மேலும் அறிய

CUET UG 2022: க்யூட் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்- அவகாசத்தை மேலும் நீட்டித்த யுஜிசி

தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, க்யூட் இளங்கலைத் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்று, க்யூட் இளங்கலைத் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சியுஎட் (CUET) எனப்படும் கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முடிவடைவதாக இருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் விண்ணப்பிக்க மே 22-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் தேர்வு

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். ஜூலை மாதத்தில் இந்தத் தேர்வு நடைபெறும். 

இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. 

3 பிரிவுகளாகக் கேள்விகள்

பொது நுழைவுத் தேர்வு கேள்விகள் 3 பிரிவுகளாகக் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில் இரண்டு பகுதிகள் இருக்கும். முதல் பகுதி கட்டாய மொழித் தேர்வாக இருக்கும். தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அசாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய 13 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மொழி சார்ந்து வாசிப்புத் திறன், சொல்லகராதி சார்ந்த கேள்விகள், அருஞ்சொல், எதிர்ச்சொல்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படும். 

இரண்டாவது பகுதியில் கூடுதலாக விருப்ப மொழித் தேர்வையும் தேர்வர்கள் எழுதலாம். ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மனி, நேபாளி, பெர்ஷியன், இத்தாலியன், அரபி, சிந்தி, காஷ்மீரி, கொங்கணி, போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தலி, திபெத்தியன், ஜப்பான், ரஷ்யன், சீனம் ஆகிய 19 மொழிகளில் இந்தத் தேர்வை எழுதலாம். 

2ஆவது பிரிவில் தேர்வர்களின் துறை சார் அறிவு சோதிக்கப்படும். மொத்தமுள்ள 27 துறைகளில் இருந்து தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான, தேவையான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு தேர்வர் 6 துறைகள் வரை தேர்வு செய்ய முடியும். பல்கலைக்கழகங்களும் துறைசார் தேர்வுகளை நடத்த முடிவு செய்யலாம்.

3ஆவது பிரிவில், பொதுவான கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், மனத் திறன், கணக்குத் திறன், தர்க்க மற்றும் பகுத்தறியும் திறன் சார்ந்த கேள்விகள் இந்தப் பிரிவில் கேட்கப்படும். 


CUET UG 2022: க்யூட் தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்- அவகாசத்தை மேலும் நீட்டித்த யுஜிசி

நீட்டிக்கப்படும் கால அவகாசம் 

இந்த நிலையில், பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கு மே 6ஆம் தேதி கடைசியாக இருந்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கால அவகாசம் கடைசியாக மே 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மாணவர்கள் திருத்தங்களை மே 25 முதல் மே 31 வரை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் மாணவர்களின் தரப்பில், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதை ஏற்று, இளங்கலை க்யூட் தேர்வுக்கு மீண்டும் மே 31-ம் தேதி இரவு 9 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு தேர்வர்கள் https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 

கூடுதல் விவரங்களுக்கு:  https://nta.ac.in/Download/Notice/Notice_20220327205829.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து படிக்கவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NTK Candidates: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்; நாதக வேட்பாளர்களை அறிவித்த சீமான்; யார் யார் தெரியுமா.?
Tamil Nadu By Election : விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள்.! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
விஜய்க்கு ஷாக் கொடுத்த கம்யூனிஸ்ட் .! தாராபுரத்தில் CPI.. மதுராந்தகத்தில் CPM போட்டி
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
ஆபாச பேச்சு தான் திமுகவின் கடைசி ஆயுதம்.. ஸ்டாலினை வெளுத்து வாங்கிய சிடிஆர் நிர்மல்குமார்!
A Raja DMK : “வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
“வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் தயக்கமில்லை... நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” – ஆ.ராசா
Pension : ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
ஓய்வூதியதாரர்கள் எதிர்பார்த்த சூப்பர் நியூஸ்.! செப்.14 முதல் பணம் டெபாசிட்.? தமிழக அரசு அறிவிப்பு
Chennai Power Cut: சென்னைல வரும் செவ்வாய்க்கிழமை (15.09.2026) எங்கெங் பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல வரும் செவ்வாய்க்கிழமை (15.09.2026) எங்கெங் பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Rameswaram New Road : ராமேஸ்வரத்திற்குள் செல்ல 100 அடி அகலத்தில் புதிய மாற்று சாலை.! 36 கோடியில்- எந்த வழியில் செல்லுது தெரியுமா.?
ராமேஸ்வரம் செல்ல இனி புதிய வழி.! 100 அடி அகலத்தில் மாற்றுச்சாலை- பிரம்மாண்ட திட்டம்- எந்த வழியில்.?
தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!
தெற்கு ரயில்வே தொழில் பழகுநர் அறிவிக்கை: தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை மறுப்பு - அன்புமணி கண்டனம்!
Embed widget