மேலும் அறிய

CA Results 2022: சிஏ இடைநிலை, இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு; பார்ப்பது எப்படி?

இந்தியா முழுவதும் ஆடிட்டர் படிப்புகளுக்காக நடத்தப்படும் சிஏ இடைநிலை, இறுதித் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதை எப்படி சரிபார்ப்பது என்று பார்க்கலாம். 

இந்தியா முழுவதும் ஆடிட்டர் படிப்புகளுக்காக நடத்தப்படும் சிஏ இடைநிலை, இறுதித் தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதை எப்படி சரிபார்ப்பது என்று பார்க்கலாம். 

இந்தியாவில் ஆடிட்டர் எனப்படும் பட்டய கணக்காளராக விரும்புவோர் ஐசிஏஐ நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டியது  கட்டாயம் ஆகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசு பட்டயக் கணக்காளருக்கான சான்றிதழ் வழங்கும்.

இந்தத் தகுதித் தேர்வு முதல்நிலைத் தேர்வு (Foundation Examination), இடைநிலைத் தேர்வு (Intermediate Examination),  இறுதித் தேர்வு (Final Examination) என்று மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. பட்டப் படிப்பை முடித்தவர்கள், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. 

ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஒட்டுமொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களைப் பெற்றவர்கள், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகளுக்குத் தகுதியானவர்கள் ஆவர்.

இந்த நிலையில், 2022-ம் ஆண்டு நவம்பர் மாத அமர்வுக்கான இடைநிலைத் தேர்வு நவம்பர் மாதம் நடைபெற்றது. குறிப்பாக நவம்பர் 2 முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேபோல 2022-ம் ஆண்டு நவம்பர் மாத அமர்வுக்கான இறுதித் தேர்வு நவம்பர் மாதம் 1 முதல் 16ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று (ஜனவரி 10ஆம் தேதி) வெளியாகி உள்ளன. 


CA Results 2022: சிஏ இடைநிலை, இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு; பார்ப்பது எப்படி?

தேர்ச்சி விவரம்

இதற்கிடையே சிஏ இடைநிலை குரூப் 1 தேர்வை மொத்தம் 1,00,265 தேர்வர்கள் எழுதினர். இதில், 21,244 தேர்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். சிஏ இடைநிலை குரூப் 2 தேர்வை மொத்தம் 79,292 தேர்வர்கள் எழுதினர். இதில், 19,380 தேர்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு தேர்வுகளையும் 37, 428 பேர் எழுதிய நிலையில், 4,759 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிஏ இடைநிலை குரூப் 1 தேர்வில் 21.19 சதவீதம் பேரும் குரூப் 2 தேர்வில் 24.44 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இதற்கிடையே சிஏ இறுதி குரூப் 1 தேர்வை மொத்தம் 65,291 தேர்வர்கள் எழுதினர். இதில்,  13,969 தேர்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். சிஏ இறுதி குரூப் 2 தேர்வை மொத்தம் 64,775 தேர்வர்கள் எழுதினர். இதில், 12,053 தேர்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். சிஏ இறுதி குரூப் 1 தேர்வில் 21.39 சதவீதம் பேரும் குரூப் 2 தேர்வில் 18.61 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இதை எப்படி சரிபார்ப்பது? 

* தேர்வர்கள், இந்திய பட்டயக் கணக்காளர் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ icai.nic.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.

* முகப்புப் பக்கத்தில் 'CA result 2022' என்ற இணைய முகவையை க்ளிக் செய்யவும்.

* பதிவு எண் உள்ளிட்ட தேவையான விவரங்களை உள்ளிட்டு, சப்மிட் கொடுக்கவும்.

* அதில் வெளியாகும் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம். 

* சிஏ தேர்வு முடிவுகளுக்கான மதிப்பெண் அட்டையைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

TN By Election Results 2026 LIVE: 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
TN By Election Results 2026 LIVE: 2 தொகுதிகளிலும் தவெக முன்னிலை- 2ஆம் இடத்தில் யார்.?
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
20 லட்சம் பேரின் அரசு வேலைக் கனவு! குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க தவாக தலைவர் கோரிக்கை
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
திருச்சி மாஸ் சாதனை! உயர்கல்வி சேர்க்கையில் தமிழகத்திலேயே முதலிடம்: வெற்றிக் கொடி நாட்டியது
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்
குரூப் 4: லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள்; வெறும் 6,574 அறிவிப்பா? - கொந்தளித்த டிடிவி தினகரன்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Results LIVE: மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு போட்டி போடும் திமுக, அதிமுக
மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு போட்டி போடும் திமுக, அதிமுக
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
திருமணக்கடன் உதவித்தொகை ரூ.2 லட்சமாக உயர்வு.! யாருக்கெல்லாம்.? அசத்தல் அரசாணை இதோ..
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
Embed widget