆயின. அதன்பின் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு 60 நாட்கள் நிறைவடைந்து விட்டன. அடுத்த 50 நாட்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிக்கையை அரசு வெளியிட்டாக வேண்டும். 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றால், அதற்கு முன்பாக நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். 

அமைச்சர்கள் குழு அல்லது அனைத்துக் கட்சிக் குழுவை டெல்லிக்கு அனுப்பி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன் மூலம் நீட் தேர்வுக்கு அஞ்சி நடைபெறும் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்''.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?
தமிழகத்திற்கு வந்த 100 புதிய MBBS சீட்டுகள்! எந்தெந்த கல்லூரிகளுக்குத் தெரியுமா?
வாக்குறுதி கொடுத்தாச்சு... இனி ஆக்‌ஷன்தான்! தவெக அரசை தட்டி எழுப்பும் பகுதிநேர ஆசிரியர்கள்!
வாக்குறுதி கொடுத்தாச்சு... இனி ஆக்‌ஷன்தான்! தவெக அரசை தட்டி எழுப்பும் பகுதிநேர ஆசிரியர்கள்!
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
மாணவர்களுக்கு நிதித் திட்டமிடல் கற்றுக்கொடுப்பது அவசியம் - ஏன் தெரியுமா?
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Maruti S Presso: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ SUV - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார் - 25.3KM மைலேஜ் தரும் மைக்ரோ எஸ்யுவி - ரூ.4000 EMI திட்ட விவரங்கள்
Embed widget