மேலும் அறிய

NEET Coaching: ஹேப்பி நியூஸ்.. தொடங்கியது அரசுப்பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள்.. இது தெரியுமா?

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் இன்று (நவ.26-ம் தேதி) தொடங்கியுள்ளன.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் இன்று (நவ.26-ம் தேதி) தொடங்கியுள்ளன. வட்டத்துக்கு ஒரு மையம் என்ற வீதத்தில் 412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  

2018 முதல் நீட் பயிற்சி

தமிழ்நாட்டில் 2018ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு மாநில அரசு சார்பில் இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்க காலத்தில் இணையம் மூலம் ஆன்லைன் பயிற்சி நடத்தப்பட்டது. எனினும் அது எதிர்பார்த்த அளவுக்கு மாணவர்கள் மத்தியில் வெற்றியைப் பெறவில்லை. 

இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து நேரடி முறையிலான நீட் பயிற்சி வகுப்புகள் மீண்டும் இந்த ஆண்டு முதல் தொடங்க உள்ளன. முதல் கட்டமாக வாரத்திற்கு ஒரு நாள் சனிக்கிழமைகளில் மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாநிலம் முழுவதும் நவம்பர் 19ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று நீட் வகுப்புகள் தொடங்கி உள்ளன. 

412 மையங்களில் பயிற்சி

வட்டத்துக்கு ஒரு மையம் என்ற வீதத்தில் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 412 மையங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.  சென்னையில் மட்டும் 13 மையங்களில், 1500 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

வகுப்புகளில் பங்கேற்க பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர்  மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

எங்கே, எப்போது, எப்படி வகுப்புகள்?

ஒவ்வொரு மையத்திலும் அரசு, அரசு உதவி பள்ளிகளில் இருந்து 11-ம் வகுப்பில் 20 பேரும், 12-ம் வகுப்பில் 50 பேரும் பயிற்சியில் பங்கேற்கின்றனர். ஒரு மையத்துக்கு 70 பேர் வீதம் மொத்தம் 28,840 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

சென்னையில் எங்கே?

சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, லேடி வெலிங்டன் அரசு மேல்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம் ஜி.கே.எம். காலனி அரசுப் பள்ளி, கோடம்பாக்கம் அரசுப் பள்ளி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளில் பயிற்சி நடைபெற்று வருகின்றன.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சுட்டெரிக்கும் சூரியன்; தற்காத்துக்கொள்வது எப்படி? மாணவர்களுக்கு கல்வித்துறை டிப்ஸ்!
சுட்டெரிக்கும் சூரியன்; தற்காத்துக்கொள்வது எப்படி? மாணவர்களுக்கு கல்வித்துறை டிப்ஸ்!
விஐடி நுழைவுத்தேர்வு 2026! 9 நாடுகள்.. 129 நகரங்கள்.. ஆர்வத்துடன் எழுதும் மாணவர்கள்.. முடிவுகள் எப்போது?
விஐடி நுழைவுத்தேர்வு 2026! 9 நாடுகள்.. 129 நகரங்கள்.. ஆர்வத்துடன் எழுதும் மாணவர்கள்.. முடிவுகள் எப்போது?
ஒரு பள்ளிக்கு 3.11 மாணவர்களை சேர்ப்பதா சாதனை? கொண்டாட எதுவும்  இல்லை- அன்புமணி வேதனை
ஒரு பள்ளிக்கு 3.11 மாணவர்களை சேர்ப்பதா சாதனை? கொண்டாட எதுவும்  இல்லை- அன்புமணி வேதனை
புதுச்சேரியில் ‘இந்தி’ மொழி கட்டாயம் : கல்வித் துறையின் சுற்றறிக்கையால் கிளம்பிய விவாதம்!
புதுச்சேரியில் ‘இந்தி’ மொழி கட்டாயம் : கல்வித் துறையின் சுற்றறிக்கையால் கிளம்பிய விவாதம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNEB: டிரான்ஸ்பார்மர் கொள்முதல் சர்ச்சை... சிபிஐ-க்கு மாற்றப்பட்ட விசாரணை! தமிழக அரசுக்கு சிக்கலா?
TNEB: டிரான்ஸ்பார்மர் கொள்முதல் சர்ச்சை... சிபிஐ-க்கு மாற்றப்பட்ட விசாரணை! தமிழக அரசுக்கு சிக்கலா?
ரூ.397 கோடி ட்ரான்ஸ்ஃபார்மர் ஊழலில் சிபிஐ விசாரணை: திமுக ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி- அன்புமணி
ரூ.397 கோடி ட்ரான்ஸ்ஃபார்மர் ஊழலில் சிபிஐ விசாரணை: திமுக ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி- அன்புமணி
சுட்டெரிக்கும் சூரியன்; தற்காத்துக்கொள்வது எப்படி? மாணவர்களுக்கு கல்வித்துறை டிப்ஸ்!
சுட்டெரிக்கும் சூரியன்; தற்காத்துக்கொள்வது எப்படி? மாணவர்களுக்கு கல்வித்துறை டிப்ஸ்!
TN Election 2026: எல்லாம் சரி..! ரஜினி, அஜித் ரசிகர்களின் ஓட்டு யாருக்கு போச்சு? ஊரை சுற்றி வம்பிழுத்த TVK பாய்ஸ்
TN Election 2026: எல்லாம் சரி..! ரஜினி, அஜித் ரசிகர்களின் ஓட்டு யாருக்கு போச்சு? ஊரை சுற்றி வம்பிழுத்த TVK பாய்ஸ்
கேன்சர் ஆபத்து..!
கேன்சர் ஆபத்து..! "கெமிக்கல், கல்லு வெச்சா.. " மாம்பழ வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை வார்னிங்
ஒரு பள்ளிக்கு 3.11 மாணவர்களை சேர்ப்பதா சாதனை? கொண்டாட எதுவும்  இல்லை- அன்புமணி வேதனை
ஒரு பள்ளிக்கு 3.11 மாணவர்களை சேர்ப்பதா சாதனை? கொண்டாட எதுவும்  இல்லை- அன்புமணி வேதனை
Bajaj Chetak EV: கூகுள் மேப்ஸ், ரைட் மோட்கள், 80KM ஸ்பீட் - பஜாஜ் சேடக்கில் டக்கரான அப்டேட்கள், விலையில் சர்ப்ரைஸ்
Bajaj Chetak EV: கூகுள் மேப்ஸ், ரைட் மோட்கள், 80KM ஸ்பீட் - பஜாஜ் சேடக்கில் டக்கரான அப்டேட்கள், விலையில் சர்ப்ரைஸ்
TN Election 2026 Exit Poll: தமிழகம் - தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு - எங்கு? எப்போது? வரும், எப்படி பார்க்கலாம்?
TN Election 2026 Exit Poll: தமிழகம் - தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு - எங்கு? எப்போது? வரும், எப்படி பார்க்கலாம்?
Embed widget