மேலும் அறிய

உயர்கல்வி பாதிக்கப்படும் அபாயம்; மாணவர்கள் உதவித்தொகை சிக்கல்: உடனடி தீர்வு காணப்படுமா?

ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒரே ஆதாரம் இத்தகைய கல்வி உதவித் தொகைகள்தான். அவை குறித்த காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றால் அவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும்.- அன்புமணி

பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்காமல் நிறுத்தி வைப்பதா? உடனடியாக வழங்க நடவடிக்கை வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ) இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, முதலாம் ஆண்டுக்கு வழங்கப்பட வேண்டிய  கல்வி உதவித் தொகை இன்னும் வழங்கப்படாததால் அவர்கள்  கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல்  அவதிப்பட்டு வருகின்றனர். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதில் தேவையற்ற தாமதம் செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை (Post Matric Scholarship Scheme) வழங்கப்பட்டு வருகிறது. உயர் கல்வி பயிலும் ஏழைக்குடும்ப மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதற்காக இந்த உதவித் தொகையைத்தான் நம்பியிருக்கிறார்கள்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முதலாம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையாக தலா ரூ. 52,980 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

கல்வி பாதிக்கப்படும் ஆபத்து

முதலாம் ஆண்டின் இறுதியில் இந்த உதவித் தொகை முழுமையாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.52,980 வழங்குவதற்கு பதிலாக இதுவரை மொத்தம் ரூ.3025 மட்டும்தான் வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள ரூ.49,955 இன்னும் வழங்கப்படவில்லை. அதனால், அந்த மாணவர்களால் இரண்டாம் ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை. உடனடியாக கல்விக் கட்டணத்தை செலுத்தும்படி பல்கலைக்கழகம் கெடுபிடி காட்டி வரும் நிலையில், உடனடியாக கல்வி உதவித் தொகை வழங்கப்படாவிட்டால் அவர்களின் கல்வி பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயிலும் பிற இட ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை முழுமையாக வழங்கப்பட்டு விட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் இன்னும் கல்வி உதவித் தொகை வழங்கப்படாததற்கு , இதற்கு பொறுப்பான பல்கலைக்கழக அதிகாரிகளும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலத்துறை அதிகாரிகளும்தான் காரணம் ஆவர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாணவர்கள் சந்தித்து முறையிடும் போதெல்லா அவர்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்களே தவிர, எவரும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவில்லை.

ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒரே ஆதாரம் இத்தகைய கல்வி உதவித் தொகைகள்தான். அவை குறித்த காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றால் அவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும். இதை உணர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் உள்பட இதுவரை கல்வி உதவித் தொகை வழங்கப்படாத அனைத்து மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
நிறைவேற போகும் ஆயிரக்கணக்கானோரின் பேராசிரியர்களின் கனவு..! 
Student admissions in colleges : மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
ITI படிக்க ஆசையா? ரூ.20,000 சம்பளத்தில் வேலை உறுதி! – விழுப்புரம் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு!
ITI படிக்க ஆசையா? ரூ.20,000 சம்பளத்தில் வேலை உறுதி! – விழுப்புரம் கலெக்டரின் முக்கிய அறிவிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!
எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சேர அரிய வாய்ப்பு! படிப்புகளுக்கு அவகாசம் நீட்டிப்பு!

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Strait of Hormuz: “எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்
“எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்
Kanimozhi: நிக்காத பஸ்சுக்கு பஸ் ஸ்டாப் எதுக்கு? கனிமொழியை கும்பலாக கேள்வி கேட்ட பெண்கள்
Kanimozhi: நிக்காத பஸ்சுக்கு பஸ் ஸ்டாப் எதுக்கு? கனிமொழியை கும்பலாக கேள்வி கேட்ட பெண்கள்
சிங்கிள் சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்! Vida V2 இ ஸ்கூட்டரின் விலை எவ்ளோ?
சிங்கிள் சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்! Vida V2 இ ஸ்கூட்டரின் விலை எவ்ளோ?
TN weather: 5 நாட்களுக்கு விடாது பெய்யப்போகும் பேய் மழை; சென்னைக்கு நாளைக்கு இருக்கு சம்பவம் - வானிலையின் வார்னிங்
5 நாட்களுக்கு விடாது பெய்யப்போகும் பேய் மழை; சென்னைக்கு நாளைக்கு இருக்கு சம்பவம் - வானிலையின் வார்னிங்
Vijayabaskar: விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவதில் என்ன சிக்கல்? விடாப்பிடியாக எதிர்க்கும் அமைச்சர் யார்?
Vijayabaskar: விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவதில் என்ன சிக்கல்? விடாப்பிடியாக எதிர்க்கும் அமைச்சர் யார்?
Sirkazhi MLA Senthil Selvan : நான் திமுக உறுப்பினர்.! மதிமுகவிற்கு டாடா காட்டிய சீர்காழி எம்எல்ஏ.! ஷாக்காகி நிற்கும் வைகோ- நடந்தது என்ன.?
நான் திமுக உறுப்பினர்.! மதிமுகவிற்கு டாடா காட்டிய சீர்காழி எம்எல்ஏ.! ஷாக்காகி நிற்கும் வைகோ- நடந்தது என்ன.?
Minister Jagadeeswari : என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
TVK Candidates: இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
Embed widget