மேலும் அறிய

Govt Schools: அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தும் திட்டம்; கைவிடாது  முழுவீச்சில் செயல்படுத்துக- அன்புமணி

தமிழ்நாட்டில் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிடக்கூடாது; மீண்டும்  முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

தமிழ்நாட்டில் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தை கைவிடக்கூடாது; மீண்டும்  முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:

''தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் திட்டத்தின்படி, கடந்த இரு ஆண்டுகளாக ஓர் அரசுப் பள்ளி கூட தரம் உயர்த்தப்படவில்லை. நடப்பாண்டிற்கான மானியக் கோரிக்கையிலும் இதுகுறித்து அறிவிக்கப்படாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது!

தமிழ்நாட்டில் கல்விக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டம் முதன்மையான பங்காற்றுகிறது.  100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டால், அவற்றின் பயன்கள் அத்துடன் நின்றுவிடுவதில்லை. தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலைப்பள்ளிகளை ஈடுசெய்ய  100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக்கப்படும். அதே எண்ணிக்கையில் தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகள் ஆக்கப்படும்.  நிறைவாக 100 தொடக்கப்பள்ளிகள் திறக்கப்படும். அதன்மூலம் கல்விக் கட்டமைப்பு விரிவாக்கப்படும்!

பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தின்படி ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நிலையிலும் 100 பள்ளிகள் புதிதாக உருவாக்கப்படும். அவற்றுக்காக புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். இது கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகப்பெரிய மறுமலர்ச்சியை  ஏற்படுத்தும். இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டிருந்தால்,  கடந்த இரு ஆண்டுகளில்  பல நூறு புதிய பள்ளிகள் உருவாக்கப்பட்டிருக்கும்.  அது கிராமப் பகுதிகளில் கல்வி வளர  வகை செய்திருக்கும். இத்தகைய  சிறப்புமிக்கத் திட்டத்தை கைவிட்டு விடக்கூடாது!

பள்ளிகள் தரம் உயர்த்தப்படுவது புதிய அறிவிப்புகள் வராதது ஒருபுறம் இருக்க, 2020-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 165 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக  தரம் உயர்த்தும் திட்டம் மூன்று ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படவில்லை. எனவே,  ஒவ்வொரு நிலையிலும் குறைந்தது 200 பள்ளிகளையாவது தரம் உயர்த்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 165 பள்ளிகளையும் தரம் உயர்த்த வேண்டும்.''

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
அரசுப் பள்ளி ஆய்வு அராஜகம்: அமைச்சர் கீர்த்தனா மீது நயினார் நாகேந்திரன் பாய்ச்சல்!
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
கல்வி விற்பனைக்கே; வேலைக்கு அலையும் இளைஞர்கள்- பொறியியல் கல்லூரிகள் மூடலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
இந்தியா முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடல்: உ.பி. முதலிடம்- தமிழ்நாட்டில் எத்தனை? மாணவர் நிலை?
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
Minister Keerthana: கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
TN Govt Lawyer: அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
அரசு வழக்கறிஞர் பதவிக்கு ரூ.30 லட்சமா? அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம் என்ன?
Gold and Silver Rate Today: வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
வாரத்தின் 2-வது நாளிலும் குஷி.! தங்கம் விலை அதிரடி குறைவு; தற்போதைய விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
”CM விஜய் கரூர் போகக்கூடாது” திமுக போட்ட மெகா ப்ளான் - இன்று உச்சநீதிமன்றம் சொல்லப்போவது என்ன?
Car Maintenance Tips: நீங்க போற வழியில கார் திடீர்னு நின்னுடுச்சா.? ஸ்டார்ட் ஆகலையா.? பதறாம இதெல்லாம் செஞ்சு பாருங்க
நீங்க போற வழியில கார் திடீர்னு நின்னுடுச்சா.? ஸ்டார்ட் ஆகலையா.? பதறாம இதெல்லாம் செஞ்சு பாருங்க
Minister Keerthana:
Minister Keerthana: "நானே அரசுப்பள்ளி மாணவிதான்.. ஒரு தலைமுறையையே கேலி செய்யாதீர்கள்.." அமைச்சர் கீர்த்தனா ஆதங்கம்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? - வானிலை அறிக்கை
Embed widget