மேலும் அறிய

CUET UG 2024: க்யூட் பொது நுழைவுத் தேர்வு; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி விண்ணப்பிக்கலாம்?

CUET UG 2024 Registration: க்யூட் இளநிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 26) கடைசித் தேதி ஆகும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.  

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை, அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் இளநிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 26) கடைசித் தேதி ஆகும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.  

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

தனியார் பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்களும் க்யூட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. 2022- 23ஆம் கல்வி ஆண்டு முதல் இந்த தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில்  இந்தத் தேர்வு, ஆண்டுதோறும் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. தேசியத் தேர்வுகள் முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது. 

இந்த நிலையில் இளநிலை படிப்புக்கான க்யூட் தேர்வு 2024ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கலப்பு முறையில் நாளுக்கு 2 அல்லது 3 ஷிஃப்டுகளில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி அன்று வெளியாக உள்ளன.

இன்றே கடைசி

இதற்கான விண்ணப்பப் பதிவு பிப்.26ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (மார்ச் 26) இரவு வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் தேர்வு 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 மற்றும் 3வது வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் 13 மொழிகளில் 26 வெளிநாட்டு நகரங்கள் உட்பட 380 நகரங்களில் க்யூட் தேர்வு நடைபெற உள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

* என்டிஏவின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்துக்குச் செல்லவும்.

* அதாவது https://exams.nta.ac.in/CUET-UG/ என்னும் இணைப்பை க்ளிக் செய்யவும். அ

* அதில்,  CUET (UG) - 2024 Click Here for Registration/Login என்ற இணைப்பை சொடுக்கவும். அல்லது  https://cuetug.ntaonline.in/ என்ற இணைப்பைத் தெரிவு செய்யவும்.

* அதில், விண்ணப்ப எண், கடவுச் சொல், பாதுகாப்பு பின் ஆகியவற்றை உள்ளீடு செய்யவும்.

* தேவையான ஆவணங்கள், புகைப்படங்கள், கையெழுத்து ஆகியவற்றை உள்ளிடவும்.  

* விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, விண்ணப்பித்ததை உறுதி செய்யவும்.

கூடுதல் தகவல்களுக்கு: https://cuet.nta.nic.in/

 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

உசிலம்பட்டி: 5000 மாணவர்களின் புது காலணிகளை தூர தூக்கி வீசிய தலைமையாசிரியர் சஸ்பெண்ட் !
உசிலம்பட்டி: 5000 மாணவர்களின் புது காலணிகளை தூர தூக்கி வீசிய தலைமையாசிரியர் சஸ்பெண்ட் !
TNPSC Free Coaching : TNPSC தேர்வுக்கு தயாராகுறீங்களா? ஒரு ரூபாய் செலவு இல்லாமல் இலவச பயிற்சி - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
TNPSC தேர்வுக்கு தயாராகுறீங்களா? ஒரு ரூபாய் செலவு இல்லாமல் இலவச பயிற்சி - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Madurai உசிலம்பட்டி: அரசுப் பள்ளி மாணவர் காலணிகள் குப்பையில் - மர்மம்!
Madurai உசிலம்பட்டி: அரசுப் பள்ளி மாணவர் காலணிகள் குப்பையில் - மர்மம்!
UPSC: குடிமைப்பணி தேர்வு: முறைகேடுகளுக்கு மத்தியில் பலத்த கெடுபிடியுடன் நிறைவு!
UPSC: குடிமைப்பணி தேர்வு: முறைகேடுகளுக்கு மத்தியில் பலத்த கெடுபிடியுடன் நிறைவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பாட்டிக்கு காஸ்ட்லி கண்ணாடியை கிஃப்டா கொடுத்த விஜய்..! என்ன விலை தெரியுமா?
CM Vijay: பாட்டிக்கு காஸ்ட்லி கண்ணாடியை கிஃப்டா கொடுத்த விஜய்..! என்ன விலை தெரியுமா?
உயிருக்குப் போராடிய பெண்... சாப்பிடச் சென்ற மருத்துவர்? சீர்காழியில் பரிதாபம்!
உயிருக்குப் போராடிய பெண்... சாப்பிடச் சென்ற மருத்துவர்? சீர்காழியில் பரிதாபம்!
TN Cabinet Reshuffle : ’தயாராகும் பட்டியல்’ பதவியை இழக்கப்போகும் அமைச்சர்கள் யார், யார் ?
‘மாற்றத்திற்கு தயாராகும் அமைச்சரவை’ HIT லிஸ்டில் இருக்கும் பெயர்கள்..!
JCB வாங்க EMI: வாடகைக்கு விட்டு மாசாமாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்- இதோ திட்டம்!
JCB வாங்க EMI: வாடகைக்கு விட்டு மாசாமாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்- இதோ திட்டம்!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
Hector Tomahawk First Look: எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் முதல் பார்வை; கம்பீரமான எஸ்யூவியின் ஈர்க்கும் 5 முக்கிய அம்சங்கள் இதோ
எம்ஜி ஹெக்டர் டோமாஹாக் முதல் பார்வை; கம்பீரமான எஸ்யூவியின் ஈர்க்கும் 5 முக்கிய அம்சங்கள் இதோ
US Army Sec. Resigns: ட்ரம்ப்புக்கு ஷாக்.! ஈரான் போருக்கு நடுவே அமெரிக்க ராணுவச் செயலாளர் ராஜினாமா.! பின்னடைவா.?
ட்ரம்ப்புக்கு ஷாக்.! ஈரான் போருக்கு நடுவே அமெரிக்க ராணுவச் செயலாளர் ராஜினாமா.! பின்னடைவா.?
Gold Silver Rate Sep.1st: மாலையில் மகிழ்ச்சி கொடுத்த தங்கம்.! பரவாயில்லையே, இவ்ளோ குறைஞ்சுடுச்சே.! தற்போதைய விலை என்ன.?
மாலையில் மகிழ்ச்சி கொடுத்த தங்கம்.! பரவாயில்லையே, இவ்ளோ குறைஞ்சுடுச்சே.! தற்போதைய விலை என்ன.?
Embed widget