மேலும் அறிய

செட் தேர்வை நடத்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தயார் - துணை வேந்தர்

தேர்விற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம், தொழில்நுட்ப பிரச்சனையை சரி செய்யும் பணி நடந்து வருகிறது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ஐஐடி மெட்ராஸ்- பிரவர்டக் ( ஐஐடியுடன் இணைந்த ஒரு கல்வி நிறுவனம்) மற்றும் இன்ஃபாக்ட் ப்ரோ ட்ரெய்னர்ஸ் ஆகியவை இணைந்து கல்லூரி மாணவர்களின் திறன் அறிவை மேம்படுத்தும் வகையிலும் அவர்களை தொழில் முனைவைரோக்கும் வகையிலும் வங்கி மற்றும் நிதி பாடநெறி குறித்து ஆறு மாத கால பயிற்சியை நடத்தியது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 104 கல்லூரிகளை சேர்ந்த 3,000 மணவர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பித்த நிலையில் 1500 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 850 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர், ஐஐடி மெட்ராஸ் பிரவோடக்கின் துணை தலைவர் ராஜதந்திர மூத்தா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழை வழங்கினார்கள்.  

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் கூறும் பொழுது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், இப்பயிற்சியில் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்ட இந்தப் பயிற்சியின் மூலம் எதிர்காலத்தில் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவையை உறுதிப்படுத்தும் முக்கிய அம்சமாக இருக்கும் நவீன நீதித்துறையின் சிக்கல்களை சமாளிக்க தேவையான திறன்களையும் திறமைகளையும் மாணவர்களுக்கு வழங்கும் பணியில் உறுதியாக இருப்பதற்கு இந்த பயிற்சி மிக முக்கியமான அடையாளமாகும் என தெரிவித்தார். தொடர்ந்து செட் தேர்வு நடத்துவதில் உள்ள தாமதம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தொழில்நுட்ப காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள செட் தேர்வை நடத்துவதற்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தயார் நிலையில் உள்ளது. ஆன்லைன் முறையில் நடைபெறும் தேர்வு என்பதால் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தேர்வை நடத்துவதற்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ள சூழ்நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில பகுதிகளில் இருக்கும் தொழில்நுட்ப பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு வருவதாகவும் தேர்வுக்கான அறிவிப்பை அரசு தான் வெளியிட வேண்டும். 97 ஆயிரம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். எனவே செட் தேர்விற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என அவர் தெரிவித்தார்.

மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு கட்டணம் உள்பட எந்த விதமான கட்டண உயர்வும் இதுவரை செய்யப்படவில்லை. பல்கலைக்கழகத்தில் பழைய கட்டணமே நடைமுறையில் உள்ளது. பல்கலைக்கழக நிதி நெருக்கடி விரைவில் சீராகும். அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சிறப்பு நிதி பெறுவது தொடர்பாக பல்கலைக்கழகம் சார்பில் உயர்கல்வி துறையுடன் பேசி வருகிறோம் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget