மேலும் அறிய

கவலையே படாதீர்கள்.. எனது மகனும் இதான் படிக்கிறான் - அமைச்சர் அன்பில் மகேஷ்

பிரெஞ்சு மொழி கடினமாக இருந்ததால் மீண்டும் தமிழ் மொழியை தனது மகன் தேர்ந்தெடுத்து படித்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு

மகிழ் முற்றம் திட்டம் தொடக்கம்

சென்னை சூளைமேடு ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் "மகிழ் முற்றம்" திட்டத்திற்கான கையேடு மற்றும் இலச்சினையை துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை செயலர் மதுமதி,  துறை இயக்குநர் கண்ணப்பன் மற்றும் அதிகாரிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் ;

மாணவ குழுவில் பொறுப்பில் இருப்பவர்களுக்கு பாராட்டுக்கள் மட்டுமல்ல விமர்சனங்களும் வரும் செய்யாத தவறுக்கு பேசுகிறார்கள் என்று வருந்தக் கூடாது. தவறு என்றால் சுட்டி காட்டுங்கள் , சிறப்பாக இருந்தால் தட்டிக் கொடுங்கள் என ஊடகத்தினருக்கு கோரிக்கை வைத்தார்.

மாதிரி சட்டமன்றம், நாடாளுமன்றம் மூலம் அது பற்றி தெரிந்து கொள்ள முடியும். ஆசிரியர் , மாணவர்கள் இடையில் ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்சினைகளை சரி செய்ய மாணவர்கள், ஆசிரியர்களையும் தேர்வு செய்துள்ளோம். தனியார் பள்ளிகளில் தான் ஹவுஸ் இருக்க வேண்டுமா ? அரசுப் பள்ளியில் இருக்க கூடாதா ? என்று தான் இந்த திட்டம். மாணவர்கள் இடையே உளவியல் ரீதியான மாற்றத்தை இந்த மகிழ் முற்றம் ஏற்படுத்தும் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ; 

மழை நேரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவது காலதாமதம் ஏற்படுவது குறித்த கேள்விக்கு , மழை காலங்களில் மாவட்ட ஆட்சி தலைவர்கள் விடுமுறை முன்கூட்டியே சொல்ல வேண்டும் என கூறியிருக்கிறேன்.

ஒரே மாவட்டத்தில் ஒரு இடத்தில் மழை பொழிகிறது, ஒரு இடத்தில் இல்லை என்றால் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முடிவெடுத்து கொள்ளலாம் என தற்போது ஆட்சியர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். மேலும், இனி இதுபோன்ற குழப்பங்கள் ஏற்படாது.

அமைச்சரின் இரண்டாவது மகன் பிரெஞ்சு பயில்வதாக பேசிய வீடியோ வைரல் ஆனது குறித்த கேள்விக்கு ; 

எனது மகன் 6 ஆம் வகுப்பு வரை தமிழ் பாடத்தை தான் படித்தார். 7 ஆம் வகுப்பில் புதிதாக ஒரு மொழியை கற்க முயற்சி செய்வதாக பிரெஞ்சு மொழியை தேர்வு செய்து படித்தார். அது கடினமாக இருப்பதாக தற்போது தமிழ் மொழிக்கு மாறிவிட்டார். கவலையே படாதீர்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகன் தமிழ் மொழியில் தான் படிக்கிறார்.

தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கை குறித்தான கேள்விக்கு ;

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை தொடர்ந்து எதிர்த்து தான் வருகிறோம். மாநில கல்விக் கொள்கை தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தி தான் வருகிறோம்.

மாநில கல்வி கொள்கை எப்போது செயல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு ,

ஒட்டு மொத்தமாக கருத்து வாங்கியிருக்கிறோம். அது சார்ந்தே பள்ளிக்கல்வித் துறை செயல்பட்டு வருகிறது. அதனை வரக் கூடாது என்பதற்காகவே தேசிய கல்வி கொள்கையை திணிக்கப் பார்க்கிறார்கள். அதனை ஏற்காமல் செயல்படுத்தி வருவது நம் மாநில கல்வி கொள்கை சார்ந்ததே, என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலளித்தார்.

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர் தங்கும் விடுதிகள்; மதுரையில் சிறப்பு சட்டக்கல்லூரி- உயர் கல்வித்துறைக்கு என்னென்ன அறிவிப்புகள்?
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 LIVE: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
Embed widget