JACTO GEO Protest: வலுக்கும் போராட்டம்: ஜாக்டோ ஜியோவுடன் கைகோர்க்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி!
லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்- அரசுப் பணியாளர்கள் சென்னையில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே அணிதிரண்டு, கோட்டை முற்றுகையிட உள்ளோம்.
![JACTO GEO Protest: வலுக்கும் போராட்டம்: ஜாக்டோ ஜியோவுடன் கைகோர்க்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி! JACTO GEO Latest News Govt Employees Protest Teachers Protest Aramba Palli Asiriyar Kootani join hands with Jacto Geo! JACTO GEO Protest: வலுக்கும் போராட்டம்: ஜாக்டோ ஜியோவுடன் கைகோர்க்கும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/05/2d2a44e567203f0e79ca74261275852b1696503011353332_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ- ஜியோ நாளை மறுநாள் (டிச.28) தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியுடன் போராட்டத்தில் இணைவதாகத் தெரிவித்துள்ளது.
2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை, பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளாக வெளியிட்டிருந்தது. எனினும் அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
தொடர் போராட்டம்
இதற்கிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் (டிபிஐ) டெட் ஆசிரியர்கள் சங்கம், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம், ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம் ஆகிய 4 ஆசிரியர் சங்கங்கள், 3 வெவ்வேறு விதமான கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் மாதம் கடைசியில் இருந்து 10 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.
முதலில் ஆசிரியர்கள் - கல்வித்துறை அதிகாரிகளின் பலகட்டப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு, இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு உள்ளிட்ட சில அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து ஒவ்வொரு சங்கங்களாக போராட்டத்தை வாபஸ் பெற்றன.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பான ஜாக்டோ- ஜியோ, ’’ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்- அரசுப் பணியாளர்கள் தொடர்பாக தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் ஒன்றைக் கூட, ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்த பின்னரும், நிறைவேற்றுவது குறித்து எந்தவித வாக்குறுதியும் வழங்கவில்லை.
தமிழ்நாடு அரசு தொடர்ந்து மெளனம்
பல்வேறு கட்ட இயக்க நடவடிக்கைகளை ஜாக்டோ ஜியோ மேற்கொண்ட சூழ்நிலையில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தலைமையில் நிதியமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழு பேச்சுவார்த்தை நடத்தியும், வாழ்வாதார கோரிக்கையான மீண்டும்பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது.
இந்தக் கோரிக்கையினைத் தவிர, ஜாக்டோ ஜியோ ஏனைய கோரிக்கைகளை, தேர்தலில் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரி வருகிறது.
இந்த முடிவின் அடிப்படையில், 28.12.2023 அன்று இலட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்- அரசுப் பணியாளர்கள் சென்னையில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே அணிதிரண்டு, கோட்டை முற்றுகை இயக்க நடவடிக்கையினை மேற்கொண்டு, தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்வரை சந்திக்க உள்ளோம்’’ என்று ஜாக்டோ- ஜியோ தெரிவித்து இருந்தது.
லட்சக்கணக்கானோர் பங்கேற்க வாய்ப்பு
ஜாக்டோ- ஜியோ நாளை மறுநாள் (டிச.28) தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியுடன் போராட்டத்தில் இணைவதாகத் தெரிவித்துள்ளது. ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டக் கிளை இவ்வாறு தெரிவித்துள்ளது. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)