மேலும் அறிய

GATE 2023 Exam: GATE தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம் நீட்டிப்பு; எப்படி விண்ணப்பிக்கலாம்?

பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க  மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி விண்ணப்பிக்க, அக்.7ஆம் தேதி கடைசித் தேதி ஆகும். 

பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்க  மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி விண்ணப்பிக்க, அக்.7ஆம் தேதி கடைசித் தேதி ஆகும். 

மத்திய அரசு சார்பில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேர கேட் (Graduate Aptitude Test in Engineering) என்னும் உயர் கல்வி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.  

ஆண்டுதோறும் நடைபெறும் கேட் தேர்வை ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்துகின்றன. இந்த ஆண்டு கேட் தேர்வை ஐஐடி கான்பூர் நடத்துகிறது.

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் மாணவர் சேர்க்கைக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கட்டங்களாக நடைபெறும். அந்த வகையில் 2023-24ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கேட் தேர்வு, 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 4, 5, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள கேட் தேர்வுக்கு, தேர்வர்கள் ஆன்லைன் மூலம் gate.iitk.ac.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். 

மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தேர்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பாடப் பிரிவுகளில் நடத்தப்பட்டு வந்தது. 2022-ம் ஆண்டில் இருந்து மொத்தம் 29 பாடப்பிரிவுகளில் கேட் தேர்வு நடைபெற உள்ளது. 

யாரெல்லாம் எழுதலாம்?

கேட் 2023 தேர்வை, பொறியியல் பட்டதாரிகளும் கடைசி ஆண்டு மாணவர்களும் எழுதலாம். பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல், அறிவியல், வணிகம் மற்றும் கலைப் பிரிவு பட்டதாரிகளும் இந்தத் தேர்வை எழுதத் தகுதியானவர்கள். தற்போது பிடிஎஸ் மற்றும் எம்ஃபார்ம் படிப்பு படித்தவர்களும் கேட் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது.


GATE 2023 Exam: GATE தேர்வுக்கு விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம் நீட்டிப்பு; எப்படி விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்பிக்க இன்றே கடைசி

கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 30ஆம் தேதிகடைசி நாள் ஆக இருந்தது. எனினும் விண்ணப்பிப்பதற்கான தேதி அக்டோபர் 4 வரை நீட்டிக்கப்பட்டது. ஜனவரி 3ஆம் தேதி முதல் தேர்வர்கள் ஹால்டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச் 16ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. 

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் gate.iitk.ac.in என்ற இணைய முகவரியை க்ளிக் செய்யவும். 

* “Apply Online” என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

* கேட்டிருக்கும் அனைத்துத் தகவல்களையும் பூர்த்தி செய்யவும். 

* கேட் தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, தேவையான தகவல்களை நிரப்பவும். 

* கட்டணத்தைச் செலுத்தி, சப்மிட் பொத்தானை சொடுக்கவும்.

முன்னதாக அக்டோபர் 7ஆம் தேதி வரை தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம் என்று ஐஐடி கான்பூர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது தாமதக் கட்டணம் எதுவுமில்லாமலேயே மீண்டும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

GATE - 2023 NOTIFICATION

INFORMATION BROCHURE

FEE DETAILS

GATE 2023 PAPERS & SYLLABUS

QUESTION PATTERN

WEBSITE

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! பாலுடன் சாக்லேட் ஹெல்த் மிக்ஸ் வழங்கும் புதுச்சேரி அரசு!
இனி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்! பாலுடன் சாக்லேட் ஹெல்த் மிக்ஸ் வழங்கும் புதுச்சேரி அரசு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
TET 2026: ஆசிரியர் தகுதித் தேர்வு விடைக்குறிப்புகள் வெளியீடு- காண்பது எப்படி? ஆட்சேபிக்க கடைசி வாய்ப்பு!
ISRO: ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்
ஒரே ஆண்டில் 120 இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் ராஜினாமா - நட்டாற்றில் திட்டங்கள், காரணம்? புதிய கட்டுப்பாடுகள்

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
CM Vijay warning : தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
தப்பு செஞ்சா அவ்வளவு தான்... பதவியில் இருந்து உடனே நீக்கம்- அமைச்சர்களை எச்சரித்த சிஎம் விஜய்
DMK:
DMK: "தேர்தல் வாக்குறுதி vs தவெக-வின் பாசிஸ்ட் ஆட்சி" - விஜய் ஆட்சியை விமர்சிக்கும் திமுக - என்ன காரணம்?
TASMAC: குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
குடிமகன்களுக்கு இனி ஜாலி.! தமிழகம் முழுவதும் உணவகத்துடன் கூடிய Resto - Bar - புதிய பிளான் போட்ட டாஸ்மாக்
US Iran Tensions: “உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
“உலகில் எந்த சக்தியாலும் ஹார்முஸை எங்களிடமிருந்து பறிக்க முடியாது“; ட்ரம்ப்புக்கு ஈரான் நேரடி வார்னிங்
"அப்பா செய்த மிகப்பெரிய தியாகம் இதுதான்... செந்திலின் மகன் பேட்டி!"
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
125 சிசியா 350 சிசியா? தினசரி ஓட்டுவோருக்கு எந்த பைக் பெஸ்ட், எதில் மைலேஜ் அதிகம்? ஒப்பீடு
Embed widget