மேலும் அறிய

GATE 2025: பொறியியல் கேட் தேர்வு எழுதுபவர்களா?- இதைச் செய்ய இன்றே கடைசி!

GATE 2025 ட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்றே கடைசித் தேதி ஆகும். எனினும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் நவ.22 வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். 

2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் கேட் தேர்வை எழுதும் தேர்வர்கள், விண்ணப்பங்களில் திருத்தத்தைச் செய்ய இன்றே கடைசி (நவ.20) ஆகும்.

2025ஆம் ஆண்டுக்கான முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் (Graduate Aptitude Test in Engineering) தேர்வை ஐஐடி ரூர்க்கி நடத்துகிறது. பொறியியல் கேட் தேர்வு பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.  இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.  

ஆண்டுதோறும் நடைபெறும் GATE தேர்வை, ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்தும் நிலையில், 2025ஆம் ஆண்டு தேர்வை ஐஐடி ரூர்க்கி நடத்த உள்ளது. கணினி மூலம் நடைபெற உள்ள 2025 கேட் தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேரவும் பொறியியல், தொழில்நுட்பம் கட்டுமானம், அறிவியல் மற்றும் மானுடவியல் சார்ந்த முதுநிலை படிப்புகளுக்கும் முனைவர்கள் படிப்புகளில் சேருவதற்கும் கேட் தேர்வு மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகின்றன. தனியார் கல்வி நிறுவனங்களும் கேட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

வேலைவாய்ப்புக்கும் கேட் தேர்வு

அதேபோல பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் (PSUs) கேட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்களை வேலையில் சேர்க்கின்றன. 

கணினி முறையில், 3 மணி நேரத்துக்கு 30 தாள்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்வர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில், தாள்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். தினந்தோறும் இரண்டு அமர்வுகளாக கேட் தேர்வு நடைபெறும். குறிப்பாக காலை 9.30 முதல் 12.30 மணி வரையிலும் மதியம் 2.30 முதல் 5.30 வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது.

கேட் தேர்வு விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. 1 மதிப்பெண் எம்சிக்யூவின் தவறான விடைக்கு 1/3 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும். 2 மதிப்பெண் எம்சிக்யூவின் தவறான விடைக்கு 2/3 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த மதிப்பெண்கள் செல்லுபடி ஆகும்.

இந்த நிலையில் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்றே கடைசித் தேதி ஆகும். எனினும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் நவ.22 வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். 

தேர்வு குறித்த சந்தேகங்களைத் தீர்க்க https://gate2025.iitr.ac.in/faqs.html என்ற இணைப்பை க்ளிக் செய்து காண வேண்டியது முக்கியம்.

கூடுதல் விவரங்களை https://gate2025.iitr.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.   

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
2026–27 முதுகலை மாணவர் சேர்க்கை: காரைக்கால் அரசு கல்லூரி முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2026–27 முதுகலை மாணவர் சேர்க்கை: காரைக்கால் அரசு கல்லூரி முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
90% தசைச் சிதைவு, பெருமூளை வாதம்; அதனால் என்ன? ஆட்டோ ஓட்டுநர் மகனுக்கு சென்னை ஐஐடியில் இடம்!
90% தசைச் சிதைவு, பெருமூளை வாதம்; அதனால் என்ன? ஆட்டோ ஓட்டுநர் மகனுக்கு சென்னை ஐஐடியில் இடம்!
 
 "வெளிநாட்டுப் பட்டம்" என்ற போலி கௌரவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்திய மாணவர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nepal Flood: நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!
GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - ஒரு சவரனுக்கே இவ்வளவா.!!
TN Weather News: சென்னையில் தொடரும் மழை..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடரும் மழை..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Rohit Sharma: என்ன தான் வேண்டும் உங்களுக்கு? ரோகித் சர்மா ஓய்வு குறித்து BCCI பகிரங்க முடிவு - 2027 உலகக் கோப்பை?
என்ன தான் வேண்டும் உங்களுக்கு? ரோகித் சர்மா ஓய்வு குறித்து BCCI பகிரங்க முடிவு - 2027 உலகக் கோப்பை?
Isros GSLV-F17: நள்ளிரவில் சம்பவம் செய்த இஸ்ரோ..! திட்டமிட்ட இலக்கை அடைந்த EOS-05 - வேலை என்ன தெரியுமா?
நள்ளிரவில் சம்பவம் செய்த இஸ்ரோ..! திட்டமிட்ட இலக்கை அடைந்த EOS-05 - வேலை என்ன தெரியுமா?
Ration Shop : நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! யார் யாருக்கெல்லாம்.? தேதி அறிவித்த தமிழக அரசு
நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! யார் யாருக்கெல்லாம்.? தேதி அறிவித்த தமிழக அரசு
Volkswagen: 5 ஸ்டார் ரேட்டிங் காருக்கு ரூ.6 லட்சம் ஆஃபரை அள்ளிப்போட்ட ஃபோக்ஸ்வாகன் - மற்ற மாடல்களுக்கு எப்படி?
5 ஸ்டார் ரேட்டிங் காருக்கு ரூ.6 லட்சம் ஆஃபரை அள்ளிப்போட்ட ஃபோக்ஸ்வாகன் - மற்ற மாடல்களுக்கு எப்படி?
வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget