மேலும் அறிய

DIP, DNT மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம்! கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!

மருத்துவ பட்டயப் படிப்புகளில் சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் தெரிவித்துள்ளது.

2025- 2026ஆம் கல்வியாண்டிற்கான டிப்ளமோ (DIP / DNT) மருத்துவ பட்டயப் படிப்புக்கான சேர்க்கை அறிவிக்கையை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் வெளியிட்டுள்ளது.

2025- 2026ஆம் கல்வியாண்டிற்கு, சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகளில் உள்ள இடங்களுக்கான (DIP / DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

(DIP / DNT) பட்டயப்படிப்புகளுக்கான தகவல் தொகுப்பேட்டினை www.tnhealth.tn.gov.in, www.tnayushselection.org பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் மட்டுமே

இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழிகளிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

கட்டண விவரங்கள். பிற தகவல்களினை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள். விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnayushselection.org உள்ள உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.

பிற விவரங்கள்

விண்ணப்பிக்கும் முன் தகவல் தொகுப்பேட்டினை முழுமையாகப் படித்து சரியான தகவல்களைப் பதிவேற்றவும் மற்றும் தேவையான இடங்களில் அனைத்து அசல் சான்றிதழ்களின் PDF/ JPEG வடிவில் பதிவேற்றவும்.

விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.

படிப்புப் பிரிவு : DIP-மருந்தாளுநர் / DNT-செவிலியர், மருத்துவ பட்டயப்படிப்புகள்

படிப்பிற்கான காலம் : 2% ஆண்டுகள்

படிப்பிற்கான கல்வித்தகுதி : 10+2

கல்லூரிகளின் விவரங்கள்: அரசு ஆயுஷ் துணை மருத்துவ படிப்புப் பள்ளிகள்- 02.

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் மட்டும் இணையவழியில் விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, கோரப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களையும் இணைத்து செயலாளர், தேர்வுக்குழு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை ஆணையர் அலுவலகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை-600 106 என்ற முகவரிக்கு 23.09.2025 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க / வந்து சேர வேண்டும்.

அறிவிக்கை நாள் - 09.09.2025

தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்ய துவங்கும் நாள் - 09.09.2025

இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள் - 09.09.2025

தகவல் தொகுப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்ய கடைசி நாள் - 23.09.2025 மாலை 5.00 மணி வரை

இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள் - 23.09.2025 மாலை 5.00 மணி வரை

அரசு சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்க இணையவழி விண்ணப்பத்துடன் அனைத்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களுடன் தபால் / கூரியர் சேவை வாயிலாக சமர்ப்பிக்கவோ அல்லது நேரில் சமர்ப்பிக்கவோ கடைசி நாள் 23.09.2025 மாலை 5.00 மணி என இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
மதுரை மன்னர் கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் புரட்சி: 512 நூல்கள், புதிய இளம் படைப்பாளர்கள்!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
Embed widget