(Source: ECI/ABP News/ABP Majha)
CBSE 12th result 2022: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் குறைந்த தேர்ச்சி விகிதம்; என்ன காரணம்?- முழு விவரம்
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த முறை தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, உயர் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மத்தியக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ மாணவர்கள் பொதுத் தேர்வு முடிவுகளை அறிய முடியாமலும், கல்லூரியில் சேர முடியாமலும் தவித்து வந்தனர்.
இச்சூழலில், நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆண்டுவாரியாகத் தேர்ச்சி விகிதம்:
- 2022- 92.71 சதவீதம்
- 2021- 99.04 சதவீதம்
- 2020- 91.46 சதவீதம்
- 2019- 91.10 சதவீதம்
- 2018- 86.7 சதவீதம்
- 2017- 93.12 சதவீதம்
என்ன காரணம்?
கடந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவல் காரணமாகப் பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. முந்தைய ஆண்டு மதிப்பெண்கள் மற்றும் அக மதிப்பீட்டு மதிப்பெண்கள் மூலம் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. இதனால் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது. 99.37 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
முதல் பருவம், இரண்டாம் பருவ மதிப்பெண்களின் அடிப்படையில் 12ஆம் வகுப்பு இறுதி மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்படவுள்ளது. உள் மதிப்பீடு மதிப்பெண்கள், திட்டப்பணிகள், நடைமுறைத் தேர்வுகள், பொது தேர்வுக்கு முந்தைய தேர்வு உள்ளிட்ட விவரங்கள் இறுதி மதிப்பெண் சான்றிதழில் இடம்பெறவுள்ளது.
இரண்டு பருவத் தேர்வுகள்
2021-22ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு இரண்டு பருவங்களாக நடத்தப்பட்டது. நவம்பர், டிசம்பர் மாதம் நடைபெற்ற முதல் பருவத் தேர்வில், கொள்குறி வகை வினாக்களும் இரண்டாம் பருவத் தேர்வில் பகுப்பாய்வு வகை அடிப்படையிலான கேள்விகளும் இடம்பெற்றன.
உயர் கல்வி மாணவர் சேர்க்கை தீவிரமாகத் தொடங்கிய நிலையில், மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் உள்ளிட்ட முக்கியப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஒரே மாதத்தில், ஜூலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
12ஆம் வகுப்பு முடிவுகளை தெரிந்து கொள்ள: cbse.gov.in, results.cbse.nic.in ஆகிய லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்