மேலும் அறிய

கையிலேயே எடுத்துச்செல்லலாம்; பக்கவாத, முதுகுத்தண்டு நோயாளிகளுக்கு குறைந்த விலையில் ரோபோ- அசத்தல் அறிமுகம்!

ஐஐடி சென்னை, வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கை மறுவாழ்வுக்காக குறைந்த விலையில், கையில் எடுத்துச் செல்லக்கூடிய பிளக்- அண்ட்-ட்ரெய்ன் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

ஐஐடி மெட்ராஸ், சிஎம்சி வேலூர் ஆகியவை இணைந்து கை மறுவாழ்வுக்காக குறைந்த விலையில் உள்நாட்டுத் தயாரிப்பு ரோபோவை உருவாக்கியுள்ளன.

த்ரைவ் ரிஹாப் சொல்யூசன்ஸ்’ நிறுவனத்தால் வணிகப்படுத்தப்பட்ட, இந்த காப்புரிமை பெறப்பட்ட தொழில்நுட்பம் துல்லியமான சிகிச்சை இயக்கம், நிகழ்நேர தரவுகள் ஆகியவற்றை வழங்குவதுடன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட, முதுகுத்தண்டில் காயமடைந்த நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருப்பதையும் உறுதி செய்கின்றன. ஐஐடி சென்னை, வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி வேலூர்) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கை மறுவாழ்வுக்காக குறைந்த விலையில், கையில் எடுத்துச் செல்லக்கூடிய பிளக்- அண்ட்-ட்ரெய்ன் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

விலைகுறைந்த சாதனம்

PLUTO’ (plug-and-train robot) என்றழைக்கப்படும் இந்த சாதனத் தொழில்நுட்பத்துக்கு தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலகம் (TTO ICSR) மூலம் உரிமம் வழங்கப்பட்டது. த்ரைவ் ரிஹாப் சொல்யூஷன்ஸ் மூலம் வணிகப்படுத்தப்பட்ட இத்தொழில்நுட்பம் தற்போதைய மறுவாழ்வுச் சந்தையில் குறிப்பிட்ட அளவு இடைவெளியை நிவர்த்தி செய்கிறது. மருத்துவமனைகள், வீடுகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ப விலைகுறைந்த மறுவாழ்வுத் தீர்வுகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த புதுமையான சாதனம் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

1,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன்

‘ப்ளூட்டோ’ இந்தியாவில் உள்ள வீடுகளில் சோதிக்கப்பட்ட முதலாவது ஒரே உள்நாட்டு ரோபோவாகும். தீவிர சிகிச்சையை அணுகக் கூடியதாக அளிக்க முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்காண்டுகளில் ப்ளூட்டோவினால் ஏற்கனவே 1,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர்.

இந்த தயாரிப்பு, கல்வி ஆராய்ச்சி வெற்றிகரமாக சாமானிய மக்களைச் சென்றடையும் தயாரிப்பாக மாற்றப்பட்டால் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு பயனளிக்கும் என்பதற்கு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம் என்று ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.


கையிலேயே எடுத்துச்செல்லலாம்; பக்கவாத, முதுகுத்தண்டு நோயாளிகளுக்கு குறைந்த விலையில் ரோபோ- அசத்தல் அறிமுகம்!

ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறை பேராசிரியர் சுஜாதா சீனிவாசன் (முதன்மை ஆராய்ச்சியாளர்), ஐஐடி மெட்ராஸ் இயந்திரப் பொறியியல் துறை மற்றும் வேலூர் சிஎம்சி உயிரிபொறியியல் துறை ஆகியவற்றில் பிஎச்டி பெற்ற டாக்டர் அரவிந்த் நேருஜி, சிஎம்சி வேலூர் உயிரி பொறியியல் துறை பேராசிரியர் சிவகுமார் பாலசுப்ரமணியன் ஆகியோர் இந்த சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். தொழில்நுட்ப பரிமாற்றம், வணிகப்படுத்துதல் ஆகியவற்றுக்கு ஐஐடி மெட்ராஸ் தொழிலக ஆலோசனை மற்றும் நிதிசார் ஆராய்ச்சி அலுவலகத்தில் உள்ள தொழில்நுட்ப பரிமாற்ற அலுவலக டிடிஓ-ஐபிஎம் செல் (TTO-IPM Cell) ஏற்பாடு செய்திருந்தது.

காப்புரிமை பெறப்பட்ட இத்தொழில்நுட்பம் துல்லியமான சிகிச்சை இயக்கங்களையும், நிகழ்நேர தரவுகளையும் வழங்குகிறது. பக்கவாதம், முதுகுத்தண்டு காயம், தண்டுவட மரப்புநோய் (multiple sclerosis), பார்கின்சன் நோய், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய நோயாளிகள் உள்ளிட்டோருக்கு சிறந்த பயனளிக்கிறது.

மறுவாழ்வு மையங்கள், புறநோயாளிகளுக்கான மருத்துவமனைகள், பெரிய மருத்துவமனைகள், நோயாளிகளின் இல்லங்கள் ஆகியவற்றில் பயன்படுத்த இந்த சாதனம் மிகவும் பொருத்தமான ஒன்றாகும். பயனுள்ள அதே நேரத்தில் குறைந்த விலையில் கை மறுவாழ்வுத் தீர்வுகள் கிடைக்கச் செய்வதில் இருந்து வந்த இடைவெளி இதனால் குறைகிறது. விலை குறைவாக இருப்பது மட்டுமின்றி கையில் எடுத்துச் செல்லும் வகையில் இருப்பதால் சுகாதாரத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
5 ஆண்டுகள் என்றார்கள்... 16 ஆண்டுகள் ஆகிவிட்டது! ஆசிரியர் தினத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?
5 ஆண்டுகள் என்றார்கள்... 16 ஆண்டுகள் ஆகிவிட்டது! ஆசிரியர் தினத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?
மயிலாடுதுறை: 120 சிறந்த ஆசிரியர்களுக்கு 'நற்றுணை விருது' வழங்கி கௌரவிப்பு..!
மயிலாடுதுறை: 120 சிறந்த ஆசிரியர்களுக்கு 'நற்றுணை விருது' வழங்கி கௌரவிப்பு..!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
PM Candidate Vijay: விஜய் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவதில் என்னென்ன சிக்கல்கள்? ஓர் அலசல்
KN Nehru: கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
Putin Vs Ukraine: உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
உக்ரைனுக்கு நிம்மதி.! அடுத்த 3 நாட்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என புதின் உத்தரவு; ஏன் தெரியுமா.?
Donald Trump New Warning: ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
ஈரானின் பிக்காக்ஸ் மலையை குறி வைத்த ட்ரம்ப்; கொடிய தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை; அதிகரிக்கும் பதற்றம்
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
பாலியல் புகார் சர்ச்சையில் புதிய திருப்பம்... ஸ்வாகதா குறிப்பிடும் அந்த இசையமைப்பாளரா இவர்?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
Gen Z பணியாளர்கள்: நெட்வொர்க்கிங் தயக்கம்...தொழில் வாய்ப்புகளை இழக்கிறார்களா?
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
எலக்ட்ரிக் கார் வாங்க சூப்பர் சான்ஸ்! நாட்டின் மலிவான டாடா டியாகோ EV-க்கு ரூ.1.45 லட்சம் தள்ளுபடி!
எலக்ட்ரிக் கார் வாங்க சூப்பர் சான்ஸ்! நாட்டின் மலிவான டாடா டியாகோ EV-க்கு ரூ.1.45 லட்சம் தள்ளுபடி!
Embed widget