மேலும் அறிய

Lateral Entry: பி.இ., பி.டெக்கில் நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

தகுதி வாய்ந்த பட்டயப் படிப்பு, பிஎஸ்சி பட்டப் படிப்பு முடித்தவர்கள் நேரடி 2ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். 

2022- 23ஆம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். படிப்புகளில் நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கைக்கு இன்று (ஜூன் 24ம் தேதி) முதல் ஜூலை 23ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தகுதி வாய்ந்த பட்டயப் படிப்பு, பிஎஸ்சி பட்டப் படிப்பு முடித்தவர்கள் நேரடி 2ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். 

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பது என்ன?

தகுதி வாய்ந்த டிப்ளமோ பட்டயப் படிப்பு மற்றும்‌ பி.எஸ்‌.சி. பட்டப் படிப்பில்‌ தேர்ச்சி பெற்று முடித்த மாணவர்கள்‌ நேரடி இரண்டாமாண்டு பொறியியல் பட்டப் படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவிபெறும்‌ / அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும்‌ உறுப்புக்‌ கல்லூரிகள்‌ / அண்ணாமலை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ சுயநிதி பொறியியல்‌ கல்லுரிகளில்‌ 2022-23 ஆம்‌ கல்வியாண்டில்‌ சேர்க்கைக்கு விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை‌ இணையதளம்‌ மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல்‌ வேண்டும்‌.

இணையதளம்‌ மூலமாக விண்ணப்பிக்கத் தேவையான நெறிமுறைகள்‌ :

1) விண்ணப்பிக்கும்‌ முறை :  

www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.in என்ற இணையதளம்‌ வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல்‌ வேண்டும்‌. சான்றிதழ்களையும்‌ இணையதளத்தில்‌ பதிவேற்றம்‌ செய்ய வேண்டும்‌.

2) இணையதளம்‌ மூலமாக விண்ணப்பங்கள்‌ பதிவு செய்யும்‌ நாள்‌ :

தொடங்கும்‌ நாள்‌ : 24.06.2022 
முடிவுறும்‌ நாள்‌ : 23.07.2022

3) பதிவுக்‌ கட்டணம்‌ :

பதிவுக்‌ கட்டணம்‌ ரூ.300/-ஐ விண்ணப்பதாரர்‌  Debit Card / Credit Card / Net Banking இணையதளம்‌ வாயிலாகச் செலுத்தலாம்‌.

இணையதளம்‌ வாயிலாக பதிவுக்‌ கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்கள்‌, "The Secretary, Second year B.E./B.Tech. Degree Admissions – 2022-23, ACGCET, Karaikudi” payable at Karaikudi” என்ற பெயரில்‌ 24.06.2022 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையை பதிவுக்‌ கட்டணமாகத் தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை மையம்‌ வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்‌.

4) SC/ SCA/ ST பிரிவினர்‌ பதிவுக்‌ கட்டணம்‌ செலுத்த அவசியமில்லை.


Lateral Entry: பி.இ., பி.டெக்கில் நேரடி 2ஆம் ஆண்டு சேர்க்கை: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

5) விண்ணப்பதாரர்கள்‌ வங்கி வரைவோலையை சமர்ப்பிப்பதற்கும்‌, இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள்‌ விண்ணப்பப்‌ படிவத்தினை இணையதளம்‌ வாயிலாக பதிவு செய்வதற்கும்‌ தமிழ்நாடு பொறியியல்‌ சேர்க்கை சேவை மையத்தினை பயன்படுத்திக்‌ கொள்ளலாம்‌. அனைத்து 10 மையங்களிலும்‌ போதிய அளவில்‌ கொரோனா தடுப்பு மற்றும்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்‌டுள்ளன.

6) இந்த கல்வியாண்டில்‌ Second Year B.E./B.Tech. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின்‌ வாயிலாக மட்டுமே நடைபெறும்.

7) மேலும்‌ விவரங்கள்‌ அறிய  www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.in ஆகிய இணையதள முகவரியில்‌ "INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES" பக்கத்தில்‌ பார்க்கவும்‌.

8) தொடர்பு எண்‌ : 04565-230801, 04565-224528.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget