மேலும் அறிய

AICTE Course | பிராந்திய மொழிகளில் பொறியியல் படிப்பு: 21% இடங்கள் மட்டுமே நிரம்பின.. காத்திருந்த அதிர்ச்சி..

2021-22-ஆம் கல்வி ஆண்டில் பிராந்திய வழி பொறியியல் படிப்புகளுக்கான 1,230 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், 255 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

2021-22-ஆம் கல்வி ஆண்டில் பிராந்திய வழி பொறியியல் படிப்புகளுக்கான 1,230 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், 255 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. அதாவது 21 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் ஆங்கிலத்தில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், 2021- 22ஆம் கல்வி ஆண்டு முதல் பிராந்திய மொழிகளிலும் பொறியியல் கற்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, குஜராத்தி, வங்காளம் என 7 பிராந்திய மொழிகளில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் கடந்த ஆண்டு ஒப்புதல் வழங்கியது.

பொறியியல் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாகவும் அதில், 44 சதவீத மாணவர்கள் பிராந்திய மொழிகளில் படிக்க விரும்புவதாகத் தெரிவித்ததாகவும் அதையொட்டியே பிராந்திய மொழிகளில் பொறியியல் படிப்பு அறிமுகம் செய்யப்படுவதாகவும் ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்திருந்தார். 

அதையடுத்து நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் விண்ணப்பங்கள் அளித்த நிலையில், முதற்கட்டமாக 19 கல்லூரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதில் இந்தி மொழிக்கென 8 கல்லூரிகளுக்கும், மராத்திய மொழிக்கு 2 கல்லூரிகளுக்கும், தெலுங்கு, வங்காள, கன்னட மொழிகளுக்குத் தலா 1 கல்லூரி உள்ளிட்டவை ஒதுக்கப்பட்டன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஈரோடு செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், மின் மற்றும் மின்னணு பொறியியல் என 3 பிரிவுகளிலும், கோவை ரத்தினம் தொழில்நுட்பக் கல்லூரியில் கணினி அறிவியல் பாடப்பிரிவிலும் தமிழ் வழியில் கற்பிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், 2021-22ஆம் கல்வி ஆண்டில் பிராந்திய வழி பொறியியல் படிப்புகளுக்கான 1,230 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், 255 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. அதாவது 21 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்துத் தனியார் செய்தித் தளம் வெளியிட்டுள்ள தகவலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

''இதில், இந்தி மொழியில் 116 மாணவர்கள் பொறியியல் படிப்பைத் தேர்வு செய்துள்ளனர். மராத்தியில் 60 மாணவர்களும் தமிழில் 50 மாணவர்களும் வங்காள மொழியில் 16 மற்றும் தெலுங்கு மொழியில் 13 பேரும் பொறியியல் படிப்பைப் படிக்கின்றனர். எனினும் கன்னட மொழியில் ஒருவர்கூடப் பொறியியலைத் தேர்வு செய்யவில்லை. 

இதுகுறித்து ஏஐசிடிஇ உறுப்பினர் செயலர் ராஜீவ் குமார் கூறும்போது, ''பிராந்திய மொழிகளில் படிக்கப் பாடப் புத்தகங்கள் இருக்காது என்று மாணவர்கள் நினைப்பதால் மாணவர் சேர்க்கை குறைந்திருக்கலாம் என்று நம்புகிறேன். பொறியியலைப் பாடத்தை ஆங்கிலத்தைத் தவிர, பிற மொழிகளிலும் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும் எனில், பாடப்புத்தகங்கள் உள்ளது என்னும் நம்பிக்கையை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும். 

இதற்காக ஏஐசிடிஇ அனைத்து பிராந்திய மொழிகளிலும் புத்தகங்களைத் தயாரித்துள்ளது. அனைத்துத் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் உள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவசமாக அந்தப் புத்தகங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

எந்த ஒரு புதிய திட்டத்துக்கும் ஆரம்பத்தில் தயக்கம் இருக்கும். பிறகு மெல்ல மெல்ல வெற்றிகரமாக நடைபெறும்'' என்று ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 

ஏஐசிடிஇ தலைவர் அனில் சஹஸ்ரபுதே கூறும்போது, ''மாணவர் சேர்க்கை மெல்ல மெல்ல அதிகரிக்கும்'' என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உயர்கல்வி மாணவர்களா? உதவித்தொகை பெற சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
உயர்கல்வி மாணவர்களா? உதவித்தொகை பெற சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
"முதல் கையெழுத்தே எங்கள் வாழ்வாதாரமாக இருக்கட்டும்" - முதலமைச்சராகும் விஜய்க்கு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு உருக்கமான வேண்டுகோள்.
NEET UG 2026: முடிந்த நீட் தேர்வு; வினாத்தாள் எப்படி? எளிமையா, கடுமையா? ஓர் அலசல்
NEET UG 2026: முடிந்த நீட் தேர்வு; வினாத்தாள் எப்படி? எளிமையா, கடுமையா? ஓர் அலசல்
ICAI CA Exam: சிஏ தேர்வுகள் எப்போது? ஆடிட்டர் கனவில் இருப்போருக்கு இதோ முழு அட்டவணை
ICAI CA Exam: சிஏ தேர்வுகள் எப்போது? ஆடிட்டர் கனவில் இருப்போருக்கு இதோ முழு அட்டவணை
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பதவியை காப்பாற்றிக் கொள்ள போராடும் EPS? நெருக்கடியால் TVK-க்கு ஓகே சொல்வாரா? அதிமுக யாருக்கு?
பதவியை காப்பாற்றிக் கொள்ள போராடும் EPS? நெருக்கடியால் TVK-க்கு ஓகே சொல்வாரா? அதிமுக யாருக்கு?
CV Shanmugam : தவெகவிற்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு.? சி.வி.சண்முகம் தலைமையில் இரவில் நடந்த ரகசிய கூட்டத்தில் திடீர் ட்விஸ்ட்
தவெகவிற்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு.? சி.வி.சண்முகம் தலைமையில் இரவில் நடந்த ரகசிய கூட்டத்தில் திடீர் ட்விஸ்ட்
Top 10 News Headlines: ஆளுநரை சந்திக்கும் விஜய், மம்தா பானர்ஜி பிடிவாதம், பிரதமருக்கு ட்ரம்ப் பாராட்டு - 11 மணி செய்திகள்
ஆளுநரை சந்திக்கும் விஜய், மம்தா பானர்ஜி பிடிவாதம், பிரதமருக்கு ட்ரம்ப் பாராட்டு - 11 மணி செய்திகள்
TVK CPI Alliance: பரபரக்கும் அரசியல் களம்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணிக்கு அழைத்தது தவெக; CPI முடிவு என்ன.?
பரபரக்கும் அரசியல் களம்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணிக்கு அழைத்தது தவெக; CPI முடிவு என்ன.?
TVK - AIADMK: திமுகவுக்கு கட்டம் கட்ட முடிவு... தவெகவுடன் இணையும் அதிமுக.. மெகா ட்விஸ்ட்!
TVK - AIADMK: திமுகவுக்கு கட்டம் கட்ட முடிவு... தவெகவுடன் இணையும் அதிமுக.. மெகா ட்விஸ்ட்!
ADMK TVK ALLIANCE : Wanted-ஆக செல்லும் அதிமுக..! Waiting List-ல் போட்ட விஜய்- தமிழக அரசியலில் நடப்பது என்ன.?
Wanted-ஆக செல்லும் அதிமுக..! Waiting List-ல் போட்ட விஜய்- தமிழக அரசியலில் நடப்பது என்ன.?
KA Sengottaiyan: துணை முதல்வராகும் செங்கோட்டையன்.. விஜய் கொடுக்கப்போகும் பரிசு!
KA Sengottaiyan: துணை முதல்வராகும் செங்கோட்டையன்.. விஜய் கொடுக்கப்போகும் பரிசு!
TVK Vijay: திமுகவிடம் இருந்து 51 தொகுதிகளை பறித்த விஜய் - 61 தொகுதிகளில் 5000 வாக்குகளில் பறிபோன வெற்றி
TVK Vijay: திமுகவிடம் இருந்து 51 தொகுதிகளை பறித்த விஜய் - 61 தொகுதிகளில் 5000 வாக்குகளில் பறிபோன வெற்றி
Embed widget