மேலும் அறிய

மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம்... 418 பள்ளி வாகனங்களில் ஆய்வு.. தகுதியில்லாத வாகனங்கள் நிராகரிப்பு..!

மயிலாடுதுறையில்  57 பள்ளிகளை சேர்ந்த 418 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் சரியான முறையில் இயங்காமல் இருந்து வந்தது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து, தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக மீண்டும் பள்ளிகள் சீராக இயங்கி தொடங்கியது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் 13ஆம் தேதி ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. 

மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம்... 418 பள்ளி வாகனங்களில் ஆய்வு.. தகுதியில்லாத வாகனங்கள் நிராகரிப்பு..!

அதைத்தொடர்ந்து பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ மாணவர்களுக்கு மே 31-ஆம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதற்கிடையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. அதனை அடுத்து திட்டமிட்டபடி ஜூன் 13ம் தேதி தமிழகம் முழுதும் பள்ளிகள் திறக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வழக்கம்போல் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 843 பள்ளிகளும் செயல்பட்ட தொடங்கியுள்ளது. 

மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம்... 418 பள்ளி வாகனங்களில் ஆய்வு.. தகுதியில்லாத வாகனங்கள் நிராகரிப்பு..!

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி தாலுகாக்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி வாகனங்கள் செயல்திறன் குறித்து அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர். மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா தலைமையில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கவேல், மாவட்ட கல்வி அலுவலர்கள் குமார், செல்வராஜ்,  மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர்  நாகராஜன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராம்குமார் விஸ்வநாதன் ஆகிய அதிகாரிகள் அடங்கிய கூட்டாய்வு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 

மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம்... 418 பள்ளி வாகனங்களில் ஆய்வு.. தகுதியில்லாத வாகனங்கள் நிராகரிப்பு..!

இந்த சோதனையில் மயிலாடுதுறை, மாவட்டத்தை சார்ந்த  57 பள்ளிகளில் உள்ள 418 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. பள்ளி வாகனங்களில் தீயணைப்பான், முதலுதவி பெட்டி, வாகனத்தின் இருக்கைகள் மற்றும் வாகன சக்கரத்தின் தன்மை, ஆவணங்கள், பதிவுச்சான்று, அனுமதிச்சீட்டு, உள்ளிட்ட வாகனத்தின் தகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து தகுதி இல்லாத வாகனங்கள் நிராகரிக்கப்படும் என்று ஆய்வு மேற்கொண்டுவரும் கூட்டாய்வு குழுவினர் தெரிவித்தனர். மேலும், பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு இலவச உடல் மற்றும் கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

1ஆம் வகுப்பு மெட்ரிக் பாடப்புத்தகத்தில் பிரதமர் மோடி சொன்ன முதலை கதை - வைரலாகும் புகைப்படம்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
சிங்கம்புணரி பள்ளியில் மாணவர்களுக்கு வாக்குச்சீட்டு தேர்தல்: ஜனநாயகத்தின் முதல் பாடம்!
மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
மயிலாடுதுறை கலெக்டர் ஆபீஸில் 'ரூம் நம்பர் 409'.. மாணவர்களின் லைஃப்ல மேஜிக் நடக்கும் இடம்..
ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 
ஒரே ஆசிரியருடன் இயங்கும் தொடக்கப்பள்ளி... தடுமாறும் திருவிடைமருதூர் மாணவர்களின் கல்வி! 
நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே! நடப்புத் தேர்விலேயே 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புக: தமிழக அரசுக்குத் தேர்வர்கள் கண்ணீர் கோரிக்கை!
நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே! நடப்புத் தேர்விலேயே 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புக: தமிழக அரசுக்குத் தேர்வர்கள் கண்ணீர் கோரிக்கை!

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
“நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்!” லண்டனுக்கு செல்லும் முன் ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan released : அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்க மறுப்பு.! தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த நீதிபதி- நடந்தது என்ன.?
அனிதா ராதாகிருஷ்ணனை சிறையில் அடைக்க மறுப்பு.! தவெக அரசுக்கு ஷாக் - நடந்தது என்ன?
Indus-India Vs Pakistan: ''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
''இது எல்லை தாண்டிய பயங்கரவாதம்“: கையை வெட்டுவோம் என மிரட்டிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து: இளம்பெண் உயிரைக் காத்த ஓட்டுநர், நடத்துநர்!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
ஒரே சார்ஜில் 175 கிலோமீட்டர் மைலேஜ்! பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Oben Rorr EZ Sigma இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 175 கிலோமீட்டர் மைலேஜ்! பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Oben Rorr EZ Sigma இ பைக் - விலை எவ்ளோ?
Honda Car Offers: 2.15 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. கார்களுக்கு ஆஃபரை அள்ளித் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.15 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. கார்களுக்கு ஆஃபரை அள்ளித் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Ayatollah Ali Khamenei Funeral: இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
இறந்தும் மாஸ் காட்டும் அயதுல்லா அலி கமேனி; இறுதிச் சடங்கிற்கு டெஹ்ரானில் குவிந்த 100 நாட்டு தலைவர்கள்
Embed widget