மேலும் அறிய

School Students Competition: கலைஞர்‌ நூற்றாண்டு விழா; பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி- பரிசுகள்; விவரம்

கலைஞர்‌ மு.கருணாநிதியின்‌ நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மாநகரில்‌ உள்ள பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தத்  திட்டமிடப்பட்டுள்ளது.

கலைஞர்‌ மு.கருணாநிதியின்‌ நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மாநகரில்‌ உள்ள பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தத்  திட்டமிடப்பட்டுள்ளது.

கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி தொடங்கியது. இதனை முன்னிட்டு 2024 ஆம் ஆண்டு பல திட்டங்கள் தமிழ்நாடு அரசால் தொடங்கி வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கலைஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் கோட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்பாட்டு வந்துள்ளன. மேலும் இல்லத்தரசிகள் பெரிதும் எதிர்பார்க்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. 

பன்னாட்டு மாரத்தான் போட்டி

இதனிடையே திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற்றது. இதில் 73 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதற்கிடையே கலைஞர்‌ மு.கருணாநிதியின்‌ நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை மாநகரில்‌ உள்ள பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தத்  திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அருங்காட்சியகங்கள்‌ துறை ஆணையர்‌ கூறி உள்ளதாவது:

சென்னை அரசு அருங்காட்சியகத்தில்‌ முன்னாள் முதல்வர் கலைஞர்‌ மு.கருணாநிதியின்‌ நூற்றாண்டு விழாவினை நினைவு கூறும்‌ பொருட்டு சென்னை மாநகரில்‌ உள்ள பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஓவியப் போட்டி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பள்ளியிலும்‌ ஒவ்வொரு பிரிவிற்கும்‌ ஓவியத்தில்‌ திறன்‌ பெற்றுள்ள ஒரு மாணவரை அனுப்பி வைக்க கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

இதில்‌ பங்கு கொள்ளும்‌ மாணவர்களுக்கு சான்றிதழ்கள்‌ மற்றும்‌ சிறந்த ஓவியத்திற்கு பரிசுகள்‌ வழங்கப்படும்‌. ஓவியங்கள்‌ அருங்காட்சியகத்தில்‌ மக்கள்‌ பார்வைக்கு கண்காட்‌சியாக வைக்கப்பட உள்ளது. இதற்கு 08.09.2023 - அன்று மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்து கொள்ள கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது. ஓவியப்‌ போட்டி 09.09.2023 அன்று முற்பகல்‌ 10.30 மணி முதல்‌ 12.30 வரை அருங்காட்சியக வளாகத்தில்‌ நடத்தப்பட உள்ளது. 

ஓவியப் போட்டி தலைப்புகள்‌: 

4,5,6 வகுப்புகள் - இயற்கை காட்சிகளுடன்‌ தமிழக நினைவுச்‌ சின்னம்‌ (அல்லது) அருங்காட்சியக அரும்‌ பொருட்கள்‌ ஏதாவது ஒன்றின்‌ ஓவியம்‌.

7, 8, 9 வகுப்புகள் - நான் விரும்பும் தமிழக பெண்‌ சுதந்திரப்‌ போராட்ட வீரர்‌ (அல்லது) திருக்குறளுடன்‌ அதற்கு உண்டான பொருளுடன்‌ ஓவியம்‌ (குறள்‌ ஓவியம்‌)

10, 11, 12 வகுப்புகள் - தமிழ்நாட்டு பண்பாட்டுடன்‌ அருங்காட்சியகத்‌ தொடர்பு குரல்‌ ஓவியம் (அல்லது) திருக்குறளுடன்‌ அதற்கு உண்டான பொருளுடன்‌ ஓவியம்‌
(குறள்‌ ஓவியம்‌)

குறிப்பு :
1. ஓவியம்‌ வரைவதற்கான ஓவியத் தாள்‌ அருங்காட்சியகத்தில் வழங்கப்படும்‌.

2.ஓவியம்‌ வரைவதற்கான பென்சில்கள்‌, வண்ணங்கள்‌ மற்றும்‌ இதர பொருட்களை மாணவர்களே கொண்டு வர வேண்டும்‌.

3. மாணவர்கள்‌ உடன்‌ தண்ணீர்‌ பாட்டில்கள்‌ வைத்துக்‌ கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.

4. மாணவர்கள்‌ தங்கள்‌ வயதிற்கான அடையாள அட்டை உடன்‌ வைத்திருக்க வேண்டும்‌. 

5. ஓவியம்‌ வரையும்போது செல்போன்‌ பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. 

6. முதலில் பதிவு செய்யும் 100 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்‌. 

தொடர்புக்கு- 04428193238, 9443526604, 9489228435, 

இ- மெயில் முகவரி: govtmuse@tn.gov.in

இவ்வாறு அருங்காட்சியகங்கள்‌ துறை ஆணையர்‌ தெரிவித்து உள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget