மேலும் அறிய

CUET PG 2025: இன்றே கடைசி; க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? இதோ விவரம்!

CUET PG 2025 Registration: 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) மார்ச் 11 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

CUET PG Exam 2025: மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அரசுக் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படும் முதுநிலை கலை, அறிவியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் க்யூட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (பிப்.8) கடைசி ஆகும். தனியார் கல்வி நிறுவனங்களும் தற்போது க்யூட் மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன.

கட்டாயம் ஆக்கப்பட்ட க்யூட் தேர்வு?

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளில் சேர, சியுஇடி எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தத் தேர்வு 2022- 23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டது. அதே நேரத்தில் மாநில அரசின் கீழ் செயல்படும் மாநிலப் பல்கலைக்கழகங்களும் தனியார் பல்கலைக்கழகங்களும் விரும்பினால் க்யூட் நுழைவுத் தேர்வைப் பின்பற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அவ்வாறே தற்போது வரை மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் முதுகலை படிப்புக்கான க்யூட் நுழைவுத் தேர்வு இதுவரை கட்டாயம் ஆக்கப்படவில்லை. அதே நேரத்தில், மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வை அடிப்படையாகக் கொண்டே நடத்தப்பட்டு வருகிறது.

டெல்லி பல்கலைக்கழகம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், அனைத்து மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐஐடி லக்னோ, ஐஐடிடிஎம், டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இதில் பங்கேற்கின்றன. தமிழ்நாட்டில் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம், புதுச்சேரி பல்கலைக்கழகம், ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் (Rajiv Gandhi National Institute of Youth Development) ஆகியவை க்யூட் மதிப்பெண்களைக் கொண்ட மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

தேர்வு தேதி என்ன?

இந்த சூழலில், மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) மார்ச் 11 முதல் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இதற்கு விண்ணப்பிக்க இன்றே (பிப்.8) கடைசி ஆகும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த நாளை கடைசித் தேதி. அதேபோல, பிப்ரவரி 10 முதல் 12ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம்.  இவர்களுக்கான ஹால் டிக்கெட் மார்ச் முதல் வாரம் வெளியிடப்பட உள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் cuet.nta.nic.in என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்ய வேண்டும். 

* CUET registration link என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். அல்லது https://cuetpg.ntaonline.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.

* அதில், பெயர், இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை உள்ளிடவும். 

* முன்பதிவு செய்ததும் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாகின் செய்யவும். 

* விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். 

* விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, சமர்ப்பிக்கவும். 

கூடுதல் தகவல்களுக்கு: https://nta.ac.in, https://pgcuet.samarth.ac.in

தொடர்புகொள்ள: 011 4075 9000

இ- மெயில் முகவரி: cuet-pg@nta.ac.in

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
காலை உணவில் பல்லி... பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி - திட்டம் தொடங்கிய 2 நாட்களில் இப்படியா?
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
அனுபவம் மட்டும் இருக்கா? இனி ஐடிஐ சான்றிதழும் பெறலாம்! நாகப்பட்டினம் ஆட்சியர் கொடுத்த ஹேப்பி நியூஸ்!
மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!
மாணவர்களே ரெடி! ரூ. லட்சக்கணக்கில் கல்விக் கடன்... 25-ம் தேதி மாபெரும் முகாம்!
மாணவர்களே உஷார்: போதைப்பொருள் மூளையை அழிக்கும்; CBSE எச்சரிக்கை!
மாணவர்களே உஷார்: போதைப்பொருள் மூளையை அழிக்கும்; CBSE எச்சரிக்கை!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
வங்கிகள் தொடர்ந்து 5 நாட்கள் மூடப்படுமா? மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு இதோ
Chennai Flood Risk: வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
வெள்ள பாதிப்பு, தயாராகும் சென்னை - 219 இடங்கள்,1000 பம்புகள், ரூ.150 கோடியில் 160KM சாலை பணிகள்
CPM Shanmugam: ”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
”தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும், தவெக தோற்கடிக்கப்பட வேண்டும்” - சண்முகம் காட்டம்
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
டிராஃபிக் நெரிசலுக்கு குட்பை, 259 கி.மீ ரேஞ்ச், பட்ஜெட் விலையில் Nissan Pixo EV கார்!
New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?
New Movie Release: இந்த வீக் எண்டிற்கு குடும்பமாக தியேட்டருக்கு போய் எந்த படம் பார்க்கலாம்? 5 புதிய படங்கள் என்னென்ன?
Chennai Power Cut: சென்னைல வெள்ளிக்கிழமை (25.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
சென்னைல வெள்ளிக்கிழமை (25.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? தெரிஞ்சுக்கோங்க
TNHB வீடு வேண்டுமா.? உடனே பதிவு செய்யுங்க- இது தான் சான்ஸ்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
TNHB வீடு வேண்டுமா.? உடனே பதிவு செய்யுங்க- இது தான் சான்ஸ்- சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
TN By Election 2026: தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
தவெக பணம் கொடுக்கிறாங்க... விட்டுறாதீங்க- தேர்தல் ஆணையத்திற்கு பறந்த புகார்- இறங்கி அடிக்கும் அதிமுக
Embed widget