மேலும் அறிய

New Sainik Schools: நாடு முழுவதும் 23 புதிய சைனிக் பள்ளிகள்: மத்திய அரசு ஒப்புதல் - விவரம்

நாடு முழுவதும் 23 புதிய சைனிக் பள்ளிகள் பங்களிப்பு முறையில் செயல்பட, பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் 23 புதிய சைனிக் பள்ளிகள் பங்களிப்பு முறையில் செயல்பட, பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தனியார் தொண்டு நிறுவனங்கள்/ தனியார் பள்ளிகள்/ மாநில அரசுகளுடன் இணைந்து இந்த பள்ளிகள் உருவாக்கப்படும். 

இது தொடர்பாக மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

மத்திய அரசு  6ஆம் வகுப்பு முதல் வகுப்பு வாரியாக 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பள்ளிகள் தனியார் தொண்டு நிறுவனங்கள்/ தனியார் பள்ளிகள்/ மாநில அரசுகளுடன் இணைந்து உருவாக்கப்படும். நாடு முழுவதும் இதுதொடர்பாக 19 புதிய சைனிக் பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சைனிக் பள்ளிகள் சங்கம் (Sainik Schools Society) கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் சைனிக் பள்ளிகள் சங்கத்தின் கீழ் கூட்டாண்மை முறையில் செயல்படும் புதிய சைனிக் பள்ளிகளின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக 33 சைனிக் பள்ளிகள் இவ்வாறு இயங்கி வந்தன.

இந்த புதிய சைனிக் பள்ளிகள், அங்கீகாரம் பெறும் அந்தந்த கல்வி வாரியங்களுடன் இணைக்கப்படுவதுடன், சைனிக் பள்ளிகள் சங்கத்தின் கீழ் செயல்படும். புதிய பள்ளிகள், சங்கம் பரிந்துரைக்கும் விதிமுறைகளைப் பின்பற்றும்.

பின்னணி என்ன?

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் , தனியார் பள்ளிகள், மாநில அரசுப் பள்ளிகளுடன் இணைந்து 100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. இதில் 18 புதிய சைனிக் பள்ளிகளைத் தொடங்க சைனிக் பள்ளிகள் சங்கம் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது. தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்பின் கீழ் சைனிக் பள்ளி தொடங்கப்படுகிறது.

கூட்டு முறையில் புதிய சைனிக் பள்ளிகளைத் திறப்பதற்கான தகுதிகளைப் பொறுத்தவரை, சைனிக் சங்கத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டதன் அடிப்படையில் குறிப்பிட்ட தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்தல், அங்கீகரிக்கப்பட்ட துணைச் சட்டங்களுக்கு இணங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டமாக, 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கம் உள்ளது.  தேசிய கல்விக் கொள்கையின்படி, மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவது இதன் நோக்கம் ஆகும். ஆயுதப் படைகளில் சேருவதும் இதில் அடங்கும். 

இன்றைய இளைஞர்களை நாளைய பொறுப்பான குடிமக்களாக மாற்றுவதன் மூலம், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கத்துடன் கைகோத்து செயல்பட தனியார் துறைக்கு இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. வழக்கமான வாரிய பாடத்திட்டத்துடன், சைனிக் பள்ளி மாணவர்களுக்கு அகாடமிக் பிளஸ் பாடத்திட்டம் கற்பிக்கப்படும். 

இப்பள்ளிகளின் செயல்பாட்டு முறைகள் குறித்த விவரங்களை https://sainikschool.ncog.gov.in/apply-online#step-4

என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து காணலாம். ஆர்வமுள்ள மாணவர்களும் பெற்றோர்களும் இந்த இணையதளத்தைப் பார்த்து, புதிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."

இவ்வாறு மத்தியப் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் https://sainikschool.ncog.gov.in/apply-online#step-6 என்ற இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: https://sainikschool.ncog.gov.in/

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கே.ஜி. முதல் பி.ஜி. வரை; முழுவதும் இலவசக் கல்வி- வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
தமிழை உலக அரங்கிற்கு கொண்டு செல்வது எப்படி? மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியின் அசத்தல் பயிலரங்கம்!
தமிழை உலக அரங்கிற்கு கொண்டு செல்வது எப்படி? மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியின் அசத்தல் பயிலரங்கம்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘Edappadi Palanisamy : போறவங்க போங்க’ மதிமுக மாதிரி அதிமுக நடத்திக்குறேன் – தில் எடப்பாடி..!
‘மதிமுக மாதிரி அதிமுகவை நடத்திகிறேன்’ தில் எடப்பாடி..!
DMK Paranthamen : ’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு, லைம் லைட்டுக்கு வந்த பரந்தாமன்’ திமுகவில் அதிரடி மாற்றம்..!
’ஓரங்கட்டப்பட்ட சேகர்பாபு’ முன்னேறி வந்த பரந்தாமன் !
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
NEET UG 2026 Result: நீட் மறுதேர்வு முடிவுகள் ஜூலை 20-ல் வெளியீடு! மருத்துவக் கனவு நனவாகுமா?
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
கூட்டுறவு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுமா? சௌமியா அன்புமணி அதிரடி கோரிக்கை
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
மாருதி, எம்ஜி, நிசான்: ஜூலையில் இந்தியாவை அதிரவைக்கும் புதிய எஸ்யூவிகள்!
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 4 போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TN PONGAL GIFT : தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு.! ரூ.300 கோடி ஒதுக்கி அசத்திய தவெக அரசு - வெளியான அரசாணை
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு.! ரூ.300 கோடி ஒதுக்கி அசத்திய தவெக அரசு - வெளியான அரசாணை
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
தவெக-வில் விஜயபாஸ்கர்; ஊழல் பற்றி பேச விஜய்க்கு அருகதை இருக்கிறதா? திமுக கேள்வி
Embed widget